உண்மையான உலக நாயக நடிகனாய் உயர்ந்த ஆளுமை. பொலிவூட் நடிகரான இர்பான் கான், 1988ஆம் ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன் குணச்சித்திர வேடம் என்று அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்திய சினிமா பிரித்தானிய சினிமா,அமரிக்க சினிமா என தன் நடிப்பால் உலகம் முழுவதும் அறியப் பட்ட இர்பான்.
சிலம் டோக் மில்லியனர்,லைவ் ஒவ் பைய்,த லஞ் பொக்ஸ், த அமேசின் ஸ்பைடர் மான்,ஜுரசிக் வேல்ட் என புகழ் பெற்ற படங்களில் நடித்து உலக திரைப்பட ரசிகர்களால் பாராட்டுப் பெற்ற இந்திய நடிகன் .
இயல்பான தன் நடிப்பால் நம் மனங்களை கவர்ந்து தன் உடல் மொழியால் அசையும் படிமங்களால் ஒன்றித்த நடிப்பு .
டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற அனுபவ முத்திரையும் முதிர்ந்த நடிப்பு மொழியும் இர்பானுக்கு கை வந்த கலையாய் எல்லாத் திரைப்படங்களிலும் வெளிப் பட்டு நின்றமை இங்கு மனங் கொள்ளத்தக்கது.
உன் நடிப்பால் உலகை கொள்ளை கொண்டாய் என் நடிக தோழனே போய் வா
No comments:
Post a Comment