ஆழமான கதை. புகழின் உச்சியில் இருக்கும் அம்மா, அப்பாவின் மரணத்துக்குக் கூட தாமதமாக வருபவள், சிறுவயதிலிருந்தே தந்தையின் மீது அதீத பாசம் கொண்ட மகள், அவர் மரணத்துக்குப் பின் தாயை வெறுத்து ஒதுக்கி, கடைசியில் இருவரும் ஒரு புரிதலுக்கு வருவதை ஆழமாக அதே சமயம் அழகியலுடன் சொல்லியிருப்பார் ரிதுபர்னோ கோஷ். மெமரிஸ் ஆஃப் மார்ச் மறக்க முடியாத திரைக்காவியம். ரிது இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்திய சினிமாவை மேன்மேலும் உயரத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார். அறிவிற் சிறந்தவர்களுக்கு ஆயுசு குறைவு என்பது உண்மைதானோ?
No comments:
Post a Comment