இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.. தமிழில் இட்டிருந்தார்.. அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும் வந்துது.. > சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன மொழியில்தான் உள்ளது.. பெரும்பாலும் உலகின் அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர் தாய்மொழியிலேயே > கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை? > அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான் இருக்கிறது... ### என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்போகிறேன்.. (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும், கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும் தமிழுக்காக) தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய் இருக்கிறது.. தமிழர் என்று சொல்லுவோம்.. தமிழராய் வாழ்வோம்.. நம் அடையாளம் அதுவே..
No comments:
Post a Comment