ஜப்பானில் ஓராண்டில் நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான் தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடாகும்.
ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேஷ பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்கின்றனர்.
ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் "சுகாதார பொறியியலாளர்" என அழைக்கப்படுகின்றார்கள். அவர்களது சம்பளம் அமெரிக்க டாலரில் 5000 முதல் 8000 வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துபவர் எழுத்து மற்றும் வாய்மொழி தேர்வின் பின்னரே தெர்வு செய்யப்படுகிறார்.
ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான் தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார வளம் மிக்க நாடாகும்.
ஜப்பானில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.
ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பரீட்சைகளே இல்லை. கல்வியின் நோக்கம் விஷயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த அல்ல என்கிறார்கள்.
ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
ஜப்பானில் ஒரு வருடத்தில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் சராசரியாக சுமார் 7 வினாடிகள் மட்டுமே.
ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட உடன் அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாக வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
Related Posts : Good to Read
No comments:
Post a Comment