காற்றில் மிதக்கும் கல் ;-
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.
மேக்னடிக் ஹில் :-
உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.
இரட்டையர் கிராமம்:-
கொடிஞ்சி இரட்டையர் கிராமம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது.தற்போது 400 ஜோடி இரட்டையர்களை இந்த கிராமம் கொண்டிருக்கிறது. அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.
பறவைகள் தற்கொலை செய்யும் இடம்:-
அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக மாறி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வீடுகளுக்கு கதவுகளே கிடையாத கிராமம் :-
ஷனி ஷிங்க்னாபூர் ஷிர்டியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்! இங்குள்ள சனி பகவான் கோயிலில் வீற்றிருக்கும் சனீஸ்வரரே தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். திருட்டில் ஈடுபடுபவர்கள் சனீஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே சென்று சனீஸ்வரரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Posts : Good to Read,
wonders
No comments:
Post a Comment