Search This Blog

Friday, September 25, 2015

Anarchism அனர்கிசம் (அராஜகம் என்னும் அரசின்மை)

Anarchism அவசியமா ?
கண்டிப்பாக படிக்கவும்
இது வித்தியாசமான கண்ணோட்டம் ... (உண்மையானது கூட ) பல சாதாரண மனிதர்களுக்கு இந்த அனர்கிசம் முட்டாள்களின் வாதமாகவே தெரியும் ... அனர்கிசம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுவோம் வாருங்கள் ..
ஒரு அரசின் விதி முறைகளை முழுவதும் கடை பிடிப்பவன் "குடிமகன் ".
அதே குடிமகன் அந்த நாட்டின் விதி முறைகளை சிறிது மீறினால் அவன் குற்றவாளி ஆவான் .
ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக ஒருவனின் செயல்பாடுகளோ கொள்கைகளோ இருக்குமாயின் அவன் பயங்கரவாதி ஆகிறான் . ஒரு சில கொள்கைகளை அரசின் முன்பு வைத்தே இவர்கள் போராட்டம் இருக்கும் ..
ஆனால் ஒரு ANARCHIST என்பவன் அரசாங்கமே வேண்டாம் என்று கொள்கை உடையவன் ..உங்களுக்குள் பல கேள்விகள் எல்லாம் அது எப்படி சாத்தியமாகும் என்று ... ?
அரசுகள் என்பன என்ன அதை முதலில் புரிந்து கொண்டால் இந்த Anarchism தேவையா இல்லையா என தெரிந்துகொள்ளலாம் . அரசு என்பது மக்களின் குறைகளை போக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு அதிகாரங்கள் கொண்ட ஒரு நிலைப்பாடு எனலாம் .
மக்கின் பிரச்சனைகளை போக்க இந்த அரசாங்கங்கள் உருவாகின ஆனால் காலபோக்கில் இதே அரசுகள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள மக்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்கியது தான் இந்த Anarchism துடங்க காரணம் ..
-ஆம் பயங்கரவாதம் இருந்தால் தான் அரசு தேவை அதை ஒடுக்க .
உணவு பற்றாக்குறை இருந்தால் தான் மக்கள் மக்களுக்கு அரசு தேவை .
பல்வேறு கேளிக்கைகள் ( திரைப்படம் , மீடியா ) மக்கள் முன்பு இருந்தால் தான் மக்கள் பார்வை எண்ணம் அரசுகளின் பக்கம் திரும்பாது .
எரிபொருள்களை கட்டுக்குள் வைத்துகொள்வது ..
நோய்களை உருவாக்குவது .. நோய்கள் உருவாக்கினால் தான் மக்கள் பலவீனமடைவார்கள் மாற்றுமருந்திர்க்கு அரசிடம் கை ஏந்தி நிற்ப்பார்கள் .
மரபணு மாற்றப்பட்ட சத்து இல்லா உடலிற்கு தீங்கு விளைவிற்கும் உணவுகளை குடுத்து நம்மை பலவீன படுத்தியது அரசு தான் . ( உதாரனத்திற்க்கு பசுமை புரட்ச்சி )
பணம் என்னும் மாயையை உருவாக்கியது தான் அரசின் மிக பெரும் நரி தந்திரம் ... ஒரு நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டாடுவது இது எல்லாம் உருவானதிர்க்கு காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்கள் நியாயமாக பெற்றதாக ஒரு மாயையை உருவாக்கவே .. (இதை புரிந்துகொள்வது சிறிது கடினம் ).
மக்களின் மனதளவு நிலைபாடுகளை செய்திகள் (மீடியா ) மூலம் கட்டுபடுத்துவது மற்றும் .. அவர்களது எண்ணோட்டங்களை தொலைபேசி , இணையம் போன்ற இணைப்புகள் மூலம் அறிந்து கொள்வது .. ஏதேனும் மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டு கிளர்ச்சிக்கு ஒரு விதை உருவாகலாம் என்று தெரிந்தாலும் சமுதாயத்தில் நிலைபாடுகள் மாறும் , ஏதேனும் கொடிய நோய் மக்களை தாக்கும் , பிரபல மனிதர் மர்ம முறையில் இறக்கலாம் , தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கலாம் , உணவு பஞ்சம் ஏற்படலாம் , வரிகள் உயரலாம் மக்கள் மத்தியில் கிளர்ச்சி என்னும் எண்ணமே அதன் பின் ஏற்படாது .. அவர்கள் அரசுகளை பற்றி சிந்திக்க அரசுகள் மக்களுக்கு நேரம் தராது ..
இவ்வளவு பிரச்சனைகளை மக்களுக்கு உருவாக்கினால் தான் மக்கள் அதற்கான தீர்வை நோக்கி அரசிடம் மன்றாடும் அரசுகள் மக்கள் முன் ஒரு எலும்பு துண்டை துக்கி எரிந்து விட்டு தன் அதிகாரத்தை தக்கவைத்துகொள்ளும் . இது இந்த கட்சி அந்த கட்சி என்று அல்ல அதே போல் இந்த நாட்டின் அரசு தான் என்று அல்ல அரசு என்றாலே அது அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும் ஒரு குள்ளநரி .
2 கட்ச்சிகள் அல்லது அதை தாண்டினால் 3,4 கட்ச்சிகள் தான் ஆட்ச்சியில் மாறி மாறி ஒரு நாட்டை ஆழும்.. இது மக்கள் மத்தியில் உண்மையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்ச்சிதான் நடக்கிறது என்னும் மாயை உருவாகும் தந்திரம் ..
"ஆட்ச்சிகள் மாறினாலும் காட்ச்சிகள் மாறாது"
சிறிது யோசித்து பாருங்கள் .
- நீங்கள் அரசுகள் உருவாக்கிய படிப்புகளை தான் படிக்க முடியும்..
- நீங்கள் ஒரு நாடு என்னும் சிறையில் தான் இருக்கமுடியும் ... இந்த உலகம் என்னும் உம் வீட்டில் உம்மால் நினைத்த இடத்திற்கு விருப்பம் போல் போக முடியாது ..
- கட்டாயமாக அரசுகளின் தடுப்பு உசிகளை போட்டுக்கொள்ளவேண்டும் .
-ஒரு சில கொள்கை வாதிகளை தீவிரவாதி தீவிரவாதி என கூறி கூறி நம் மனதில் அவர்கள் திவிரவாதிகலாகவே பதியபடுவார்கள் .
- உங்களை பற்றிய அனைத்து தகவல்களும் அவர்களுக்கு குடுக்கவேண்டும் ... ( இன்றைய ஆதர் அட்டை ஒரு எடுத்துகாட்டு .. மக்கள் மத்தியில் இதை திணித்து நமது அடையாளங்கள் திருடப்படுகின்றன ).
- உங்கள் வீடு இடமோ அரசின் தேவைக்கு ஏற்ப எடுத்துகொள்ளப்படும் ..
- உலகம் முழுவதும் இருந்த மன்னர் ஆட்சி முறை முடிவுக்கு வந்து அரண்மனை மன்னர் குடும்பத்தின் செல்வங்கள் பல அரசுகளுக்கு சென்ற ... ஆனால் இன்னும் மேற்கத்திய மன்னர் குடும்பங்கள் அரசு ஆட்ச்சியின் போதும் அரண்மனையில் வசிக்கிறார்கள் அவர்களின் அனைத்து சொத்துகளும் அவர்களிடமே உள்ளன ..
உண்மையை சொள்ள போனால் உலகம் முழுவதும் வர்த்தகம் வழியில் உள்ளே நுழைந்து அவர்களை அடிமைபடுத்தி அரசு ஆட்ச்சிகளை கலைத்து அரசுகளை கொண்டு வந்ததே இந்த மேற்கத்திய மன்னர் குடும்பங்கள் தான் ..
உலகின் தற்போதைய முடி சூட மன்னர்கள் இவர்கள் தான் இவர்களின் கில இயங்கும் ஒரு நிர்வாகமே உலக அரசுகள் ...
ஒரு கேள்வியை இந்த பதிவோடு முன் வைக்கிறேன்
மக்கள் ஆட்சி என்னும் பெயரில் இப்பொழுது இயங்கி வரும் உலக அரசுகள் மற்றும் அந்த கால மன்னர் ஆட்சி இந்த இரண்டை தவிர்த்து வேறு ஒரு சமுதாய நிலைபாடை உங்களால் கூறமுடியுமா ? இல்லை இது வரை வரலாற்றில் வரையறுக்க பட்டுள்ளதா ?
அதிகாரம் ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் இருப்பது போன்று அரசு வடிவமைக்க படுகிறது ? அதிகாரம் மக்கள் அனைவருக்கும் பிரிந்து இருப்பது போல் ஒரு ஆட்ச்சியை உங்களால் கற்பனை செய்ய முடியாத படி நமது மூளையை கட்டிவிட்டார்கள் ...
அரசு என்னும் அதிகார அசுரன் பற்றி இன்னும் பல உண்மைகளை மாற்று கண்ணோட்டத்தில் கண்டால் உங்களுக்கும் தெரியவரும் ..
Anarchism அவசியமா ? இன்றைய அரசு என்னும் கோட்பாடிற்கு வேறு ஒரு நல்ல மாட்டரு வழியை மனிதன் வடிமைப்பதே அவசியம் .

No comments:

Post a Comment