Search This Blog

Friday, March 23, 2012

சத்தான காய் பாகற்காய்! எல்லா நோய்களுக்கும் அருமருந்து...





மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காய் தமிழகம் மட்டுமல்லாமல் பெரும்பாலான ஆசியா நாடுகளிலும் மிகவும் பிரபலமான ஒரு காய்.

குறிப்பாக ஜப்பான், சீனா மற்றும் வியட்நாமில் அதிக பிரபலம்.
ஆசியமற்றும் ஆப்ரிக்க நாடு மருந்துகளிலும் நிறைய பயன்படுத்தப் படுகிறது.

பிஞ்சு பாகற்காய் சமையலுக்கு உகந்தது. பாகற்காய் பொரியல், கூட்டு மற்றும் குழம்பு செய்வதற்கு நன்றாக இருக்கும்.

Bitter Gourd details in English…
மற்ற பெயர்கள்:
பிட்டர் கௌர்ட்(Bitter Gourd) - ஆங்கிலம்
கரேலா (Karela) – இந்தி

சத்து விவரம்:

வைட்டமின் A , B1, B2 மற்றும் C நிறைந்தது.
கால்சியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ் மற்றும் பொட்டசிய தாதுக்கள் நிறைந்தது.

ப்ரோகோளியை விட இருமடங்கு beta-carotene-ம், கீரையை விட இருமடங்கு கால்சியம் சத்தும், வாழைபழத்தை விட இருமடங்கு பொட்டாசியம் சத்தும் கொண்டது.

மருத்துவ பலன்கள்:
செரிமானத்திற்கும், இரத்த சுத்திகரிப்பிற்கும் மிகவும் நல்லது.
பாகற்காயில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு நல்ல உணவு.
பாகற்காய் சாறு தொடர்ந்து அருந்தினால் சக்தியும் பலமும் அதிகமாகும்.

No comments:

Post a Comment