தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர்.
இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹோர்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.
இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
Search This Blog
Sunday, April 8, 2012
உடல் நலத்தை பாதுகாக்கும் இசை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment