Search This Blog

Tuesday, February 19, 2013

மூலாட் (Moolaade) - 2004

மூலாட் (Moolaade) - 2004 ஆம் வெளிவந்த செனெகல் (Senegal) நாட்டு திரைப்படம். ஆப்ரிக்க நாடான செனெகலில் பேசப்படும் பம்பாரா (Bambara) என்ற மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம். "மூலாட்" என்ற சொல்லுக்கு பாதுகாப்பு என்று அர்த்தம். இந்த படத்தின் இயக்குனர் உஸ்மான் செம்பேன் (Ousmane Sembene). ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்த இவர் ராணுவத்திலும் பணியாற்றியவர். பல அறிவுரைகள் மக்களை சென்று சேர திரைப்படம் சிறந்த வழி என்று கூறி திரைப்படம் எடுக்க வந்தவர். இந்த திரைப்படம் சஹாரா பாலைவனத்தின் தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் நடப்பது போன்ற கதை. இந்த கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களிடையே பல மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் பரவி கிடக்கின்றன. பெண்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அத்தகைய ஒரு சடங்கை எதிர்த்து போராடிய ஒரு இரும்பு பெண்மணியை பற்றிய கதை இது. கோலே என்ற அந்த பெண், பெண்களை சுத்தபடுத்துதல் என்ற அபாயகரமான சடங்கை எதிர்த்து எவ்வாறு வெற்றி பெறுகிறாள் என்பதை விளக்கும் திரைப்படம். பார்ப்போர் மனதை உறைய வைக்கும் பல காட்சிகள் நிறைந்த திரைப்படம். 2004 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் சேர்த்து பல விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம்

http://www.youtube.com/watch?v=9TDRlX6yEvo

No comments:

Post a Comment