Search This Blog

Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Monday, August 23, 2021

குறுங்கதை-மேற்கோள்

 

என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு போவான். குடித்து விட்டு வந்து தூங்குவான். வழக்கம் போல் காலையில் அலுவலகம் கிளம்பிவிடுவான். தினம் வழமையாக நடக்கும் இது அவனுக்குச் சலிப்பைத் தரவில்லையா என்று ஒரு நாள் கேட்டேன். ஆம் என்றான். இனிமேல் சண்டை போட்டாலும் வேறு ஏதாவது புதுமையாகச் செய்யலாம் என சொல்லிவிட்டுப் போனான். அலுவலகம் போய் ஒரு தத்துவவாதியின் கீழ்க்கண்ட மேற்கோளை அனுப்பினான்:
“இருவருக்கு இடையில் இணக்கம் என்பது இணக்கமின்மைக்கான அச்சத்திலிருந்து வருவது. இதில் இணக்கம் என்பதில் அன்பு, பாசம் போன்ற பெயரிடப்படாத பல உணர்வுகளைப் பொதித்து வைப்பதன் மூலம் இணக்கமின்மை வெடித்துவிடுகிறது. அன்பின்மை, வெறுப்பு, துயரம் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் குடியேறிவிடுகின்றன. இணக்கமும் இணக்கமின்மையும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. இதுதான் சலிப்புக்கு அடிப்படையாகிறது. இணக்கமும் சலிப்பைத் தருகிறது. இணக்கமின்மையும் அவ்வாறே. இதில் சலிப்பின்றி இருப்பது குறித்தத் தேடல் மறைகையில் வாழ்வின் சுமை கூடிவிடுகிறது. அதை அடுத்தவர் தலைமேல் போட்டுவிடுவதே குறிக்கோளாக இருப்பதால் போர் மூளுகிறது. இதில் சமாதானமும் சலிப்பின் ஒரு வடிவம்தான். போரில் இருக்கும் சுவை சமாதானத்தில் இருப்பதில்லை. போர் உருவாகிவிடும் அல்லது போரை உருவாக்கவேண்டும் என்பதில் உள்ளார்ந்து ஏற்படும் கிளர்ச்சிக்கு நிகர் ஏதுமிருப்பதில்லை. அதை அனுபவிக்கத்தான் சலிப்பை அதிகப்படுத்த முனைகிறோம். போர் அபின் போன்றது. அந்த மயக்கம் தரும் போதைக்காக எவ்வளவு சலிப்பையும் தாங்குகிறோம். பால், சாதி, மத, இன வேறுபாடு எல்லாம் முக்கியமல்ல. தொடர்ந்து சலிப்படைந்து போரிடுகிறோம். போரைக் கைவிட்டு அங்குக் குடியேறிவிடும் சலிப்பை வெளியேற்ற எந்த ஆயுதமும் இல்லை. போரும் இன்றி சலிப்பும் இன்றி இருப்பதுதான் முக்தி நிலை. அது ஒருவருக்கு வாழ்நாளில் எதற்குத் தேவை? எனவே போரிடலாம் சலிப்படைய. சலிப்படையலாம் மீண்டும் போரைத் தொடங்க…”
இப்படி தினம் ஒன்றைப் புதுமையாகச் செய்து நாம் இணக்கமும் இணக்கமின்மையும் கொள்ளலாம் என்றும் ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். இந்தப் புதுமைக்கு சண்டையே பரவாயில்லை என்று தோன்றியது.

Mubeen Sadhika

Tuesday, January 12, 2021

அப்பா......*மனச தொட்ட கதை*


🙏🙏🙏🙏🙏🙏
கணேசன் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.
பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.
மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் கணேசன்.
வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.
அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.
அந்த சமயத்தில் ஒருவர் கணேசனின் பக்கத்தில்
வந்து அமர்ந்தார்.
"மிஸ்டர் கணேசன்!
நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).
ஆச்சரியப்பட்டார் கணேசன்.
யோசித்தார்.
பிறகு பேசினார்.
""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""
என்று கேட்டார் கணேசன்..
""மிஸ்டர் கணேசன்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.
''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் கணேசன்..
‘அப்படியா!' என்றார் கடவுள்.
''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் கணேசன்.
''அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''
என்று கேட்டார் கடவுள்.
‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் கணேசன்..
''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்
''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.
நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.
ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''
என்று கேட்டார் கணேசன்.
அமைதியானார் கடவுள்.
மீண்டும் கணேசன் பேசினார்.
''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன்,
இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,
பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.
இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.
ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் கணேசன்.
ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.
''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.
அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.
அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.
அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.
அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.
வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் கணேசன்..
''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.
சிரித்தார் கணேசன்.
‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.
எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் கணேசன்..
கடவுள் சிரித்தார்.
‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் கணேசன்.
':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.
‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது கணேசனின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.
‘மிஸ்டர் கணேசன் ! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.
கணேசன் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.
''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.
மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் கணேசன்.
அப்பா பேசினார்.
''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.
அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.
‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் கணேசன்.
‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.
கணேசன் அழத்தொடங்கினார்.
‘என்ன மிஸ்டர் கணேசன்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.
‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.
நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....
அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.
கணேசன் மீண்டும் பேசினார்.
‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் கணேசன்..
( கணேசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
ஆகவே அப்பா.............. இருந்தால்.................... மதியுங்கள்....................
அப்பா........................ இல்லையேல்....... ..........
நினையுங்கள்..... ............

Sunday, January 10, 2021

புனித நீரில் கழுவினாலும் பிறவிக்குணம் மாறுவதில்லை !

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்

சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயைத் தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்" என்றனர்.
ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம், இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதைச் சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயைப் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒவ்வொரு துண்டைக் கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !
தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!
"பார்த்தீர்களா....? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே, நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்க்குணங்களை மாற்றிக் கொள்ளாமல்எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்தப் பயனும் வந்து விடப் போவதில்லை....??
மாற்றங்கள் மனங்களிலும், குணங்களிலும் வந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.." என்றார் அந்த ஞானி....!!
Thanks

Abdul Majeed
 

Friday, May 1, 2020

“த பிளேக்” அல்பேர்ட் காமுஸ் (சிறு மாற்றங்களுடன்)

ஓரன் என்கின்ற கடலோர நகரம் ஒன்றில் இடம்பெறும் கதை இது.
ஒரு ஏப்ரல் நாளில் ஓரன் நகரமெங்கும் திடீரென்று ஆயிரக்கணக்கான எலிகள் செத்துவிழத்தொடங்குகின்றன. முதலில் ஒருவருடைய வீட்டு வாசலில் எலி ஒன்று செத்துக்கிடந்தது. பின்னர் தோட்டத்தில் ஐந்தாறு எலிகள் செத்துக்கிடந்தன. குப்பைத்தொட்டியருகே ஐம்பது எலிகள். ஒரு தானியக் கிடங்குக்குப் பின்னே நூற்றுக்கணக்கான எலிகள். இப்படித் தொடர்ச்சியாக எலிகள் செத்துவிழ ஆரம்பிக்கின்றன.
எலிகளின் மரணம் ஒரு நல்ல சமிக்ஞை இல்லை என்று அங்கிருக்கும் வைத்தியர் சொல்கிறார். எவருமே அதனைக் கணக்கிலெடுப்பதாக இல்லை. எலிகளின் மரணம் ஒரு தற்செயல் சம்பவம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உள்ளூர்ப்பத்திரிகை ஒன்று அரபுகள் வாழும் தெருவில் சுகாதாரம் சரியாகப்பேணப்படவில்லை என்று ஒரு கட்டுரை வரைவதற்கு வைத்தியரின் உதவியை நாடுகிறது. வைத்தியரோ, எழுதப்படவேண்டியது பொதுச்சுகாதாரத்தின் மோசமான நிலைமையைப்பற்றித்தான் என்று பத்திரிகையாளருக்குக் கூறுகிறார். பத்திரிகையாளர் அதனைக் கருத்திலெடுக்கவில்லை.

எலிகள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாகச் செத்து விழுந்துகொண்டிருந்தன. அவை செல்வந்த வீடுகளிலும் உயர்ரக உணவகங்களிலும் இப்போது சாக ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் பின்னர் அதிகாரிகளும் இதுபற்றிக் கரிசனை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். எலிகளுக்குக் கொள்ளைநோய் பரவிவிட்டது, கவனமாக இருக்கவேண்டும் என்று வைத்தியர் சொல்கிறார். மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்படுகிறது. உடனே உள்ளூர்ப்பத்திரிகையும் பரபரப்பாகச் செய்தி ஒன்றைப்போடுகிறது. அதைத்தொடர்ந்து பரபரப்பு சிறு பதட்டமாக மாறுகிறது. நகரசபை தினமும் செத்த எலிகளை அள்ளி கூட்டம் கூட்டமாக எரிக்க ஆரம்பிக்கிறது. சில நாள்களின் பின்னர் எலிகளின் மரணம் அருகிவிடவே மக்கள் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததையே மறந்துபோய் அவர்களுடைய வழமையான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். பகல் முழுதும் வேலை. திரைப்படங்கள். உணவு. காமம். தூக்கம்.
ஒருநாள் அந்த நகரத்தில் ஒரு மனிதர் இனம் தெரியாத நோயால் இறக்கிறார்.
அப்புறம் இன்னொரு மனிதர். பின்னர் இன்னொருவர். எலிகளுக்கு ஏற்பட்ட கொள்ளைநோய் இப்போது மனிதர்களுக்குப் பரவிவிட்டது என்று வைத்தியர் அதிகாரிகளுக்குச் சொல்கிறார்கள். ஆனால் வைத்தியர் பேச்சை மறுத்து பலரும் பலவிதமான நோய்களையும் மருத்துவத்தையும் அதற்குக் குறிப்பிட்டார்கள். அதிகாரிகள் மாறி மாறிக் காரணங்களைக்கூறிப் பொறுப்புகளைத் தட்டிக்கழித்து வைத்தியரின் எச்சரிக்கையைப் புறக்கணிக்கிறார்கள். நாளாக நாளாக மனிதர்கள் நூற்றுக்கணக்கில், பின்னர் ஆயிரக்கணக்கில் செத்துவிழ ஆரம்பிக்கிறார்கள். எலிகளின் மரணத்தின்போதுகூட பரபரப்புச் செய்தி போட்ட உள்ளூர்ப்பத்திரிகை இப்போது அசமந்தப்போக்கையே கடைப்பிடித்தது. இதையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வைத்தியருக்கு ஆச்சரியம் ஆச்சரியமாக வந்தது. கொள்ளைநோய் ஒன்றும் மனிதக்குலத்துக்குப் புதிதல்லவே. வரலாற்றில் இதற்கு முதலும் அது பலதடவை வந்து பல சமூகங்களைக் காவு கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் மனிதர்கள் எப்படி வரலாற்றை மிக இலகுவாக மறந்துபோகிறார்கள் என்று அவர் ஆச்சரியப்படுகிறார். ஒவ்வொருதடவையும் மனிதர்கள் முன்னர் ஏற்படட கொள்ளைநோய்களை மறந்து அவற்றைப் புதிதாக எதிர்கொள்கிறார்கள் என்று அவர் நினைத்துக்கொள்கிறார்.
மரணங்கள் தொடர்ச்சியாக நிகழ ஆரம்பிக்கின்றன. ஆனாலும் பலர் இதுபற்றி தனித்தனி நிலைப்பாடுகளிலேயே இருந்தார்கள். இழவு விழுந்த வீடுகளில் இந்த சோகம் தமக்கானது மாத்திரமே என்று நினைந்து அழுதார்கள். இழவு விழாத வீடுகளில் அந்த நிலைமை தமக்கு வராது என்று நம்பினார்கள்.
ஒரு அவலத்தில் இரண்டுவகை உண்டு. ஒன்று தனிமனித அவலம். அடுத்தது கூட்டு அவலம். ஒரு கொள்ளை நோயை சமூகம் ஒருவித வேடிக்கை மனநிலையில், விடுப்பு மனநிலையில், இன்னமும் சொல்லப்போனால், சிறு பரவச மனநிலையிலேயே அணுகுகிறது. நூறு மனிதர்களின் மரணத்தைவிட ஆயிரம் மனிதர்களின் மரணம், அது துக்கச்செய்தியே ஆனாலும் சற்று மீதமான பரவசத்தையே மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. மேலதிக மரணங்கள் அவை பற்றி உரத்துப் பேசுவதற்கு ஏதுவாகிறது. இதனால் பலர் பயனடைகிறார்கள். ஆருமே அறியாத ஆழ்மனதில் அந்த எண்ணிக்கை இரண்டாயிரமானால் என்ன என்ற எண்ணம் வந்துபோகிறது. தினமும் இழவுச்செய்திகளை எதிர்பார்த்து பத்திரிகைகளை வாசிக்கும் மனநிலை ஏற்படுகிறது. மனித மனத்தின் குரூர குணம் இது. ஆனால் மரணம் விழுந்த வீட்டின் உறவுகளுக்கு அந்த மனநிலை இருக்காது. அது ஒரு இரத்த உறவை இழந்த சோகம். அதன் வலி அலாதியானது. வெறுமனே துக்கச்செய்தியைப் பகிர்ந்து சில கருத்துகளை உதிர்த்துவிட்டு அடுத்தவேளை சோலியைப் பார்க்கச்செல்வதற்கு அந்த மனிதர்களால் முடியாது. பொதுவாக இப்படியான சந்தர்ப்பங்களில் தனிமனித அவலங்களை எதிர்கொள்பவர்கள் சமூகத்தினின்றும் தள்ளியே நிற்பார்கள். வலி அவர்களுக்கானது, தம் வலியை சமூகம் உணர்வதேயில்லை என்பது அவர்கள் எண்ணமாகவிருக்கும். பல மரண வீடுகளின் ஒப்பாரிகளில் இறந்தவர்களின் கணவனோ, மனைவியோ, தாயோ, தந்தையோ அதிகமாகப் பங்கெடுப்பதில்லை. சிறிது அழுவார்கள். பின் ஒதுங்கிப்போவார்கள். தனித்திருந்து வலியை உணருதல் என்பது ஒருவித போதை என்றுகூடச் சொல்லலாம். வலிகள் தமக்கானவை மாத்திரம் என்று அவர்கள் நினைத்துக்கொள்வார்கள். இப்போது இந்த ஓரன் நகரம் முழுதும் கொள்ளை நோய் பரவி எல்லா வீடுகளில் மரணம் பரவிவிட்டது. நோய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கைக்கு அருகில் வந்துவிட்டது. எல்லோருமே மரணத்தை எதிர்கொள்பவர்கள் ஆகிவிட்டனர். எல்லோருக்கும் சமூகத்தின் கூட்டு வலியைவிட தத்தமது வலி அதிகமாகவே தெரிந்தது. அதனால் எல்லோரும் மேலும் மேலும் தனித்துப்போக ஆரம்பித்தார்கள்.
கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றப் பாதிரியார்கள் தேவனைப் பிரார்த்திக்கிறார்கள். தம் பாவங்களுக்காகக் கடவுள் கொடுக்கும் தண்டனை இது என்கிறார்கள். நோயை இந்தளவுக்கு வளரவிட்டது யாருடைய தவறு என்று அதிகாரிகள் தமக்குள் சண்டை பிடித்தார்கள். கொள்ளை நோய் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு ஊரெல்லாம் ஒட்டப்பட்டன. ஆனாலும் அவை பெரிதளவில் வெளியே தெரியாவண்ணம் மூலைகளிலும் சனநடமாட்டம் இல்லாதவிடங்களிலுமே ஒட்டப்பட்டன. தலைநகரிலிருந்து நோய்த்தடுப்பு மருந்து வந்தாலும் அது சொற்பமானவரைக் குணப்படுத்தவே உதவியது. ஊரைவிட்டு பலர் தப்பியோட ஆரம்பித்தார்கள். ஆனால் யாருமே வெளியேறக்கூடாது என்று தடை போடப்பட்டது. இப்போது மனிதர்கள் சக மனிதர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள். யாரும் யாரோடும் பேசுவதேயில்லை. அவர்களுக்குத் தாம் பிறந்து வளர்ந்த ஊரே ஒரு அந்நியமான குரூரமான ஊராகத் தென்பட ஆரம்பித்தது. தடைக்கு முன்னதான சுதந்திரத்தின் சுவை இப்போதுதான் மனிதர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. ஆச்சரியமாக அந்த ஊரிலிருந்த குற்றவாளிக்கு இவையெல்லாமே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை அவனைக் குற்றவாளியாகப் பார்த்தவர்கள், தேடியவர்கள் எல்லோரும் அவனை இப்போது கணக்கிலேயே எடுப்பதில்லை. இப்போது அனைவருமே அவனைப்போல சிறைபிடிக்கப்பட்ட மன நிலையிலேயே இருக்கிறார்கள். அவன் இப்போது ஊரெல்லாம் சுதந்திரமாகத் திரிய முடிந்தது. தவிர மனிதர்கள் அவனை நாடி வரவும் ஆரம்பித்தார்கள். ஊரைவிட்டு மனிதர்களைக் கடத்தி வெளியே கொண்டுபோகும் தொழிலை அவன் ஆரம்பித்திருந்தான். அந்தத் தொழிலில் பெருத்த வருமானம் கிடைத்தது. நிறைந்த செல்வமும் சமூக அங்கீகாரமும் அந்தக் குற்றவாளிக்குக் கிடைக்கவும் அவன் தன் வாழ்வில் முதன்முதலாக தன் தனிமையை மறந்து மகிழ்ச்சியோடு வாழ ஆரம்பித்தான்.
நகரத்தில் பல மனிதர்கள் இன்னமும் கொள்ளைநோய்ச் சூழலை ஏற்றுக்கொள்ளாமலேயே இருந்தார்கள். தம் நகரத்தில் கொள்ளைநோய் பரவ சந்தர்ப்பமே இல்லை என்றார்கள். அதனால் அவர்கள் தடுப்பு வேலைகளிலும் பங்கெடுக்காமல் இருந்தார்கள். இதனாலேயே கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவது மேலும் கடினமான ஒன்றாக மாற ஆரம்பித்தது. எல்லோரும் நோய்க்கான பொறுப்பை யாரோ ஒருவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தார்கள். அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அல்லது சக குடிவாசிகள் அதனைச் செய்யவேண்டும் என்று நினைத்தார்கள். இது தம்முடைய பிரச்சனை கிடையாது என்று காலத்தைக் கடத்தினார்கள்.
ஏழெட்டு மாதங்கள் கடந்தன. வெளியுலக தொடர்பில்லை. வெளியே போகவும் முடியாது. வெளியிலிருந்து வரத்தும் இல்லை. மரணங்களும் நின்றபாடில்லை. சமூகத்தின் எல்லா நிலைகளுக்கும் நோய் பரவியது. எல்லோரும் இறக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதிகாரிகள் இன்னமுமே தமக்குள் வாக்குவாதம் செய்தபடியே இருந்தார்கள். தினமும் மரண எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் எண்ணிக்கை நூற்றைம்பதாக இருந்து மறுநாள் அது நூற்றிமுப்பதாக அமைந்தால் கொள்ளைநோய் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகப் பிரசாரம் பண்ணப்பட்டது. அடுத்தநாள் எண்ணிக்கை இருநூறாக அதிகரித்தால் அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டது. ஆனாலும் மரணங்கள் தொடர்ந்தபடியே இருந்தன. தனித்தனியாக மரணவீடுகள் செய்யமுடியாமல் ஈற்றில் கூட்டம் கூட்டமாக உடல்களைப் புதைக்க ஆரம்பித்தார்கள். அஞ்சலிகள் எல்லாம் அருகிப்போயின. ஒரு கட்டத்தில் புதைக்க இடமில்லாமல் உடல்களை எரிக்க ஆரம்பித்தார்கள். இதில் சமூக உயர்வு தாழ்வு நிலைகளெல்லாம் அடிபட்டுப்போயின.
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருந்த மனிதர்களுக்குப் பிரக்ஞை வந்தது. இது தத்தமது தனிமனித அவலமில்லை. இது ஒரு சமூக அவலம். இந்த வலி அனைவருக்கும் பொதுவானது.இதனை நிறுத்தவேண்டுமானால் நாமெல்லாம் கூட்டாக இயங்கவேண்டும். நாம் அனைவரும் இணைந்தே இந்தக் கொள்ளைநோயை ஒழிக்கவேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். கொள்ளை நோய்த்தடுப்புக்கான காரியங்களை ஒன்றிணைந்து திட்டமிட்டுச் செயற்படுத்த ஆரம்பிக்கிறார்கள். தடுப்பு நோய் மருந்தை உள்ளூரிலேயே கண்டுபிடிக்க முயல்கிறார்கள். பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்த ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள்.
ஒரு சிறுவனின் மரணம் நிகழ்கிறது. அப்போது அந்த வைத்தியர் பாதிரியாரை நோக்கி ‘இந்தச் சிறுவன் என்ன பாவத்தைச் செய்தான்? இவன் ஏன் சாகவேண்டும்?’ என்று கத்துகிறார். பாதிரியாரும் இதனால் அதிர்வடைந்து தன் போதனையைச் சற்று மாற்றுகிறார். மனிதர்கள் ஒன்று கடவுளை முற்றாக நம்பி அவரிடம் தம்மை அவனிடம் ஒப்படைக்கவேண்டும். அல்லது கடவுளே இல்லை என்று முற்றுமுழுதாக நம்புதல்வேண்டும். இரண்டுக்கும் நடுவில் நின்று தடுமாறக்கூடாது என்கிறார். அதனால்தான் இது நிகழ்கிறது என்கிறார். கடைசியில் பாதிரியாரையும் ஒரு நோய் தொற்றுகிறது. ஆனால் நோய்க்கு மருத்துவம் பார்த்தால் அது இறைவனை தான் நம்பாமல் விடுவதாகும் என்று சொல்லி அவர் வைத்தியம் பார்க்காமலேயே தவிர்க்கிறார். இறுதியில் அவர் இறந்துபோனபின்னர் அவருடலைப் பரிசோதனை செய்த வைத்தியர் அவர் கொள்ளை நோயால் இறந்திருக்கச் சாத்தியமில்லை என்று சொல்கிறார்.
சில மாதங்கள் கழித்து, ஓரன் நகரத்தவரின் முயற்சியாலோ அல்லது நோய்க்கிருமிக்கு போதும் என்று தோன்றியதாலோ என்னவோ, கொள்ளை நோயின் தீவிரம் நகரி ல் கு றைய ஆரம்பிக்கிறது. மரணங்களும் நோய்த் தொற்றுகளும் குறைகின்றன. நகரத்தைச் சுற்றிப்போடப்படட தடை அகற்றப்படுகிறது. எல்லா மக்களுக்கும் இது புத்துணர்ச்சியை கொடுத்தாலும் அந்தக்குற்றவாளியால் இதனை தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அவன் வெறுத்துப்போய் தன் அறைக்குள்ளிலிருந்தபடி துப்பாக்கியால் சகட்டுமேனிக்குச் சுட ஆரம்பிக்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்கிறது.
மெதுவாக ஊர் வழமைக்குத் திரும்ப ஆரம்பிக்கிறது. கொள்ளை நோயை வென்றுவிட்டோம், இனிமேல் வாழ்க்கையை மீள அழகாகக் கட்டமைக்கவேண்டும் என்று எஞ்சியவர்கள் தீர்மானிக்கிறார்கள். ஊர் முழுதும் ஒருவித மகிழ்ச்சி நிறைந்திருந்தது. மனிதர்களிட,ம் வெறுக்கத்தக்கக் குணங்களைவிட நற்குணங்களே அதிகமாக இருக்கிறது, ஆனால் அவர்களுடைய அசட்டையீனம்தான் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டுவருகிறது என்று அந்த வைத்தியர் நினைக்கிறார். ஊரை விட்டு வெளியேறியவர்கள் பலர் திரும்புகிறார்கள். நடைமுறை வாழ்க்கை மீள்கிறது. ஆனால் மனிதர்களின் இயல்பான குணம் மாறவேயில்லை. சில நாள்களிலேயே, அங்கொரு கொள்ளை நோய் பரவியிருந்ததையே மக்கள் மறந்துபோய் தத்தமது வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள். பகல் முழுதும் வேலை. திரைப்படங்கள். உணவு. காமம். தூக்கம்.
மனிதர்கள் என்னதான் பாடுபட்டாலும் அவர்களால் கொள்ளைநோயை வெற்றி கொள்ளவே முடியாது என்று அந்த வைத்தியர் நினைத்துக்கொள்கிறார். கொள்ளை நோயின் மூலக்கிருமி பல வருடங்களுக்கு உறங்கு நிலையில் இருக்கக்கூடியது. அது மீளவும் தனக்குரிய சூழல் மிகுகையில் வெளிக்கிளம்பவே செய்யும். அப்போது இந்த ஊரும் மனிதரும் மீள அவலப்பட வேண்டிவரும். இதிலிருந்து அவர்களுக்கு மீட்சியும் கிடையாது. அதுபற்றி அவர்கள் அக்கறைப்படப்போவதுமில்லை. மனிதர்கள் நல்லவர்கள்தான். ஆனால் அதீத அசட்டையீனம் கொண்டவர்கள்.
கொள்ளை நோய் ஒழிந்துபோய் மக்கள் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒருநாளில் ஒரு வயதான அஸ்மா நோயாளியை வைத்தியம் பார்க்க அவரின் வீட்டுக்கு வைத்தியர் வருகிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே தெருவில் கொள்ளைநோயை வெற்றிகொண்ட குதூகலத்தில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. சிறுவர்கள் வெடி கொளுத்தி மகிழ்கிறார்கள்.
வைத்தியர் நோயாளியிடம் கேட்கிறார்.
“நான் உங்கள் மாடிக்குப்போய் கூரையின்மேல் ஏறி நின்று வேடிக்கை பார்க்கலாமா?”
“எதை? இந்த மக்களையா? தாராளமாகப் பாருங்கள். ஆனால் அருகில் பார்த்தாலும் தூரத்திலிருந்து பார்த்தாலும் எல்லோருமே ஒரே மாதிரியே தெரிவார்கள்”
வயதானவர் சொல்ல வைத்தியர் படிகளில் ஏற ஆரம்பிக்கிறார்.
“சொல்லுங்கள் டொக்டர், இறந்தவர்களுக்கு நினைவாலயம் ஒன்றை எழுப்பப்போகிறார்களாமே?”
“அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். பத்திரிகைகளில் வந்திருந்தது. ஒரு நினைவுத்தூபி கட்டப்போகிறார்கள்”
“அப்புறம் அஞ்சலிப்பேச்சுகளும் இருக்கும் அல்லவா. எனக்கு இப்போதே அந்த உரைகள் கேட்க ஆரம்பித்துவிட்டன… ஆண்டவரே … இந்த உயிர்களை … பேசிவிட்டு அத்தனைப்பேரும் இரவு உணவகத்துக்குச் செல்வார்கள்”
வயதானவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வைத்தியர் கூரைக்கு விரைந்துவிட்டார். இரவு வானம் நட்சத்திரங்களைச் சிமிட்டியபடி இருந்தது. தூரத்தில் கடலலைகள் ஆர்ப்பரிப்புடன் அடித்துக்கொண்டிருந்தன. இலையுதிர்காலத்தின் குளிரும் வெம்மையும் கூடி முகத்தில் அடித்தது. நகரம் இன்னமும் ஆர்ப்பரிப்புடன் குதூகலித்துக்கொண்டிருந்தது.
ஆனால், குப்பைத் தொட்டிகளுக்கருகில், கடைகளின் தாவாரங்களிற்கிடையில், தானியக்கிடங்குகளில், வீட்டுக் கொல்லைப்புறங்களில், கட்டில் கால்களுக்கடியில், கை லேஞ்சியின் தையல் இடுக்கில் இன்னமும் அந்த நோய்க்கிருமி தூங்கிக்கொண்டே இருக்கிறது.
****
இது அல்பேர்ட் காமுஸ் எழுதி “த பிளேக்” என்ற நாவலின் மிகச்சுருக்கப்பட்ட (சிறு மாற்றங்களுடன்) வடிவம்.


Sunday, April 19, 2020

ஜி.நாகராஜன் ஒரு மானுட கலைஞன்




நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” – 
சி. மோகன்

ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல் ஈடுபாடு
இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.
அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.
படைப்புகள்
இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில்அணுயுகம்என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாககுறத்திமுடுக்குஎன்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளேஇவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
நாவல்கள்[தொகு]
•             நாளை மற்றும் ஒரு நாளே,
•             குறத்தி முடுக்கு.
சிறுகதைகள்[தொகு]
•             எங்கள் ஊர்
•             டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
•             யாரோ முட்டாள் சொன்ன கதை
•             தீராக் குறை
•             சம்பாத்தியம்
•             பூர்வாசிரமம்
•             அக்கினிப் பிரவேசம்
•             நான் புரிந்த நற்செயல்கள்
•             கிழவனின் வருகை
•             பூவும் சந்தனமும்
•             ஜீரம்
•             போலியும் அசலும்
•             துக்க விசாரனை
•             மனிதன்
•             இலட்சியம்
•             ஓடிய கால்கள்
•             நிமிஷக் கதைகள்
இறுதி
கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்


இன்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது.
இதே நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார்.
ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள்  என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.
அவர் 'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
 அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.
"உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."

"மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்மனிதன் மகத்தான சல்லிப்பயல்என்றுதான் சொல்வேன்." 

"தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."

"‘மனிதாபிமானஉணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில்மேக்பெத்என்ற நாடகமோகலிவரின் யாத்திரைஎன்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."

"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

" தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்." 

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன." 

"எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்." 

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."
இதுதான் ஜி.நாகராஜன்!
சிதையில் படுத்தால்தான் குளிர் அடங்கும்’ – ஜி. நாகராஜன்
ஜி.நாகராஜன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது
நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்
’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.
ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.
அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.
உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!
மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.
’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது
அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.
தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.
இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.
Thanks https://www.jeyamohan.in