Search This Blog

Tuesday, September 1, 2015

வாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது


''சூரிய காந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து ஓரளவு இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக கொழுப்பு... நிறைவுற்றக் கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Monounsaturated fatty acid) பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Polyunsaturated fatty acid) என மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. சூரிய காந்தி எண்ணெயில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் குறைந்த அளவும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மிதமானஅளவும், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.
நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்'' என்கிறார் உணவியல் நிபுணர் சோபியா.
கொழுப்பு அமிலங்கள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் உணவியல் நிபுணர் சுபாஷிணி.
100 கிராம் சூரிய காந்தி எண்ணெயில், நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 9.1%, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 25.1%, பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 66.2% இருக்கவேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30% தேவை.
25 கிராம் எண்ணெயில்...
நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 7%
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 15%
பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 8% இருக்கவேண்டும்.
ஆனால், நமக்கு, சூரிய காந்தி எண்ணெயைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 5 கிராம் எண்ணெயே போதுமானது. அதாவது ஒன்று முதல் 2 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்தவேண்டும். (1 டீஸ்பூன் என்பது 4 கிராம்). நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், கடலை எண்ணெய் (அ) தவிட்டு எண்ணெய் 2 டீஸ்பூன் என நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டீஸ்பூன் எண்ணெய் தேவை.
இந்த அளவில் சூரிய காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால்... எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment