வரதட்சணை: அம்மி மிதித்தவளை திரும்பி மிதித்தார்கள் கிரைண்டர் வராததால் தொ(ல்)லைக்காட்சி பெட்டி!: தொலைக்காட்சி பார்க்கும் நேரம் விருந்தினர் வருகை - விசாரிக்க வராமலா போகும் விளம்பரம் சுமை: அறிவின் துளிர் சுமக்க முடியவில்லை புத்தகச் சுமை வாழ்க்கைப் பாடம்: கிளறினால் கிடைக்கும் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் கோழி மதக்கலவரம்: கருவறையில் பத்திரமாய் கடவுள்கள் கல்லறையாய் தெருவெங்கும் அப்பாவிகள்!! நேரம்: நேற்று அழிந்த எழுத்து நாளை கிடைக்காத இனிப்பு இன்றே சுவைக்கும் கனி
எடைக்குறைவு: ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது எடை குறைவாய்! புகை அது பகை: அலறியது காற்று ஒளிய இடமில்லை வாகனப்புகை என்றும் அன்புடன்... பொறிஞர் வி.நடராஜன் |
No comments:
Post a Comment