ஒரு குவாண்டம் துகள் பல நிலைகளில் இருக்க முடியும் என்று குவாண்டம் இயற்பியல் சொல்கிறது.நாம் BIG BANG தியரியை நம்பினால் நம் பிரபஞ்சம் ஒரு காலத்தில் பிளான்க் நீளத்துக்கு சுருங்கி மிக மிக சிறியதாக இருந்தது என்றும் நம்ப வேண்டும். பிரபஞ்சத்தில் விதிகள் காலத்துக்கேற்ப மாறாது ;இடத்துக்கேற்ப மாறாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதாவது கார்பனுக்கு பூமியிலும் ஆறு எலக்ட்ரான் தான். பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள இன்னொரு கிரகத்திலும் ஆறு எலக்ட்ரான் தான்.தண்ணீர் ஆறாம் நூற்றாண்டிலும் நூறு டிகிரியில் தான் கொதித்தது. இப்போதும் அதே வெப்பநிலையிலேயே கொதிக்கிறது.
எனவே குவாண்டம் இயற்பியல் விதிகள் நம் குழந்தை பிரபஞ்சத்துக்கும் கண்டிப்பாகப் பொருந்த வேண்டும். எனவே பிரபஞ்சமும் அப்போது ஹைசென்பெர்க் நிச்சயமின்மை விதிகளுக்கு உட்பட்டு (ஒரே சமயத்தில்) பல நிலைகளில் இருந்திருக்கும்.DECOHERENCE WAVE FUNCTION COLLAPSE என்பதெல்லாம் வெளியில் இருந்து ஒரு கவனிப்பவர் துகளை உற்று நோக்கும் போது (ஃபோடான்) நடக்கும் விஷயங்கள். பிரபஞ்சம் உருவான போது அதற்கு வெளியே ஒரு CONSCIOUS OBSERVATION நடந்திருக்க
வாய்ப்பு இல்லை.(கடவுள் இருந்தால் ஒழிய)எனவே பிரபஞ்சத் துகளின் அலைசார்பு (WAVE FUNCTION )ஒரே சமயத்தில் பல்வேறு மதிப்புகளை கொண்டிருந்திருக்கும். எனவே ஒவ்வொரு மதிப்புக்கும் ஒவ்வொரு பிரபஞ்சம் இருக்க வேண்டும். ஆனால் இப்படி தோன்றிய இணை பிரபஞ்சங்களில் பெரும்பாலானவை தோன்றிய மறுகணமே ஏனோ
சுருங்கி (BIG CRUNCH IMMEDIATELY AFTER BIG BANG ) மடிந்து விட்டன என்கிறார்கள்.இன்றுமற்ற வெறுமையில் இப்படி முளைத்த குமிழிகளில் ஒன்று மட்டும் ஏனோ சுருங்காமல் தொடர்ந்து மெல்ல மெல்ல விரிவடைய ஆரம்பித்தது. அது தான் நாம் இன்று காணும் பிரபஞ்சம். OUR UNIVERSE IS A FREE LUNCH என்கிறார் Alan Guth என்பவர்.

ஸ்டீபன் ஹாகிங் ஒன்றும் இல்லாத வெறுமையில் இருந்து பிரபஞ்சம் வந்தது என்ற கருத்தை ஆமோதிக்கிறார்.பிரபஞ்சத்திற்கு தாமரை இலைமேல் அமர்ந்து ஓலைச்சுவடி ஏந்திய பிரம்மா எல்லாம் வேண்டியதில்லை.பிரபஞ்சத்தில் உள்ள நேர் மற்றும் எதிர் சுமைகளைக் கணக்கிடும் போது (+ve and -ve charges )இரண்டும் சரிசமமாகவே
உள்ளன. மேலும் இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு மிக மிகக் குறைவு.எனவே நாம் ரோட்டில் போகும் போது கிட்ட நடந்து வருபவர் மீது மோதிக் கொள்வதில்லை.பச்சக் என்று ஒட்டிக் கொள்வதில்லை. (புதிதாக கல்யாணம் ஆனவர்களைத் தவிர்த்து) இருவர் உடம்பிலும் உள்ள நேர் மற்றும் எதிர் மின் சுமைகள் கச்சிதமாக BALANCE ஆகி விடுவதால் அப்படி நடப்பதில்லை.அப்படி மட்டும் balance ஆக வில்லை என்றால் மின்காந்த விசை (ஈர்ப்பை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது) ஒரு நொடியில் மில்லியனில் ஒரு பங்கு நேரத்தில் உங்கள் இருவரையும் இழுத்து ஒட்ட வைத்து விடும். உங்கள் மனதுக்குப் பிடித்த பெண்/ஆண் வரும்போது CHARGE IMBALANCE ஆகி விட வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளலாம்.
அதே போல MATTER x ANTI MATTER ENERGY x NEGATIVE ENERGY விஷயங்கள் பிரபஞ்சம் ஒன்றுமில்லா வெறுமையில் இருந்து தோன்றி இருக்கலாம் என்ற கருத்தை வலுவாக்குகின்றன.
பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்றும் மைனஸ் ஒன்றும் வருவது போல இது.
No comments:
Post a Comment