Search This Blog

Tuesday, February 19, 2013

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனை செய்த திரைப்படங்கள் சில:

முதல் பேசும்படம்:
1931 ஆம் ஆண்டு அக்ட்டோபர் மாதம் 31 ஆம் திததியில் வெளிவந்த காளிதாஸ் என்ற திரைப்படம்

அதிக நாட்கள் ஓடிய முதல் தமிழ் திரைப்படம்:
1944-ல் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படமே முதன் முதலில் தமிழில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். தொடர்ந்து 110 வாரங்கள் திரையில் காண்பிக்கப்பட்ட மாபெரும் சாதனைப்படமாக இத்திரைப்படம் விளங்குகின்றது. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 16-10-1944 முதல் 22-11-46 வரை தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது. சென்னை ப்ராட்வே திரை அரங்கில் தொடர்ந்து மூன்று தீபாவளி தினைத்தைக்கண்டதென்பது மிகவும் பிரமாண்ட சாதனையாகும். இந்த நேரத்தில் MKT அவர்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்:
1937 ஆம் ஆண்டு நவயுவன் என்ற தமிழ் திரைப்படம் லண்டன் மாநகரில் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டில் நடைபெற்ற திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்:
கெய்ரோவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற வீரபாண்டிய கட்டப்பொம்மன் திரைப்படமே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சிறந்த இசையமைப்பிற்கான விருதை ஜீ.ராமனாதன் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக பாடல்கள் கொண்ட திரைப்படம்:
1934 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ கிருஷ்ண லீலா திரைப்படமே அதிக பாடல்களைக் கொண்டு வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் 62 பாடல்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடல்களே இல்லாத திரைப்படம்:
1954 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த நாள் திரைப்படமே முதன் முதலில் பாடல்கள் இல்லாமல் வந்த திரைப்படம்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் படம்:
1943 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த அரிச்சந்திரா என்ற திரைப்படமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்ட முதல் வேற்றுமொழித் திரைப்படமாகும்.

இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம்:
1940 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தம புத்திரன் என்ற திரைப்படமே தமிழில் வெளிவந்த முதல் இரட்டை வேட திரைப்படம். P.U.சின்னப்பா அவர்கள் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

முதல் சினிமாஸ்கோப் தமிழ் திரைப்படம்:
1973 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளிவந்த ராஜ ராஜ சோழன் என்ற திரைப்படம்.

முதல் 70௦ MM தமிழ் திரைப்படம்:
1986 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாவீரன் என்ற திரைப்படம்.

No comments:

Post a Comment