இதைவிடக் கூடுதலாய்
ஒரு சொல்
இதைவிடக் கூடுதலாய்
கொஞ்சம் கவனம்
இதைவிடவும் கூடுதலாய்
அணைப்பு என
ஏங்குகிற மனதுக்குத் தெரியும்
இதுவே போதும் எனவும்.
ஒரு சொல்
இதைவிடக் கூடுதலாய்
கொஞ்சம் கவனம்
இதைவிடவும் கூடுதலாய்
அணைப்பு என
ஏங்குகிற மனதுக்குத் தெரியும்
இதுவே போதும் எனவும்.
Courtesy : Painting -anup giri
முன்பெல்லாம்
பலமுறை அவன்பெயரை
எதிரொலித்த மலை
இன்று மௌனமாக இருக்கிறது
காற்றில் அசைகிற
இலைகளில் அறிகிறாள்
யாரோ பின்தொடர்வதை
திரும்பிப்பார்க்க எண்ணம்
வருவது அவனாக இருக்கலாம்
ஒருவேளை
அவனாக இல்லாவிட்டால்
தவித்துப் போகும் தன்னை
எப்படிச் சமன்செய்வது
முன் நகரவும் விரும்பாமல்
திரும்பவும் இயலாத
நிலையிலிருக்கும் அவளை
அவன் நினைவினால்
தொடர்வதை உணர்கிறாள்
உடலெங்கும்
தளிரிலை துளிர்த்து.
மழைக்காலத்தைப் போலவே
ஒவ்வொரு பருவமும்
அவளுக்குள்
இளம் இறகுகளை துளிர்த்து
அவளது முதிர் இறகுகளை
உதிர்க்கவும் செய்கிறது
இம்முறை
காற்று உணர்த்திய ஈரத்தில்
நிலைகொள்ளா அந்தரங்கத்துடன்
பன்னீர் பூக்களின் வாசத்தை
அவளிடம் பூக்கச்செய்திருந்த
அவனுக்குப்
பறத்தலின் வெளியைப் பரிசளித்தாள்
மழை தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம்
பலமுறை அவன்பெயரை
எதிரொலித்த மலை
இன்று மௌனமாக இருக்கிறது
காற்றில் அசைகிற
இலைகளில் அறிகிறாள்
யாரோ பின்தொடர்வதை
திரும்பிப்பார்க்க எண்ணம்
வருவது அவனாக இருக்கலாம்
ஒருவேளை
அவனாக இல்லாவிட்டால்
தவித்துப் போகும் தன்னை
எப்படிச் சமன்செய்வது
முன் நகரவும் விரும்பாமல்
திரும்பவும் இயலாத
நிலையிலிருக்கும் அவளை
அவன் நினைவினால்
தொடர்வதை உணர்கிறாள்
உடலெங்கும்
தளிரிலை துளிர்த்து.
மழைக்காலத்தைப் போலவே
ஒவ்வொரு பருவமும்
அவளுக்குள்
இளம் இறகுகளை துளிர்த்து
அவளது முதிர் இறகுகளை
உதிர்க்கவும் செய்கிறது
இம்முறை
காற்று உணர்த்திய ஈரத்தில்
நிலைகொள்ளா அந்தரங்கத்துடன்
பன்னீர் பூக்களின் வாசத்தை
அவளிடம் பூக்கச்செய்திருந்த
அவனுக்குப்
பறத்தலின் வெளியைப் பரிசளித்தாள்
மழை தொடங்கிவிட்டது.
Sakthi Jothi
No comments:
Post a Comment