Ballad
of a Soldier (பாலட் ஒப் எ சோல்ஜர்) - 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ரஷ்ய மொழி
திரைப்படம். யுத்தத்தினால் ஏற்படும் குடும்ப உறவுகளின் பிரிவை இந்த
திரைப்படம் ஒரு காவியத்துவமாக படம் பிடித்து காட்டுகிறது. இதன் இயக்குனர்
கிரிகோரி சுக்ராய் (Girigory Chukrai).
இவர் இரண்டாம் உலகப்போரில் படை வீரராக பணியாற்றியவர். ரஷ்யாவின் மிக
முக்கிய இயக்குனர்களில் ஒருவர். இந்த திரைப்படத்தில் காதல், தாய்ப்பாசம்
போன்ற உறவுகளை மிக அருமையாக காட்சியாக வடித்துள்ளார் இயக்குனர். போருக்கு
சென்ற தனது மகன் இறந்தது கூட தெரியாமல் அவன் வரவுக்காக காத்திருக்கும் ஒரு
அன்னையிடம் இருந்து இந்த படம் துவங்குகிறது. பின்னர் ஒரு குரல் அந்த போர்
வீரனின் கதையை நமக்கு சொல்வது போல திரைப்படம் அமைந்துள்ளது. அந்த போர்
வீரனின் பெயர் அல்யோஷா. அவன் தனக்கு கிடைத்த 4 நாட்கள் விடுமுறையில் தனது
தாயை பார்த்து வர செல்கிறான் அவனது பயணமே நமக்கு திரைப்பட காட்சியாக
அமைகிறது. தாயை பார்த்து விட்டு செல்லும் மகன் போர்க்களத்தில் இறந்து போனது
தெரியாமல் தான் அந்த தாய் தன் மகனுக்காக காத்திருக்கிறாள். இந்த
திரைப்படம் கேன்ஸ் மற்றும் BAFTA திரைப்பட விழாக்களில் சிறந்த
திரைப்படத்துக்கான விருதை வென்றது. சிறந்த திரைக்கதைக்கான விருதுக்காக
ஆஸ்கார் விருதில் பரிந்துரைக்கப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்படும்
பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் எவ்வளவோ இருக்கின்றனர்.
இருந்தும் தன் நாட்டுக்காக போர் செய்யும் ராணுவ வீரனின் பணி மிகவும்
மகத்தானது என்பதை விளக்கும் திரைக்காவியம் இது.
No comments:
Post a Comment