The Source (LA SOURCE DES FEMMES) என்ற பிரஞ்ச், அரபி மொழிப்படம். இது வட ஆப்பரிக்கா மத்தியகிழக்க நாடுகளின் எல்லையில் உள்ள ஒரு இஸ்லாமிய மலை கிராமம் பற்றிய படம். நாட்டுப்புற மலைவாழ் இஸ்லாமிய வாழ்க்கையை அருமையாக காட்சிப்படுத்திய படம். தண்ணீர் எடுக்க மலை உச்சிக்கு செல்லும் அக்கிராம பெண்கள், வரும் வழியிலேயே பல இடர்கள், அபார்ஷன்களுக்கு ஆளாகும் கொடுமைக்கு முடிவு கட்ட, ஆண்களை தண்ணீர் எடுக்க வைக்க ஒரு நூதனப் போராட்டத்தில் இறங்குவார்கள். அதற்கு பெயர் காதல்-போராட்டம். அதாவது பெண்கள் தங்கள் கணவனுடன் படுப்பதில்லை, ஒத்துழைப்பதில்லை என்பதே. அது உருவாக்கும் மதச்சிக்கல் எனத் துவங்கி, அரசு, அதன் புறக்கணிப்பு, மதங்களின் ஆண்மேலாண்மை, அடக்குமுறை என விரிகிறது திரைப்படம். முழுக்க பெண்ணோக்கு நிலையில் (பிமேல் கேஸில்) எடுக்கப்பட்ட படம். இடையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊருக்குள் நழைந்து புர்கா போடச் சொல்வது என பல நுட்பமான இன்றைய காலத்தை பிரதிபலிக்கும் திரைப்படம். அவர்களை அவனது தாயே விரட்டுகிறார். இஸ்லாமிய புர்கா வழக்கம் எப்படி பெண் அடிமைகளை வேறுபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு உயர்வர்க்க நடைமுறை என்பதை சொல்கிறார். வழக்கமான இஸ்லாம் குறித்து உள்ள செல்வந்த பிம்பங்களை உடைக்கும் வறுமையில் வாடும் குடும்பங்கள் பற்றிய படம். கடைசியில் பெண்கள் தங்கள் காதல்-காம ஒத்துழையாமை வழியாக ஆண்களை வென்று ஊருக்குள் தண்ணீர் கொண்டு வந்துவிடுகிறார்கள். (தமிழ் டபப்பிங்கி் தமிழ் ராக்கர்ஸில் உள்ளது ஆர்வம் உள்ளவர்க்ள தரவிறக்கி பார்க்கலாம். தமிழ் வசகங்களில் சமசரங்கள் உள்ளதை ஆங்கில சப்டைட்டில் வழியாக நிறைவு செய்துகொள்ளலாம்.)
மதங்கள் என்பதை நாம் முதலாளிய காலகட்டத்திற்கு முந்தைய கற்பனையில் பார்க்க முடியாது. பார்க்ககூடாது. மதம் முழுக்க முழுக்க முதலாளிய உற்பத்திமுறையில் நவீன போதைப்பொருளாக மாறியுள்ளது என்பதையும், இனி பெண்கள்தான் மதங்களையும், இந்த அதிகாரத்தையும் எதிர்த்து போரிடுவதற்கான புரட்சிகர சக்திகளாக மாறியுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் மதவழிபாட்டில் நிறைவதற்கும், ஆண்கள் சரக்கு (டாஸ்மாக்) வழிபாட்டில் நிறைவதற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆய்வது அவசியம்.
Thanks Jamalan Tamil
No comments:
Post a Comment