Search This Blog

Saturday, April 29, 2023

வாழ்வின் வடிவமும் அரசியலும்-அகம்பென்

வாழ்வின் வடிவம் குறித்து கிரேக்கத்தில் இரு சொற்களில் விளக்கப்படுகிறது. ஒன்று எல்லா உயிரிகளின் நடைமுறை வாழ்தலைக் குறிப்பது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட உயிரி அல்லது குழுவைச் சார்ந்தவர்களின் வாழ்தலைக் குறிப்பது. வாழ்வின் வடிவம் என அகம்பென் குறிப்பது வாழ்விலிருந்து எப்போதும் அதன் வடிவத்தைப் பிரிக்கவே முடியாது என்ற பொருளில் ஆகும்.

வாழ்வின் சாத்தியங்கள் என்பவை வாழ்தலுக்கான வழிமுறைகள், செயல்பாடுகள், நடைமுறைகள் போன்றவை ஆகும். எந்த ஒரு மனித வாழ்வும் உயிரியல் வழிமுறைகளின் படி இருக்கவேண்டும் என்றோ ஏதோ ஒரு தேவையை முன்வைத்தோ நடத்தப்படவேண்டும் என்பதில்லை. வாழ்தலின் சாத்தியங்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம். அதனால் வாழ்தலைப் பணயம் வைத்துத்தான் எந்த ஒரு மனித வாழ்வும் வாழ்தலுக்கான சாத்தியத்தைத் தேடுகிறது. மனித வாழ்வில் வெற்றியோ தோல்வியோ சாதனையோ வீழ்ச்சியோ மகிழ்ச்சி எப்போதும் பணயம் வைக்கப்படுகிறது. அதுதான் வாழ்வின் வடிவத்தை அரசியல் வடிவமாக மாற்றுகிறது.
அரசியல் அதிகாரம் வாழ்வின் வடிவத்தை உடுப்பற்ற வடிவமாக மாற்றி அமைக்கிறது. வாழ்தல் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவது எங்கே என்றால் அது மரண அச்சுறுத்தலைத் தரும்போது மட்டுமே ஆகும். ஆனால் இறையாண்மை அதிகாரத்தின் முன் வாழ்தல் எப்போதும் மரண அச்சுறுத்தலைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த இறையாண்மை அதிகாரத்திடம் தங்கள் உயிரையும் மரணத்தையும் பணயம் வைத்திருக்கின்றன. அதனால்தான் மனித வாழ்வை உடுப்பற்ற வாழ்வாக இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. மார்க்ஸியம் உருவாக்கிய மனிதன், குடிமகன் என்ற பிளவு இப்போது உடுப்பற்ற வாழ்வு, பல்வேறு வடிவங்களாலான வாழ்வு என்று இடமாற்றப்பட்டுவிட்டது.
பல்வேறு வடிவங்களில் வாக்காளர், தொழிலாளர், பத்திரிகையாளர், மாணவர், எய்ட்ஸ் நோயாளி, மூன்றாம் பாலினத்தவர், மூத்தவர், பெற்றோர், பெண் என்று அது பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவங்கள் அனைத்துமே உடுப்பற்ற வாழ்வைக் கொண்டவை. அந்த வடிவங்களைக் கொண்ட மனிதர்களை வெறும் உடல்களாக மட்டுமே இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. இப்படிப் பிரிப்பதால்தான் மனித வாழ்வின் மகிழ்வும் பிரிக்கப்படுகிறது என்பதை அகம்பென் வலியுறுத்துகிறார்.
அகம்பென்

Thanks Mubeen Sadhika 

ஜியோர்ஜியோ அகம்பென் இத்தாலிய தத்துவம் மற்றும் தீவிர அரசியல் கோட்பாட்டின் முன்னணி நபர்களில் ஒருவர், சமீபத்திய ஆண்டுகளில், ஆங்கிலோ-அமெரிக்க அறிவுசார் உலகில் பல துறைகளில் அவரது பணி சமகால புலமைப்பரிசில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1942 ஆம் ஆண்டில் ரோமில் பிறந்த அகம்பென், சிமோன் வௌயிலின் அரசியல் சிந்தனை குறித்த முனைவர் ஆய்வறிக்கையுடன் சட்டம் மற்றும் தத்துவத்தில் படிப்பை முடித்தார், மேலும் ஹெகல் மற்றும் ஹெராக்ளிட்டஸைப் பற்றிய மார்ட்டின் ஹைடெக்கரின் கருத்தரங்குகளில் ஒரு முதுகலை அறிஞராக பங்கேற்றார். மசெராட்டா, வெரோனா பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்த அவர், கோலேஜ் இன்டர்நேஷனல் டி பாரிஸில் நிகழ்ச்சிகளின் இயக்குநராக இருந்தார்  . அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றிய அவர், நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பள்ளியில் புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார் .செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து அமெரிக்காவிற்குள் நுழையுமாறு அமெரிக்க குடிவரவுத் துறை கோரிய “உயிர் அரசியல் பச்சை குத்தலுக்கு” ​​அவர் சமர்ப்பிக்க மறுத்தபோது அவர் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Friday, April 28, 2023

வரலாற்றுக்கு முந்திய கால திருகோணமலை.


இலங்கையில் மனித நாகரிகத்தின் தொடக்க காலம் முதல் மனிதக் குடியிருப்புக்களின் தொடர்ச்சியும் நீட்சியும் அறியப் பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு லட்சத்தி இருபத்தியையாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்."இந்து சமுத்திரத்தைக் கடந்து வந்து பிளைத்தோசியன் மனித ஊழிக் காலத்தில் ஹோமோசேப்பியன் எனும் நவீன மனிதன் நாட்டின் நாலா பாகங்களிலும் பரவி வாழ்ந்து வந்துள்ளான் .இலங்கையில் மானிட வாழ்க்கை வரலாறு ,தொழிநுட்பம் ,வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக வகுக்கப் படுகிறது.
1.வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
2.முன் வரலாற்றுக் காலம்
3.வரலாற்றுக் காலம்"
வரலாற்றுக்கு முந்திய காலம் என்றால் என்ன என்பதற்கு தொல்லியலாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
எழுத்து மூலாதாரங்கள் இல்லாமல் ஆவணப் படுத்தப் பட்ட மூலாதாரங்கள் அண்றி தொல்பொருட் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை அறிய முற்பட்ட காலம் என வரையறை செய்யப்படுகிறது.
இந்தக் கால வரையறை கிட்டத்தட்ட கி.மு.125000 முதல் கி.மு1800 என கணிப்பிடப் படுகிறது.
இந்த வரையறைகளையும் நம் மூதாதையர்கள் பற்றிய தேடல்களையும் கவனத்தில் கொள்கின்ற வேளையில் பேராசிரியர் இந்திரபாலா அவர்கள் இலங்கையில் தமிழ்ர் எனும் தொல்லியல் ஆய்வு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"இன்று நாம் இந்தியத் துணைக் கண்டம் எந்று வர்ணிக்கும் நிலப் பகுதியில் கடந்த 60,000 ஆண்டு காலமாக மனித நடமாட்டம் காணப்பட்டது எனலாம்.இம் மனிதர் இன்றய குடிகளின் முன்னோர்கள்.இக் காலப் பகுதிதின் பெரும் பாகத்தில்,அதாவது 85%க்கு கூடுதலான பாகத்தில் , இலங்கை என்று நாம் வர்ணிக்கும் தீவு மேற்கூறிய நிலப்பகுதியுடன் இணைந்து காண்ப்பட்டது.இக் காரணத்தினால் ,இக் காலத்துக் கண்ணோட்டத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மக்கள் வருகையை அணுகுதல் தவறாகும்.இன்று இலங்கை வேறு நாடு.இந்தியா வேறு நாடு.அதனால் ,இன்று நடைபெறும் மனிதர் புலப்பெயற்சியை எடுத்துக் கூறும்போது இந்தியாவிலிருந்து மக்கள் இலஙைக்கு சென்றனர் என்றோ இலங்கையிலிருந்து சென்றனர் என்றோ கூறுவது போல்,இலங்கை மற்றும் இந்தியா என வேறான நாடுகள் இல்லாத காலத்தைப் பொறுத்து இவ்வாறு கூற முடியாது.இலங்கைத் தீவு இந்திய நிலப் பகுதியிலிருந்து இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்புதான் இறுதியாகப் பிரிந்து வேறு நிலப் பகுதியாகியது."
இந்தப் பின்னணியில் சிலப்பதிகாரம் சொல்கின்ற இந்த வரிகள் முக்கியமாகின்றன
” பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென் திசையாண்ட தென்னவன் வாழி “
இலங்கையில் மிகப் பழமையான மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என வரலாற்றாய்வாளர்கள் அறுபத்தியெட்டு இடங்களை அடையாளம் கண்டுள்ளனர் அதில் திருகோணமலையும் இடம் பெற்றுள்ளமை இங்கு நாம் கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய விடயமாகும்.
ஆதி மனிதக் குடியிருப்புக்களின் முக்கிய தடயமாக அவர்களது அடக்க முறை கவனத்தில் கொள்ளப் படுகிறது.அந்த வகையில் திருகோணமலை நிலாவெளியில் கண்டெடுக்கப் பட்ட தாழி முக்கிய தொல் சான்றாக அமைவதை நாம் இங்கு கருத்திட முடியும்.

Balasingam Sugumar