Search This Blog

Friday, May 16, 2014

ஒரு தலை. ஈருடல். 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம்

ஒரு தலை.
ஈருடல்.
1000 ஆண்டுகள் பழமையான சிற்பம் என்கிறார் இராசபாளையம் அன்பர் இராமராசனார்.
இராசபாளையத்திலிருந்து வடக்கு நோக்கிய சாலை.
திருவில்லிபுத்தூர் செல்லும் சாலை.
வழியில் அருள்மிகு மயூரநாதசுவாமி கோயில்.
அக்கோயிலுக்கு அண்மையில் சாலை ஓரமாக ஒரு மேடு.
அருகே 16 கால் மண்டபச் சத்திரம்.
மேட்டை அகழ்ந்தபொழுது கோயிலின் இடிபாடுகள்.
ஆதிவழிவிடு பிள்ளையார் கோயிலின் கருங்கற் தூண்கள், கருவறை நிலைகள் எனப் பழைமையான பாண்டியர் காலக் கோயிலின் இடிபாடுகள்.
அன்பர் இராமராசனார் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கோயிலை மீளமைக்கின்றனர்.
கருங்கற் தூண் ஒன்றில் ஒரு தலை, ஈருடல் சிற்பம்.
படம் காண்க.

No comments:

Post a Comment