வணக்கம் நண்பர்களே...
எனது பக்கத்து வீட்டில் ஒரு நிகழ்வு... தன குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு தந்தை. இது அன்றாடம் நிகழும் நிகழ்வு தான். அவன் சரியாக படிக்காததால் அவனிடம் "நீயெல்லாம் சுத்த தண்டம்.. எதுக்கு பள்ளிக்கூடம் போற? பேசாம மாடு மேய்க்க போ.... இது கூட தெரியாம என்னத்த படிக்கற? எத்தன தரம் படிச்சாலும் உன் மண்டைல ஏறாதா?" இது போல் பல பேச்சுக்கள். அப்பப்போ அடி வேறு விழும்.
இதனால் என்ன பயன் இருக்க போகிறது? மேலும் அதிகமாக தான் அவர்கள் படிப்பில் திறன் குறையக்கூடும்.
- பெற்றோர்களே... அடித்து, கடும் சொற்களால் திட்டி படிப்பு என்பது ஒரு சுமை போல, பயம் தரும் ஒரு விஷயம் போல ஆக்காதீர்கள்.
- முதலில் அவர்களை மனதளவில் அமைதி ஆக்குங்கள். படிப்பின் முக்கியத்துவத்தை அமைதியாக சொல்லி புரிய வையுங்கள்.
- தன்னம்பிக்கை தரும்படி பேசுங்கள். பாசமாக பேசுங்கள். பின்னர் உங்கள் பாடத்தை ஆரம்பியுங்கள். விளையாட்டு தனமாக சொல்லி கொடுங்கள்.
- அவர்களை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
- சொல்லிக் கொடுத்த உடனேயே அவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் எதிர்பார்க்காதீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நன்றாக படிக்க தயார் செய்யுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் பலன் கிடைக்காவிட்டாலும் பொறுமையாக சொல்லி கொடுங்கள். நிச்சயம் முன்னேற்றம் தெரியும்.
- படிப்பில் அவர்களுக்கு பயம் நீங்கி, ஆர்வம் வரும் வரையில் காத்திருங்கள்.
- மனப்பாடம் அதிகமாக செய்ய சொல்வதை விட பலமுறை எழுதி பார்க்க வையுங்கள்.
- தொடர்ந்து நீண்ட நேரம் படிப்பிலேயே அவர்களை திணிக்காதீர்கள். சின்ன இடைவெளி கொடுங்கள்.
- முதலில் அடிக்காமல் சொல்லி கொடுங்கள். கல்வியை அவர்கள் விரும்பி ஏற்றுகொள்ள அதுதான் முதல் படி.
பெற்றோர்களே முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.
நட்புடன்
வசந்தா
No comments:
Post a Comment