Search This Blog

Monday, February 11, 2013

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]

சிவலிங்கம் [ அருவுருவ நிலை ]
*******************************
இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத்தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர்.

இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது;

ஞானசக்தியும் கிரியாசக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது.
இதை போக சிவம் என்றும் அழைப்பர்.
இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும்.
சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும்.

அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத்தில் உள்ளது.

சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்;
இன்னது என கூற முடியாதது.
உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம்.
நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை.

இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதை விட, லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரத்தில் கூறி இருக்கிறார்.

லிங்கம் என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் மங்கலத்தைத் தரும் பரம்பொருள் எனவும், அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும், மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.

ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம்.
இல்லங்களில் வைத்து பூஜிக்கும் லிங்கம் சலம்.
ஈசன் தன் கருணை பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.

கிழக்கில் தத்புருஷம்,
மேற்கில் சத்யோசாதம்,
மந்தகத்தில் ஈசானம்,
தெற்கே அகோரம்,
வடக்கே வாமதேவம்
என்பது ஐந்துமுக லிங்கவிவரம்,

ஆட்யலிங்கம் என்பது சிரம் பிறைச் சந்திர வடிவமாக உள்ளது.

அநாட்ய லிங்கம் என்பது சிரம் வெள்ளரிப்பழ வடிவம் கொண்டது.

சர்வ சமலிங்கமானது குடை போன்ற சிரத்தையுடையது.

சுரேட்யலிங்கம் எனப்படுவது உச்சியில் கோழி முட்டை வடிவம் கொண்டது என நான்கு லிங்க வடிவங்கள் சரசிவாகத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment