Search This Blog

Sunday, September 27, 2015

ராஜா விஜய் சிங்..


ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற
பொழுது.சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார். அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.
அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகன் என எண்ணி அவரை அடித்து விரட்டினர்.
இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.
பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது ''அரச உடையில்'' மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .
ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு ராஜ உபசாரம் செய்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பும் அளித்தனர்.
ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ்கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். .
உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ்கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும், செய்தி விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.
யாரவது ஐரோப்பா அல்லதுஅமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால்.
இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.
இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்புகெட்டு அதன் விற்பனை
சரிய தொடங்கியது.
ரோல்ஸ் ராய்ஸ்நிறுவன தலைவர் உடனடியாக ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அள்ள பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கள் மேல் வெறுப்பு
இல்லை
உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை ''குப்பை போல் வெளிய
வீசினர்''... அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அள்ளுவதர்க்கு உபயோகித்தேன்.
முதலில் மக்களை மதியுங்கள்...! என்று பதில் அனுப்பினார்.
வெள்ளைக்காரனை செவிட்டில் அறைந்த ''ராஜ விஜய்சிங்கின்'' ''சுய மரியாதை''யை நாமும் பாராட்டலாமே நண்பா...!

No comments:

Post a Comment