Search This Blog

Monday, April 23, 2012

ஒரு உயிரின் மரணம்


ஒரு உயிரின் மரணம் (எனக்குத் தெரிந்த வரை எதுவும் பொய்யில்லை ) அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் புதியது பரீட்சயமில்லாதது முன் எப்போதும் நான் அதற்கு தயாராகவில்லை அது என் அம்மாவின் மரணம் . அவளை வீட்டில் கிடத்தி வைத்திருகிறார்கள் வெறும் உடல் மட்டும் என்று பேசிக்கொண்டார்கள் . நான் மிகவும் உண்மையாக அந்த மரணத்தை எதிர்கொண்டேன் . உடனடியாக என்னால் எதையும் செய்ய முடியவில்லை எல்லோரும் போல் கதறியழுவது எனக்கு கஷ்டமாக இருந்தது . நான் அந்த மரணத்தை உணர நினைத்தேன் . என் அப்பாவின் அம்மாவின் காதல் அங்கு அழுது வழிந்தது நான் மிகவும் பயந்ததும் அவர் அழுது பார்த்ததும் அப்போது தான் . சினிமா நடிகர்கள் போல் நிறைய பேர் இருந்தார்கள் அழுத படி . என் புரிதல்கள் தவறாக இருக்குமோ ஏன் என்னால் அவர்களைப் போல் அழ முடியவில்லை பின் எப்போதும் என்னால் அதை அறிய முடியவில்லை . தீயின் அணைப்புகள் அவள் உடல் காதைத் திருகிய கைகள் முத்தமிட்ட உதடுகள் நான் தலை சாய்ந்த மடி என்று எதுவுமே எஞ்சியிருக்கவில்லை . கூட்டம் தொலைந்த பின்னர் நான் தனித்து விடப்பட்டேன் இரண்டு மூன்று இரவுகள் அழுததாக உணர்கிறேன் . வானொலியில் கேட்ட்கும் அம்மாவின் பாடல்களிலோ இல்லை மாலையில் என் நண்பனை சீக்கிரம் வரச் சொல்லும் அவன் அம்மாவின் தொலை பேசி அழைப்பிலோ அம்மாவின் தழுவல்கள் எனக்கு அவசியமாயிருந்தது . என்னை சுற்றிய அமானுஷ்ய அதிர்வுகளில் அவள் இன்னமும் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. யாருமற்ற கணங்களில் இப்போதெல்லாம் எனக்கு அழத் தோன்றுகிறது . எனக்குள் எவ்வளவு தூரம் அவள் இருந்தாள் என்பதை அறிய எனக்கு இவ்வளவு நாட்கள் தேவைப்பட்டது . ஒரு உயிரின் மரணம் நிச்சயிக்க முடியாதது . அது அந்த உயிரின் வாழ்விலும் காதலிலும் நிறைந்திருக்கிறது . கண்களில் உருளும் உப்புத் திரவத்தில் இருந்து தாள்களை பத்திரப்படுத்துகிறேன் அவள் அழிக்க முடியாத உயிராகவே எனக்கு தோன்றுகிறது . (சில நாட்களின் முன் நடந்த என் அம்மாவின் 3 ஆம் ஆண்டு நினைவுக்காக குறிப்பு :-இது கவிதையல்ல ) "ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா "

No comments:

Post a Comment