Search This Blog

Friday, May 20, 2011

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள்

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள்  1.அமெரிக்க பெருவணிகவளாகம் (Mall of America -Minnesota, USA)



இந்த மாபெரும் பெருவணிக வளாகத்தில் மையப் பூங்கா, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. இந்த பெரு வணிக வளாகத்தின் திருமண மண்டபத்தில் இதுவரையில் 5000 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளன.

அமெரிக்க பெரு வணிகவளாகம் 1992ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வட அமெரிக்காவில் காணப்படும் மூன்றாவது பாரிய பெரு வணிக வளாகமாக அமெரிக்க பெருவணிக வளாகம் கருதப்படுகின்றது.
இந்த பெருவணிக வளாகத்தின் 4,200,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டமைந்த பகுதி வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது எட்டு டென்னிஸ் அரங்குகளை உள்வாங்கக் கூடியளவு விசாலமானது.

அமெரிக்க பெருவணிக வளாகம் உலகில் அதிகளவான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. வருடாந்தம் 40 மில்லியன் மக்கள் (பெருவணிக வளாகம் அமைந்துள்ள மினிசோட்டா மாநிலத்தின் சனத்தொகையின் எட்டு மடங்கு) குறித்த பெருவணிக வளாகத்திற்கு விஜயம் செய்கின்றனர்.
வாடிக்கையாளர் ஒருவர் பெருவணிக வளாகத்தின் ஒவ்வொரு வளாகத்திலும் தலா பத்து நிமிடம் செலவிட்டால் ஒட்டுமொத்த கடைத் தொகுதிகளுக்கும் விஜயம் செய்ய 86 மணித்தியாலங்கள் தேவைப்படும். திரையரங்கு, நிக்கலோடியொன் மையப்பூங்கா, பாரிய மீன் தொட்டி மற்றும் நகைச்சுவை அரங்கு ஆகிய பல்வேறு மாறுபட்ட அம்சங்கள் இந்த பெருவணிக வளாகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2.எமிரேட்ஸ் பெருவணிக வளாகம் (Mall of the Emirates -Dubai)





எமிரேட்ஸ் பெருவணிக வளாகம் பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக கட்டடங்ககை; கொண்டமைந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டுபாயில் அமைந்துள்ள இந்த பெரு வணிக வளாகம் 223,000 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்டது. பொழுதுபோக்கு, களியாட்டம், வர்த்தகம் ஆகிய பல்வேறு அம்சங்களைத் தாங்கியதாக இந்த வணிக வளாகம் திகழ்கின்றது.

இந்த பெருவணிக வளாகத்தில் 450 சில்லறை வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கின் முதலாவது ஸ்கீ டைவிங் விளையாட்டு அரங்கு இந்த வணிக வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது. மெஜிக் பிளானட், 14 திரைகளைக் கொண்ட திரையரங்கம், கலைக்கண்காட்சிக் கூடம் போன்ற பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
ஐந்து நட்சத்திர ஹோட்டலான கிம்பின்ஸ்கீ உள்ளிட்ட இரண்டு ஹோட்டல்கள் இந்த வளாகத்தில் காணப்படுகின்றது. டென்னிஸ் அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என நானாவிதமான பொழுது போக்கு அம்சங்கள் இந்தக் கட்டத் தொகுதியில் காணப்படுகின்றது.

3.தி க்ராண்ட் கெனல் சொப்பர்ஸ் (The Grand Canal Shoppes -Las Vegas, USA)




தி க்ராண்ட் கெனல் சொப்பர்ஸ் பெரு வணிக வளாகம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் நெவேடாவில் அமைந்துள்ளது. இந்த பெரு வணிக வளாகம் 500,000 சதுர அடி பரப்பளவுடையது. பிரபல வென்டியன் ஹோட்டல் என்ட் கசினோ களியாட்ட மையத்திற்கு அருகாமையில் இந்த கட்டடம் அமையப் பெற்றுள்ளது.

1999ம் ஆண்டு முதல் இந்தப் பெரு வணிக வளாகம் இயங்கி வருகின்றது. இந்த வணிக வளாகத்தில் மிக அதிகளவான நேரடி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த பெரு வணிக வளாகத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். அமெரிக்காவில் அதிகளவான வாடிக்கையாளர்கள் செல்லும் வணிக வளாகமாக தி க்ராண்ட் கெனல் கருதப்படுகின்றது.

4.டேக்கியோ மிட் டவுண் வணிக வளாகம் (Tokyo Midtown Mall -Tokyo, Japan)






டேக்கியோவின் மிட் டவுண் பெரு வணிக வளாகம் 2007ம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தின் பிரான கோபுரத்தில் உலகின் முதனிலை நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. யாகூ, ரிச் கார்லடன் ஹோட்டல், புஜீ எக்ஸிரொக்ஸ், ஜோன் ஹோப்கின்ஸ் வைத்தியசாலை உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

உலகின் முன்னணி பண்டங்களை கொள்வனவு செய்வதற்கும் உலகின் மிகப் பிரபலமான சமையற் கலை வல்லுனர்களின் உணவுத் தயாரிப்புக்களை சுவைக்கவும் அருமையான இடமாக மிட் டவுண் பெருவணிக வளாகம் திகழ்கின்றது.

5.வாபீ பெருவணிக வளாகம் � டுபாய்(Wafi Mall -Dubai)




வாபீ பெரு வணிக வளாகத்தில் 350 முதன்மையான கடைத் தொகுதிகள் காணப்படுகின்றன. உலகின் முதனிலையானதும் தனித்துவமானதுமான சில பண்டங்களை இங்க கொள்வனவு செய்ய முடியும். சில பண்டங்கள் வாபீயில் மட்டுமே கொள்வனவு செய்ய முடியும் என்பது இந்த வளாகத்தின் சிறப்ம்சமாகும்.

கலை, நாகரீகம், உணவு, பொழுது போக்கு மற்றும் வாழ்க்கை முறை எதுவாக இருந்தாலும் அது வாபீ பெரு வணிகளாகத்தில் எளியைமான வகையில் காணப்படுகின்றது. 2008ம் ஆண்டிற்கான சிறந்த பெரு வணிக வளாகம், சிறந்த ஹோட்டல், சிறந்த புதிய ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த வணிக வளாகம் பெற்றுக் கொண்டது. டுபாயில் காணப்படும் உலகத் தரம் வாய்ந்த பெருவணிக வளாகமாக வாபீ கருதப்படுகின்றது.

6.வெஸ்ட் எட்மன்டொன் � அல்பெர்ட்டா கனா (West Edmonton Mall -Alberta, Canada)





வட அமெரிக்காவின் மிகப் பெரியதும் உலகின் ஐந்தாவது விசாலமானதுமான பெரு வணிக வளாகமாக கனடாவின் வெஸ்ட் எடமன்டொன் கருதப்படுகின்றது. அலைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய உள்ளக நீர்ப் பூங்கா இந்த வாளகத்தில் காணப்படுகின்றது.

1981ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த பெருவணிக வளாகத்தில் 800 கடைகள் காணப்படுவதுடன், 20,000 வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனத் தரிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிலெக்ஸீ லேண்ட் மையப் பூங்கா, களியாட்ட விடுதிகள் போன்றன காணப்படுகின்றன. இந்தப் பூங்காவில் உள்ளக குளமொன்று காணப்படுகின்றது. இதில் கடல் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. தேவாலயம், நான்கு வானொலி ஒலிபரப்பு நிலையங்கள், சினிமா அரங்கு, ஹோட்டல்கள் என்பனவும் இந்த பெருவணிக வளாகத்தை அலங்கரிக்கின்றன.

7.தி டுபாய் பெருவணிக வளாகம் (The Dubai Mall � Dubai)





உலகின் மிகப் பெரிய பெரு வணிக வாளாகமாக தி டுபாய் வணிக வளாகம் கருதப்படுகின்றது. மொத்தபரப்பளவின் அடிப்படையில் உலகின் மிக விசாலமான பெரு வணிக வளாகமாக டுபாய் வணிக வளாகம் திகழ்கின்றது. இந்த வணிக வளாகத்தின் மொத்தப் பரப்பளவு 12.1 மில்லியன் சதுர அடியாகும்.

1200 கடைத் தொகுதிகள் மற்றும் கின்னஸ் சாதனை படைத்த பாரிய மின்தொட்டி என்பன இந்த பெருவணிக வளாகத்தில் காணப்படுகின்றது. 250 அறைகளைக் கொண்ட சொகுசு ஹோட்டல், 22 திரைகளைக் கொண்ட சினிமா அரங்கு, 120 ஹோட்டல்கள் மற்றும் கபேக்கள் காணப்படுகின்றன.

பெரு வணிக வாளகத்திற்குள் வர்த்தக வளாகம் என்ற எண்ணக்கருவிற்கு அமைவாக கடைத் தொகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. உதாகரணமாக தங்க ஆபரண கடைத்தொகை, ஆடை கடைத் தொகுதி என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

8.பெய்ஜிங் பெருவணிக வளாகம் (Beijing Mall �Beijing, China)



இந்த பெரு வணிக வளாகம் உலகின் மிகப் பெரிய பத்து வணிக வளாகங்களின் ஒன்றாக திகழ்கின்றது. மேலும் உலகின் மிகவும் சொகுசான வர்த்தக வளாகங்களில் ஒன்றாகவும் பெய்ஜிங் வர்த்தக வளாகம் அமையப் பெற்றுள்ளது. இந்த வணிக வளாகத்தில் கடைகளை வாடகைக்கு விடக் கூடிய பரப்பளவு 3.4 மில்லியன் சதுர அடிகளாகும்.

9.இஸ்தான்புல் ஷிவாஹிர் (Istanbul Cevahir �Istanbul, Turkey)



இஸ்தான்புல் ஹிவாஹிர் பெருவணிக வளாகம் ஐரோப்பாவின் மிகப் பெரிய வணிக வளாகமாகக் கருதப்படுகின்றது. துருக்கியின் இஸ்தான் புல்லில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 343 கடைகளும், 50 ஹோட்டல்களும், 12 திரையரங்குகளும், போவலிங் விளையாட்டு அரங்கும்;, சிறிய றோலர் கோஸ்டர் ஒன்றும், உலகின் இரண்டாவது மிகப் பெரிய சுவர்க்கடிகாரம் ஆகியன இந்த வணிக வளாகத்தில் அமையப் பெற்றுள்ளன.

10.கிங் ஒப் ப்ருசியா பெரு வணிக வளாகம் (King of Prussia Mall -Pennsylvania, USA)



உலகின் மிக முதனிலையான ஏழு கடைத்தொகுதிகள் இந்த பெரு வணிக வளாகத்தில் காணப்படுகின்றன. இந்த வணிக வளாகத்தில் 400 கடைகள் அமையப் பெற்றுள்ளன. ப்ருசியா வணிக வளாகம் சில்லறை வர்த்தக நிலையங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு சில்லறை வர்த்த நிலையங்கள் காணப்படுகின்ன.

11.ஸ்லோட் தர்சாரி பெரு வணிக வளாகம் (Zlote Tarasy Mall -Warsaw, Poland)




போலந்து வார்ஷொவில் ஸ்லோட் தர்சாரி பெரு வணிக வளாகம் அமையப் பெற்றுள்ளது. வர்த்தகக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் சார் கட்டடங்கள் ஆகியன அதிகளவில் இந்த வளாகத்தில் காணப்படுகின்றது. 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி இந்த வளாகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. போலந்து மத்திய ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த பெரு வணிக வளாகம் அமைந்துள்ளது.

12.வெஸ்ட்பீல்ட் லண்டன் பெரு வணிக வளாகம் (Westfield London Shopping Centre -England)




வெஸ்ட்பீல்ட் லண்டன் பெரு வணிக வளாகம் செப்பர்ட்ஸ் புஸ்ஸில் அமைந்துள்ளது. 2008 நவம்பர் மாதம் 30ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்த பெரு வணிக வளாகத்தை வெஸ்ட்பீல்ட் குழும நிறுவனம் நிர்மாணித்தது.

சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த வளாகத்தில் 150,000 சதுர மீற்றர் பரப்பளவுடைய பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த வளாகத்தின் விசேட அம்சமாகும். வணிக வளாகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகப் பெரிய பெரு வணிக வளாகமாக இந்த வணிக வளாகம் திகழ்ந்தது.

No comments:

Post a Comment