வரலஷ்மி விரதம் (27-07-2012) வெள்ளி கிழமை அன்று வருகிறது. கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது.
இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள். அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி.
சிவபெருமானும் சக்தியிடம் சமாதானம் செய்தார். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் பார்வதிதேவி சமாதானம் அடைந்து, “சித்திரநோமி… நீ துங்கபத்திரா நதிக்கரையில் கங்கையும் யமுனையும் சங்கமமாகும் நேரத்தில், சூரியன் கடகராசியில் இருக்கும்போது சுக்லபட்ச வெள்ளியன்று சுமங்கலி பெண்கள் பூஜிக்கும் போது, அவர்களின் பார்வையில் நீ படவேண்டும். அவர்கள் உனக்கு வரலஷ்மி பூஜையின் மகிமையை பற்றிச் சொல்லுவார்கள். அதன் பிறகு உன் சாபம் நீங்கும்.” என்றார்.
சிவகணமான சித்திரநோமி, பார்வதி கூறியது போல் அங்கிருந்த பெண்களிடம் ஸ்ரீவரலஷ்மி விரதத்தின் மகிமையை கேட்டவுடன் நோய் நீங்கியது. இவ்வாறு விரதத்தின் மகிமையை கேட்டாலே மகிமை என்றால் அதை முறையாக செய்தால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதை ஒரு அரசரின் சரித்திரத்தை படித்தால் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் படிக்க
ஸ்ரீவரலஷ்மி விரதத்தின் மகிமை -http://bhakthiplanet.com/2012/ 07/ varalakshmi-vratham-festival/
Related Posts : Spiritual
No comments:
Post a Comment