தமிழ் திரை இசைக்கு இனிய நாள்...
*********************************************************
17, 695 பாடல்கள் பாடி பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
1952ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பெற்ற தாய்’ திரைப்படத்தில் ‘ஏதுக்கு அழைத்தாய்'… என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து முதன்முதலாக பாடினார். பிறகு சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சினிமா பாடல் மட்டுமல்லாது ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.
1960ல் தொடங்கி 2016 வரை, தனியாக (சோலோ) 17 ஆயிரத்து 965 பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி என்ற சாதனைக்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்... இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பு சுசீலா அவர்களிடம் வழங்கியுள்ளது...
என்றும் தொடரட்டும் தமிழ் திரை இசையின் வரலாற்று சாதனைப் பயணம்...
17, 695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்த பி சுசீலா அவர்களின்
'என்றும் இனிக்கும் முதல் பாடல்'...
****************************************************************************************************
"ஏதுக்கு அழைத்தாய் ஏதுக்கு"
படம் : பெற்ற தாய் (1953)
பாடியவர் : ஏ எம் ராஜா & பி சுசீலா
இசை : பெண்டியாலா
பாடல் : எம் எஸ் சுப்ரமணியம்
நடிப்பு : MN நம்பியார் & TD வசந்தா
No comments:
Post a Comment