சிவ மேனகை
சக்தி இன்றி சிவம் இல்லை ,,,,தந்தை தாய் இன்றி நாம் இல்லை,,உலகில் முதல் கோட்பாடு எனக்கு தெரிந்தவகையில் இது தான்;;! நான் எழுதும் பல விடயங்களை ஏற்றுகொள்ள விரும்பாத அன்பு நெஞ்சங்கள் என்னை மன்னிக்கவும் ,அன்னை தந்தையின் பாதங்களை செயலில் அல்லது மானசீக மாக தொட்டு கும்பிடும் உறவுகள் சிந்திக்கவும் ,குழந்தையின் உள்ளத்தில் அனாதரவு அற்றவர்கள் இதயத்தில் கடவுளை காணும் மனித நேயம் படைத்தவர்கள் யோசிக்கவும் ,,கடவுள் இல்லை என்று வாதிடுபவனை ஆன்மீக வாதிகள் பல வழிகளில் எதிர்வாதம் செய்கின்றார்கள் ,அவர்களும் பிரதி வாதம் செய்கின்றார்கள் ,,மேன்மை உள்ள மேலான சக்தி எங்கே ,,,! இறைவழிபாடு எவ்வாறு தோன்றியது என்பதை எந்த ஒரு வரலாற்று நூல்களையோ ஆதார சான்றுகளையோ கருத்துக்கு எடுக்காமல் பகுத்தறிவு ரீதியாக சிந்தித்து பார்ப்போமானால் சில விடை காண முடியாத வினாவுக்கு விடை கிடைக்கலாம். உலகின் முதலில் தோன்றிய இனங்களில் நாகரீகத்திலும் வழிபாட்டு முறையிலும் ஆய்வுகளுக்கு அப்பால் சென்றுபார்த்தாலும் இருப்பவர்கள் தாந்திரீய சைவர்கள் இவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடம் குமரி கண்டத்தில் ஒரு மலை அடிவாரத்தில் அது எந்த மலை என்று என்னால் குறிப்பிட முடியவில்லை ,அதை பின்னர் இன்றைய திபெத்தில் இருக்கும் இமயமலை என்று வாதிடுவோர் பலர். இதுவும் ஆராய்சிக்கு உரிய விடயம் .ஆனால் அவர்கள் வணங்கிய தெய்வம் கண்கண்ட தெய்வங்களான அம்மா அப்பா .காலப்போக்கில் அவர்கள் சிவலிங்கத்தை வணங்கினார்கள் இதுவே சக்தியோடு இணைந்த சிவம் அதாவது ஆண்குறியும் பெண்குறியும் இணைந்த நிலை.,அன்னை தந்தையை வழிபடுவதை எவரும் தடுக்கவோ விவாதிக்கவோ இடமில்லை. இது தெளிவான ஒன்று .காலபோக்கில் இயற்கைகளால் மனிதர்கள் பாதிக்கபட்டார்கள் ,அதனால் இயற்கைக்கு பயந்தும் நின்றார்கள் ,அந்த பயம் அவர்களை பணிந்து தணிந்து செல்ல அவற்றையும் வணங்குவதற்கு நிர்பந்திக்க பட்டார்கள் .( 2004 ,சுனாமி அமெரிக்காவின் இந்தோனேசிய கடலுக்கு அடியிலான அணுஆயுத பரிசோதனையால் தான் சுனாமி வந்தது என்று உண்மையை சொன்னால் இன்று நவீன உலகில் வாழும் எம்மவர்கள் கூட அமெரிக்காவை வணங்குவார்கள் .அது பற்றி இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம் )எனவே இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள இடி, மின்னல்,புயல் சூரியன் சந்திரன் ,நீர் நிலைகள் என அவற்றையும் வணங்கினார்கள் ,இவற்றுக்கு அடிப்படை காரணம் மனித மனத்தின் பயம் ,எம்மை யாராவது இயலாத அளவுக்கு அடித்தால் உயிர் போய் விடும் என்ற பயத்தில் அவர்களை கையெடுத்து கும்பிடுகின்றோம் ,இது தான் அன்றும் நடந்து இருக்கலாம் ,கொடிய பாம்புகள் பறவைகள் மிருகங்களிடம் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள காலப்போக்கில் அவற்றையும் வணங்கி இருக்கலாம் ,சரணடையும் பொழுது கை உயர்த்தவேண்டிய நிலை ஏன் உருவாகியது அதுவும் பயத்தின் அடிப்படையில் ஏற்படும் வணக்கமுறையே,,! ஆரம்பத்தில் இவ்வாறு வாழ்ந்துகொண்டு இருந்த மனித இனம் பல்வேறு வழிபாட்டு முறைக்களுக்கும் வாத பிரதி வாதிகளுக்கும் கருப்பொருளாகி தத்தளிக்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் காலப்போக்கில் ஏற்பட்ட இனத்தின் எண்ணிக்கையின் அதிகரிப்பால் ஏற்பட்ட வாழ்வியல் போட்டி அன்று தொடங்கிய நான் பெரிதா நீ பெரிதா என்ற நிலையே அவர்கள் குழுக்களில் வாழ்ந்த பெரிய மனிதர்கள் மிருகங்களை அடக்கியவர்கள் இயற்கை அழிவுகளில் இருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு நெறிப்படுத்தியவர்கள் தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள் அன்று வாழ்ந்த அறிவு ஜீவிகள் அவர்கள் ஒவ்வெருவரும் இயற்கையை கண்காணிப்பதாக குறிப்புகள் தங்கள் அறிவுக்கு தகுந்த முறையில் பரிமாறி வந்தார்கள் அவர்கள் எல்லாரையும் வழிநடத்தும் திறமையான ஒருவர் முழு முதல் கடவுள் ஆனார் .அவர்களால் அடக்கப்பட்ட மிருகங்கள் அவர்களுக்கு வாகனம் ஆக்க பட்டார்கள் ,குறிப்பாக நாங்கள் வீதியில் கல்வி கற்பித்த ஆசிரியரையோ அல்லது இன்னொரு ஆசானையோ கண்டால் மரியாதை செய்கின்றோம் அல்லவா அதுபோலவே அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் ஆனார்கள் ,,பிற்காலத்தில் பெயர்கொடுத்து வணக்கத்துக்கு உரியவர்கள் ஆக்கி இருக்கலாம் . காலப்போக்கில் இன்னொரு இனத்தில் வருகையால் மனிதனை மனிதன் சண்டை இட்டு அழிக்கும் நிலை தோன்றியது ,இதில் வென்றவர்கள் தேவர்கள் ஆனார்கள் தோற்றவர்கள் அரக்கர்கள் அசுரர்கள் ஆனார்கள் ,இந்த போரில் வென்ற தேவர்கள் தான் மூட நம்பிக்கைகளை மனித மனங்களில் விதைத்தவர்கள் இவர்கள் வெற்றி கலியாட்டங்களுக்காக பலியிடும் முறை படையல் போன்றவற்றை உருவாக்கி தாங்கள் உண்டு மகிழ்ந்தார்கள் வெல்பவன் சொல்வது வேதமாகி ,அவற்றை நான்கு வேதம் ஆக்கி ,இருக்கு யசூர் யாமம் அதர்வணம் என்று பெயர் இட்டு பிரிவினைக்கு வித்திட்டார்கள் .அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எல்லோரும் சிந்திக்கலாமே ,,இதனால் மோசம் போனவர்கள் இதுவரை மீளவில்லை மீளவும் போவதில்லை ,,,,,,,,சக்தி இன்றி சிவம் இல்லை , |
Search This Blog
Thursday, March 29, 2012
பகுத்தறிந்தால் என்னுள் தெய்வத்தை தேடலாமா ,,,,,!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment