Search This Blog

Showing posts with label Kidney failure symptoms and treatment. Show all posts
Showing posts with label Kidney failure symptoms and treatment. Show all posts

Wednesday, April 27, 2011

உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சிறுநீரகப் பிரச்சனையை சரி செய்யலாம்

உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சிறுநீரகப் பிரச்சனையை சரி செய்யலாம்

கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து மற்றும் உயர் கொழுப்பு சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் போது சிறுநீரகப் பாதிப்பு சீராகிறது.நீரிழிவு நோயால் பாதித்த சுண்டெலிகள் சிறுநீரகப் பாதிப்பு இல்லாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு உதவியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கை பி.எல்.ஓ.எஸ்.ஒன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிக பட்ச சர்க்கரை ரத்தத்தில் இருப்பதால் சிறுநீரக குழாய்களில் ஏற்படும் பாதிப்பை உணவுக் கட்டுப்பாடு மூலம் தவிர்க்க முடியும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 280 இலட்சம் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உணவுக் கட்டுப்பாடு மூலம் மனிதர்கள் சிறுநீரகப் பிரச்சனையை எவ்வாறு தவிர்க்க முடியும் என பிரிட்டன் நீரிழிவு நபர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நியூயார்க்கை மையாமாகக் கொண்ட மவுண்ட் சினாய் மருத்துவப்பள்ளி ஆய்வாளர்கள் டைப் 1 மற்றும் டைப் 2 வகை நீரிழிவு நோய் பாதித்த சுண்டெலிகளை தங்களது ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
சிறுநீரகப் பாதிப்பு துவங்கிய சுண்டெலிகளுக்கு 8 வார கால உணவுக் கட்டுப்பாடு முறை நடத்தப்பட்டது. இதில் அந்த சுண்டெலிகள் சிறுநீரகப் பாதிப்பில் இருந்து மீண்டது தெரியவந்தது.
ஆய்வுக்குழு தலைவர் பேராசிரியர் சார்லஸ் மாப்ஸ் கூறுகையில்,"சிக்கலான நீரிழிவு நோய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உணவு கட்டுப்பாடு முறை உதவுகிறது. இதனை உணர்த்தவே சோதனை செய்தோம். ஆய்வகச் சோதனைக்கு பின்னர் இம்முறையை பரிந்துரைப்போம்" என்றார்.