உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
(பிரபந்தம் - திருவாய் மொழி - நம்மாழ்வார் அருளியது )
இறைவன் உண்டு என்று சொல்பவர்களுக்கு இறைவன் இருப்பவனாகவே
காட்சியளிக்கின்றான் , அப்படி கூறுபவர்களுக்கு எல்லா உருவங்களிலும்
இருப்பவனாகவே உள்ளான் .
இறைவன் இல்லை என்று கூறுபவர்களுக்கு அவன் இல்லாதவனாகவே இருக்கிறான் , அப்படி கூறுபவர்களுக்கு அவன் அருவமாகவே இருக்கிறான் ....
இவ்வாறு உருவமாகவும் , அருவமாகவும் இரண்டு வகையாக இருப்பதே அவனது இயல்பான தன்மையாகி விடுகிறது ...
உருவமாகவோ , அருவமாகவோ , அவன் எங்கும் நீக்கமற பரந்தே விளங்குகிறான் என்கிறார் நம்மாழ்வார்

Related Posts : Good to Read,
Spiritual
No comments:
Post a Comment