Search This Blog

Friday, September 11, 2015

பாரதி தன் மனவுணர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை

மோகத்தைக் கொன்று விடு! அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு 
தேகத்தைச் சாய்த்துவிடு! அல்லாலதில் சிந்தனை மாய்த்து விடு 
யோகத் திருத்தி விடு! அல்லாலென்றன் ஊனைச் சிதைத்து விடு 
ஏகத் திருந்துலகம், இங்குள்ளன யாவையும் செய்பவளே !
பந்தத்தை நீக்கிவிடு ! அல்லாலுயிர்ப் பாரத்தை போக்கி விடு 
சிந்தை தெளிவாக்கு! அல்லாலிதைச் செத்த வுடலாக்கு !

எந்த ஒரு கலைஞனையும் வாழும் போது , வாழ வைக்க வழியில்லாத நாடு நம் நாடு. அதில் பாரதியும் விலக்கல்ல . பாரதி வாழும் காலத்தில் நான் வாழ்திருந்தால் அவன் விரும்பாவிடினும் அவன் நலனில் அக்கறை கொண்டு நான் வாழ்ந்து இருப்பேன். எப்பேர்பட்ட உணர்வு களஞ்சியம் அவன் ! எந்தவொரு ஆணோ , பெண்ணோ அவர்களுடைய நல்லதையும் கேட்டதையும் சேர்த்து புரிந்து கொள்ளும் துணை இல்லையென்றால் வாழ்வு வீண்தான் !. பாரதியை புரிந்து கொள்ளாமல் சூழ்நிலை கைதியாகி அவனை விட்டு செல்லம்மா விலகி இருந்த காலங்களில் பாரதி தன் மனவுண ர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை இது என்று நினைக்கிறேன். இக்கவிதை படிக்கும் போதெல்லாம் என் மனம் வெந்து போகும். இவனை கொண்டாடி வாழ வைக்காமல் போய் விட்டாளே அந்த செல்லம்மா என்று கோபம் வரும். பெரும்பான்மையான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துக்கும் வாழ்வுக்கும் தூரமானவர்களாகவே இருப்பதை காண்கிறோம் . தன் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தி , தன் கவிதைக்கு பாடுபோருளாய் தன்னையே இருத்திக் கொண்டவன் பாரதி ! !

ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்



தமிழை அழகூட்டி அழகிற்கு காதல் ஊற்றி இதமாய் இளமையாய் வரிகள் தந்த ரசிகன் பாரதிக்கு எம் சமர்ப்பணங்கள். இன்று மகாகவியின் நினைவு தினம்.
பாடல்கள்: "தூண்டில் புழுவினைப்போல் - நின்னையே ரதியென்று "
பாடியவர்கள்: சிந்தூரி- நிவேதனா
ஒளிப்பதிவு-தினேஷாந்த்
எண்ணம்- இரோஷன்




No comments:

Post a Comment