சிக்குன் குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன் குனியா நோய் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உள்ள தமிழகத்தைப் பாதித்தது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிக்குன் குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குனியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பரிசோதனை ரீதியாக எலிக்கு பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மனிதர்களுக்கு இந்த மருந்து எந்த விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின் இதற்கு அனுமதி கிடைக்கும். இந்த தடுப்பூசி தயாரிப்பு செலவும் குறைவு தான் என டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார். |
Search This Blog
Tuesday, August 16, 2011
சிக்குன் குனியா நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment