Search This Blog

Thursday, April 26, 2012

பேஸ்புக்கில் தொடரும் அட்டூழியங்கள்




ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணையத்தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது.
இதனை சர்வே ஸ்கேம்(Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்” என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது.
இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் மட்டுமே அது போலியானது எனத் தெரியவரும்.
இங்கு ஒரு வீடியோவிற்கான இணைப்பு இருக்கும், வீடியோ பிளேயர் காட்டப்படும். உடனே அது படிப்படியாக மறைக்கப்பட்டு, இந்த வீடியோவினைப் பார்ப்பதற்கு உங்களுக்கு உரிய வயது ஆகிவிட்டதா என்ற கேள்வி கேட்கப்பட்டு, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி எல்லாம் கேட்டு வாங்கப்படும்.
இதன் பின்னர் வேறு எதுவும் காட்டப்படாமல் தளம் நின்று விடும். நீங்கள் அளித்துள்ள தகவல்கள் மற்றவருக்கு விற்பனை செய்யப்படும். அவர்கள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாப்புகள் ஏற்படும்.
மேலே தரப்பட்டுள்ளது போல பலவகையான செய்திகள் ஸ்கேம் ஆகப் பரவத் தொடங்கி உள்ளன. இது போன்ற ஆர்வமூட்டும் தகவல்களைக் கண்டால் சற்று எச்சரிக்கையுடன் விலகுவது நல்லது.

No comments:

Post a Comment