ஆதாமிண்டே
மகன் அபு - 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழி திரைப்படம். இதன்
இயக்குனர் சலீம் அஹ்மத். பத்தாண்டுகளுக்கும் மேல் இந்த கதையை மனதிலே
யோசித்து வைத்து பின்னர் அதை படமாக எடுத்து உலக சினிமாவின் வரிசையில்
சேர்த்தவர். இது இவரது முதல் படம் என்பது
குறிப்பிடதக்கது. 58வது தேசியத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படம்,
சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய
துறைகளில் நான்கு தேசிய விருதுகளை பெற்றது . இதேபோன்று கேரள மாநில
திரைப்பட விருதுகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை
மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்தியாவின்
சார்பில் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார்
விருதுக்கான போட்டியிலும் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டது. எனினும்
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படங்களின் கடைசி பட்டியலில்
இடம்பெறவில்லை. இந்த திரைப்படத்தில் சலீம் குமார் மற்றும் ஜரீனா வஹாப்
முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர். சலீம் குமார் அவர்கள் சிறந்த
நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். சலீம் குமார் மலையாளத்தில் ஒரு
சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின்
கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் டேசெர்ட் சன் (Desert Sun) என்ற
பத்திரிக்கை இந்த படத்தையும் சலீம் குமாரின் நடிப்பையும் பாராட்டி
எழுதியிருந்தது. இதன் ஓளிப்பதிவாளர் மது அம்பாட். இந்த திரைப்படத்தில்
தனிமையின் உணர்வை பிரதிபலிக்க நிறைய லாங்-ஷாட் தேவைப்பட்டது என்று
கூறியுள்ளார். வெளிநாடுகளில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில்
கலந்துகொண்டு பல விருதுகளையும் பெற்று வந்துள்ளது இந்த திரைப்படம் என்பது
மிகவும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment