பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண் தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.
இப்பாடலின் கதையை நீ புரிந்துகொள்ளவேண்டுமா
தவறிப்போக விழையும் பெண்ணைப்பற்றியது இது
குண்டுப்பூனையைப்போல திருப்தியுறுபவள் அவள்
மல்லாக்கப் படுத்துக்கிடக்கும்போதுமட்டும்.
நல்லது, இப்பெண் ஒரு ஆணை நேசித்தாள்
துரதிர்ஷ்டசாலிகளான சிலபெண்களால் செய்யமுடிவதைப்போல.
அவனுக்குக் கொட்டைகளிருந்தன ஆனால் அவை அவன் மண்டைக்குள்
இச்சூடான பெண்ணை படுக்கைக்கு அழைத்துச்செல்ல மறுத்தான்.
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண் தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.
அவளைக் காதலிக்கிறேன் என்றான்; சொன்னான்
அவள் தொடர்ந்து வாழ எதையும் தருவதாக.
விலங்கின் மென்மயிராடை வாங்கித்தருவதாக
முத்துகள் வாங்கித்தருவதாக.
ஆனால் அவள் யோனிக்கு ஒரு சுழலை அவன் தருவதாயில்லை
அவனைப் பெண்கள் பலர் தொடர்ந்துகொண்டிருக்க
இன்னும் எக்கச்சக்கப் பெண்களைப் புணர்ந்துகொண்டிருந்தான்.
ஆக அவனுக்காக இச்சோகப்பாடலை அவள் பாடினாள்
உலகம் எப்போதும் தவறாகவே இருப்பது பற்றி;
[பெரிய எழுத்துருவில்:]
செய்தால் இறப்பேன் செய்யாவிட்டால் இறப்பேன்
எழுதினால் இறப்பேன் எழுதாவிட்டால் இறப்பேன்
காதலில் விழுந்தால் இறப்பேன் விழாவிட்டால் இறப்பேன்
அவனுக்கு அவள் துச்சம், அவனுக்கு அக்கறையில்லை.
குளிர்காலக் காற்றின்முன் கத்தினாள் அவள்;
மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டாள்; மொட்டையடித்துக்கொண்டாள்’
கிட்டத்தட்ட செத்துவிழும்வரை உணவை மறுத்தாள்.
அவளிடம் அவன் ஓடிவரவில்லை, மனிதர்களும் அவர்களின்
தேவைகளும் அவனுக்கு நோய் ஏற்படுத்துகிறதென்றான்.
தனித்து அமர்ந்திருக்க மட்டுமே அவனுக்குப் பிடித்திருந்தது
தன் கிராமத்துவீட்டில் அவன் தொலைபேசிக்கருகே.
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண் தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.
ஆகவே கேளுங்கள் பெண்களே, உணர்ச்சியுறும் காதலிக்கும்
ஆணைத் தேடச் செய்யமுடிந்ததைச் செய்யுங்கள்.
தரமுடிந்ததையெல்லாம் அவனுக்குத் தாருங்கள்.
இன்னும்கூடத் தாருங்கள் நீங்கள் வாழவேண்டி.
No comments:
Post a Comment