Search This Blog

Monday, May 30, 2011

நீங்களே , நல்லவனா ? கெட்டவனான்னு ஒரு சுய பரிசோதனை


நாயக்கர் மாமா ! நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

|
 அன்பே சிவம் படத்துலே கமல் சொல்வாரே. கஷ்டப்படுற ஜீவனைப் பார்த்து , இரக்கப்பட்டு , உன்னாலே அந்த கஷ்டத்தை போக்குறதுக்கு முடிஞ்சா, நீயும் கடவுள் தான்னு. " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ".... னு ஒரு மனதுக்கு இதமான மெலடி பாட்டு கேட்டு இருப்பீங்க.. இல்லையா? இதே கருத்து தான் சுவாமி விவேகானந்தரும் சொல்றார். நீங்களும் கடவுளாக முடியும்.

டார்வின் தியரி என்ன சொல்லுது ? மனித இனமே குரங்கிலிருந்து வந்தது. அப்படின்னு சொல்றார். சரி. Discovery சேனல் லே  " Evolution of Human being " னு பட்டையைக் கெளப்புற ப்ரோக்ராம் அடிக்கடி வருது. எந்த ஒரு இனமும்   " Survival of the fittest " தியரிப்படி தான் உருவாகுது. ஓரறிவுள்ள ஜீவ ராசி , எப்போ அந்த ஒட்டு மொத்த இனத்துக்கே ஒரு விஷயத்துலே அழிவு வருதுன்னு நெனைக்குதோ ,  அப்போ அடுத்த இனம் ஆரம்பிக்குது. மீன் , அடுத்து தவளை, பறவை, ஊர்வன, அடுத்து பாலூட்டிகள். அந்த பாலூட்டிகள்ளேயும்  , மனித இனம் ... ஆறறிவு கொண்டு , இருக்கும் ஜீவ ராசிகளிலேயே மகத்தான தன்மை கொண்டு இருக்குது. சிந்திக்கும் திறன் , அதைவைத்து முடிவெடுக்கும் திறன்.. 
பேசக் கூடிய திறன் . இப்படி, 
 சிங்கம், புலி கூட அதுக்குள்ளே communication வைச்சுக்கிடுதே. ஏன், செடி , கொடிகள் -- அதுக்குள்ளே எவ்வளவோ communication வைச்சுக்கிடுதே. ... இப்போ நான் சொல்ல வரும் விஷயம் என்னனு கேட்டா... இந்த எல்லா ஜீவ ராசிகளும் , இயற்கையை நல்ல விதமா , முழுவதுமா உணர்ந்து , அதற்கு ஏற்ப , தன்னை பாதுகாக்க என்ன செய்யணுமோ,, அதை செய்யுது... 
ஒரு பூகம்பமோ , அடை மழையோ  வருதுனா , இல்லை பெரிய இயற்கை பேரிடர் வருதுனா ... முதல்லே இந்த ஐந்தறிவு ஜீவ ராசிகள் , அதை டக்க் குனு உணர்ந்துக்கிடுது .... 

ஆனா மனிதனுக்கு...?  அந்த உணரும் திறன் இயற்கையிலேயே  ஒவ்வொரு ஜீவனுக்கும் இருந்தும், அதை உணராமல் , மெல்ல மெல்ல அந்த மூளை மழுங்க அடிச்சுடுது.   தேவையான விஷயங்கள் மட்டும் எடுத்துக்கிட்டு , இந்த இயற்கையை உணர்வது தேவை இல்லாத ஒரு விஷயமாக நம்ம ஒட்டு மொத்த இனமே நெனைச்சுக்கிட்டோம் போலே.

 சித்தர்கள் , பெரிய பெரிய மகான்கள் - இதை சர்வ சாதாரணமா உணர்ந்துக்கிடுறாங்க. ஒரு மனிதனை பார்த்ததுமே , அவனது பூர்வ ஜென்மங்களில் இருந்து , இப்போ நடக்குற விஷயம், எதிர்காலம் எல்லாம் - கண் முன்னாலே தெரியுது..  இதை எல்லோரும் செய்ய முடியாதா..? 

மனித இனம் அப்படின்னு ஒன்னு இருக்குதே.. இன்னும் சில கோடிக்கணக்கான வருஷத்துக்கு அப்புறம்.. அடுத்த இனம் ஒன்னு வரலாம் இல்லையா.. ? அதை ஏன் .. கடவுள் இனம் னு எடுத்துக்கக் கூடாது.. ? தேவர்கள் அப்படின்னு இப்போ நாம சொல்றமே.. அவங்களா இருக்கக் கூடாது ? .. ஒவ்வொரு மனிதனும் கடவுளா மாறனும். அடுத்த லெவெலுக்கு வரணும். எத்தனையோ கோடி வருஷங்களுக்கு அப்புறம் செய்ய வேண்டிய விஷயத்தை , ஒரு சிந்திக்க தெரிஞ்ச மனுஷனா , ஏன் இப்போ இருந்தே , நாமே செய்யக் கூடாது. கடவுளா மாறுவது இரண்டாம் பட்சம், முதல்லே ஒரு நல்ல மனுஷனா மாறுவோமே!

ஒருத்தர் வீட்டிலே நாய் வளர்க்கிறார் னு வைச்சுப்போம். அந்த நாய் நமக்கு விசுவாசமா இருக்கிற வரைக்கும், அவர் அந்த நாயை நல்ல விதமா கவனிச்சுக்கிடுவார் இல்லையா? உங்க கிட்டே ஒருத்தர் முழு விசுவாசமா, உங்களை நம்பி இருந்த இருந்தா . அவர் நன்றி , விசுவாசமா இருக்கிறவரைக்கும் - அவருக்கு தேவையான எல்லா விஷயமும் ,நீங்க பார்த்துக்கிடுவீங்களா , மாட்டீங்களா ? 

அந்த மாதிரி - ஒரு நன்றி , அர்ப்பணிப்பு உணர்வு -  நமக்கு , கை , கால் நல்ல படியா கொடுத்து - குறைந்த பட்சம் ஒரு மனுஷனா நம்மை படைச்ச இறைவன் மேலே நமக்கு இருக்கணும்.

அதே மாதிரி  , ஒரு விசுவாசம் , அர்ப்பணிப்பு - நமக்கு ஏன் நம்ம குடும்பத்துலே வர மாட்டேங்குது ? நமக்காக  எவ்வளவோ கஷ்ட , நஷ்டங்களை சமாளிச்ச, சுகங்களை தியாகம் பண்ணின நம்ம பெத்த அம்மா , அப்பா .. மனைவி  / கணவன் , ....  நம்ம வாழ்வதுக்கே ஒரு பிடிப்பு ஏற்படுத்தின நம்ம குழந்தைகள் , கஷ்டமான நேரத்திலே , நமக்கு கை கொடுத்த நண்பர்கள்.. இப்படி எல்லோர் மேலேயும் , உங்கள் அன்பு பொங்கி வழியட்டும்... பேசும்போது , ஒரு நேசத்துடன் பேசிப் பழகுங்கள்.. நமக்கு பிடிச்ச மாதிரி , அவங்க எல்லோரும் இருக்கணும்னா , நாம அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் இல்லையா.. 

நாயகன் படத்திலே நாயக்கர் மாமா , நீங்க நல்லவரா ? கெட்டவரா னு கேள்வி கேட்பானே ? அதே மாதிரி உங்களுக்கு நீங்களே , நல்லவனா ? கெட்டவனான்னு ஒரு சுய பரிசோதனை செஞ்சு பாருங்க. அந்த மாதிரி நல்ல மனுஷனை உருவாக்க , கீழே கொடுக்கப்பட்டுள வழிகள் உங்களுக்கு உதவியா இருக்கும் .   தர்ம சக்கரம் பழைய இதழ்லே கெடைச்சது. அப்படியே உங்களுக்காக : 
http://www.extramirchi.com/wp-content/uploads/2009/08/Kamal_Hassan_in_Nayagan.jpg
1. ஒரு உத்தமமான ஆன்மீக குருவை அடைதல்.
2. அந்த குருவிடமிருந்து தீட்சை பெறுதல்.
3. குருவின் ஸேவையில் ஈடுபடுதல்.
4. குருவிடமிருந்து போதனைகளைப் பெற்று பக்திபரமான சேவையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்.
5. நமது பழைய ஆசார்யர்களின் சுவடுகளை பின்பற்றி குருவின் போதனைகளைப் பின் பற்றுதல்.
6. பரமாத்மாவை திருப்தி செய்ய எதையும் விட்டுக்கொடுத்தல், எதையும் ஏற்றுக் கொள்ளுதல்.
7. பக்திபரமான ஸேவை செய்வதற்கான வசதிகளுடன் இருந்து கொண்டு அதிகமானவற்றைக் குறைத்துக் கொள்ளுதல்.
8. விரதம் அனுஷ்டித்தல் (எண்ணங்கள், சொற்கள், செயல் ஆகியவற்றில் தீமையைத் தவிர்த்தல்).
9. பசுக்கள், ப்ராஹ்மணார்கள், வைஷ்ணவர்கள் மற்றும் ஆலமரம் போன்ற புனித மரங்களை வணங்குதல்.

10. புனித நாமங்கள் மற்றும் தேவதைகளுக்கு எதிராக தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
11. நாஸ்திகர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும்.
12. நிறைய சிஷ்யர்கள் வேண்டும் என்று விரும்பக் கூடாது.
13. பல புத்தகங்களை அரை குறையாகப் படித்து விட்டு படித்தவர்போல் நடித்து மற்றவர்களை தம் பால் திருப்பக் கூடாது. பக்திபரமான ஸேவைக்கு பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவை படித்தாலே போதுமானது.
14. லாப, நஷ்டத்தால் கலக்கம் அடையக்கூடாது.
15. எந்தக் காரணத்திற்காகவும் கவலையில் மூழ்கிவிடக் கூடாது.
16. உப தேவதைகளை வணங்காவிட்டாலும், அவர்களை நிந்திக்கக் கூடாது. மற்ற மத புத்தகத்திலுள்ள விஷயங்களை பின்பற்றா விட்டாலும் அதிலுள்ள விஷய்ங்களை நிந்திக்கக் கூடாது.
17. கடவுளையோ, அவர் பக்தர்களையோ நிந்திப்பதில் ஈடுபடக்கூடாது.
18. ஆண் பெண் உறவு போன்ற வீணான விஷயங்களைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக்கூடாது.
19. அனாவசியமாக எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது.
20. கடவுளின் புகழ் கேட்டல்.
21. அவர் புகழ் பாடுதல்.
22. அவரை தியானித்தல்.
23. கடவுளின் பாத கமலங்களை தியானம் செய்தல், மற்றும் அவருக்கும் அவர் பக்தர்களுக்கும் ஸேவை செய்தல்.
24. அவரை வணங்குதல்.
25. அவரை பிரார்த்தித்தல்.
26. தன்னை அவருடைய நிரந்தர ஸேவகனாக நினைத்தல்.
27. தன்னைக் கடவுளின் நண்பனாக நினைத்தல்.
28. அவருக்கே எல்லாவற்றையும் ஸமர்ப்பித்தல்.
29. தெய்வத்தின் முன் ஆடுதல்.
30. தெய்வத்தின் முன் பாடுதல்.
31. தன் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும் அவரிடம் கூறுதல்.
32. அவர் முன் வணங்குதல்.
33. சரியான சமயத்தில் எழுந்து நின்று குருவிற்கும் கடவுளுக்கும் மரியாதை செலுத்துதல்.
34. கடவுள் மற்றும் குருவின் ஊர்வலத்தில் பங்கேற்றல்.
35. கடவுளின் புனித ஸ்தலங்களுக்கும், கோயில்களுக்கும் செல்லுதல்.
36. கோயிலை வலம்வருதல்.
37. சுலோகங்கள் கூறுதல்.
38. மனத்தில் கடவுள் பெயரை மெதுவாக உச்சரித்தல்.
39. பிரார்த்தனைக் கூட்டத்தில் கடவுள் பெயரை உரக்கக் கூறுதல்.
40. கடவுளுக்கு அர்ப்பித்தபின் அர்ப்பித்த ஊதுவத்தி மற்றும் மலர்களின் வாசனையை நுகர்தல்.
41. மீதியிருக்கும் பிரசாதத்தை உட்கொள்ளுதல்.
42. தினமும் மற்றும் விசேஷ உற்சவ காலத்திலும் ஆரத்தியில் பங்கேற்றல்.
43. தெய்வச் சிலையை ஒழுங்காகப் பராமரித்தல்.
44. தனக்கு மிகவும் விருப்பமானதை கடவுளுக்கு அர்ப்பித்தல்.
45. தெய்வத்தின் பெயர் மற்றும் உருவ தியானத்தால் சமயத்தைப் போக்குவது.
46. துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றுவது.
47. பக்தர்களுக்கு ஸேவை செய்தல்.
48. புனித ஸ்தலத்தில் வசிப்பது.
49. ஸ்ரீமத் பாகவதத்தின் விஷயங்களை ரசிப்பது.
50. பகவானுக்காக எந்த விதமான சவால்களையும் சமாளிப்பது.
51. எப்பொழுதும் கடவுளின் கருணைக்காக ஏங்குவது.
52. பக்தர்களுடன் பகவானின் அவதார ஜன்ம நட்சத்திரம் போன்ற நாட்களை கொண்டாடுவது.
53. பகவானைப் பூரணமாக சரணடைவது.
54. கார்த்திகை மாத விரதங்கள் போன்றவற்றை அனுஷ்டிப்பது.
55. உடலில் தார்மீக சின்னங்களை அணிந்து கொள்ளுதல்.
56. உடலில் கடவுளின் பெயர்களை குறித்துக் கொள்ளுதல்.
57. கடவுளுக்கு அணிவித்த மாலைகளை ஏற்றுக்கொள்ளுதல்.
58. சரணாமிருதத்தை உட்கொள்ளுதல்.
59. பக்தர்களை தொடர்பு கொள்ளுதல்.
60. கடவுளின் நாமத்தை உச்சரிப்பது.
61. ஸ்ரீமத் பாகவதத்தை சிரவணம் செய்தல்.
62. பவித்திர ஸ்தலத்தில் வசித்தல்
63. மற்றும் தெய்வத்தை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் வணங்குதல்.

======================================
அப்பாடி! எல்லாத்தையும் எழுதியாச்சு. மன சாட்சிக்கு விரோதமா இல்லாம , இதிலே எத்தனை விஷயங்கள் நம்மாலே கடை பிடிக்க முடியுமோ, முயற்சி பண்ணலாமே !


Read more: http://www.livingextra.com/2011/05/blog-post_28.html#ixzz1NoXNGXvF

No comments:

Post a Comment