Search This Blog

Monday, September 14, 2015

இரசாயனம்...


பருவங்கள் முளைத்து
பழக்கப்பட்டு சிலாகரித்த
காதல் சிநேகமா?
வெறுமைக் கோட்பாடாக
திரிவுபடுகிறது.?
பல்லாயிரம் நிமிஷங்களில்
நிசப்தப்பட்ட
பொழுதுத் தொழுவல்களால்
பிரபஞ்ச வெளியை
உன் ஞாபகங்களால்
தாண்டிப் போனேன்.
யுகங்களின் வளர்ச்சிக்குள்ளே
உன் குரல் மட்டும்
தொலைபேசி ஒலிப்பரப்பாய்
தொடுகை பட
என்னாத்மா
ஆகர்சணமாய் மோகிக்கிறது.
தாயின் பாலில்
ஆரோக்கியப்பட்ட தேகம்
உன் நிலவரத்தின்
ஏக்கங்களால்
நிலையான கவலைகள்
கண்ணீரில் சமூத்திரமாயின
பூக்களின் மீது
மகரந்த தேன் வழிந்த
உன் விழிகள்
இரசாயனப் பார்வைகளை
வீசி படர விடுகின்றதே ..?
துப்பாக்கி ரவைகள்
என்
மார்பைக் கிழித்து
இதயத்தை அழித்தாலும்
உன்
நாமழுத்தம் தான்
மாற்றமாகி விடுமா?
ஏழிசை ராகங்களாய்
உன்
ஒரு வாய்ச் சொல்
வடிகாலாய்
என்
இளமையி இழையோடுகிறது.
நீ
பிரிவைப் பிய்த்துப்
போனதும் மறுபடியும்
உன்
சிரிப்பையும்
நாணத்தையும்
மழை பூமியோடு
சங்கமித்து
நினைவு நாழிகையாகிறது .
உன்
மௌனங்கள்
அமிர்த விஷம்
அதனால் மரணிக்க மாட்டேன்
என்
மரணத்தின் இருப்பிடம்
உன் இதயமல்லவா ?
கவிமொழி

No comments:

Post a Comment