அதர்வண வேதம் ..... சாண்டில்யோபநிஷத்து ....
1. சாண்டில்யர் அதர்வணரை அணுகி 'ஆத்ம லாபத்திற்கு வழிவகுக்கும் அஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்) கூறியருளுங்கள் என்று கேட்டார்.
2. அதர்வணர் கூறலானார்: யமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டு அங்கங்கள். அவற்றுள் யமம் பத்து, நியமம் பத்து, பிராணாயாமம் மூன்று பிரத்யாஹாரம் ஐந்து, தாரணை ஐந்து, தியானம் இரண்டுவகை, சமாதி ஏகரூபம்.
அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பிரம்மசரியம், தயை, ஜபம், பொறுமை, திடம், மிதமான ஆஹாரம், பரிசுத்தம் என யமம் பத்து.
தவம், சந்தோஷம், ஆஸ்திக்யம், தானம், ஈஸ்வர பூஜை, ஸித்தாந்த சிரவணம், அதர்மத்தில் வெட்கம், நிச்சியபுத்தி, ஜபம், விரதானுஷ்டானம் என நியமம் பத்து.
ஸ்வஸ்திகம், கோமுகம், பத்மம், வீரம் ஸிஹிமம், பத்ரம், முக்தம், மயூரம், வஜ்ராசனம் என முக்கியமான ஆசனங்கள் எட்டு.
யம நியமத்துடன் கூடிய புருஷன் பிராணாயாமத்தைக் கைக்கொள்ள வேண்டும். வலது நாசியால் பன்னிரண்டு மாத்திரை மூச்சை உள்ளே இழுத்துப் பூரகம்; அதே அளவு உள்ளே அடக்கி வயிற்றில் அக்னி மண்டலத்தை தியானித்து கும்பகம்; அதே அளவு மூச்சை மெதுவாக இடது நாசியால் வெளியே விட்டு ரேசகம். இங்ஙனம் பிராணனையும் அபானனையும் சமப்படுத்துதல் பிராணாயாமம்.
வெளிவிஷயங்களில் சஞ்சரிக்கும் இந்திரியங்களை பலாத்காரமாக உள்முகப்படுத்துதல் பிரத்யாஹாரம். வேதத்தில் விதிக்கப்பட்ட நித்ய கர்மத்தைப் பயனை விரும்பாமல் அனுஷ்டித்தல் பிரத்யாஹாரம். எதெதைப் பார்த்தாலும் அதையெல்லாம் ஆத்மா எனக் கருதுதல் பிரத்யாஹாரம். பதினெட்டு மர்ம ஸதானங்களில் வரிசையாக மனதை நிறுத்துதல் பிரத்யாஹாரம். பாதம், கட்டைவிரல், கால் மணிக்கட்டு, முழுங்கால், முழங்கால் சந்தி, துடை, அபானத்துவாரம், குறி, நாபி, இருதயம், கழுத்து, தொண்டைக்குழி, தாடை, மூக்கு, கண், புருவமத்தி, நெற்றி, உச்சி என்பவை அந்த ஸதானங்கள்.
ஆத்மாவில் மனதை நிறுத்துதல்; த்ஹாரகாசத்தில் வெளி ஆகாசம் அடங்கியதாகச் சிந்தித்தல்; பிருத்வியில் பிரம்மா, அப்புவில் விஷ்ணு, தேயுவில் ருத்ரன், வாயுவில் மகேச்வரேன், ஆகாசத்தில் சதாசிவன் என்ற பஞ்ச மூர்த்தி தியானம் என்ற படி தாரணை மூவ்வகைத்து.
தியானம் ஸகுணம் நிர்க்குணம் என்று இருவகை.
சமாதி ஜீவாத்மா பரமாத்மாவில் அடங்கிய நிலை அறிவு அறிபவன் அறியப்படுவது என்ற தர்புடீ இல்லாதது. சுத்த சைதன்ய வடிவான பரமானந்தா நிலை.
No comments:
Post a Comment