சபாபதி
- 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம். இந்த திரைப்படம் தான் தமிழ்
திரையுலகின் முதல் முழு-நீள நகைச்சுவை திரைப்படம் என்பது
குறிப்பிடத்தக்கது. இதனை தயாரித்து இயக்கியவர் A.V. மெய்யப்ப செட்டியார்
அவர்கள். அவரது நண்பர் A.T.கிருஷ்ணசாமியின்
அறிவுரைப்படி பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைசசுவை நாடகமான சபாபதியை
திரைப்படமாக தயாரித்தார் ஏவிஎம் அவர்கள். படத்தின் நாயகனாக T.R.
ராமச்சந்திரன் அவர்களும் நகைச்சுவை நடிகராக காளி N ரத்தினம் அவர்களும்
நடித்தனர். அப்பொழுது Lux விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்று இருந்த
R.பத்மா அவர்களை கதாநாயகியாக நடிக்க செய்தார். மொத்தம் Rs. 40,000 செலவில்
இந்த படம் தயார்செய்யப்பட்டது. ஏவிஎம் செட்டியாரின் இயக்கத்தில் முதல்
மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படம். பின்னாளில் தமிழ்
திரையுலகில் பல முழு-நீள நகைச்சுவை திரைப்படங்களுக்கு வித்திட்டது இந்த
திரைப்படம் தான் என்று சொன்னாலும் அது மிகையாகாது.
No comments:
Post a Comment