Search This Blog

Tuesday, July 4, 2023

எழுத்தும் தொழில்நுட்பமும்-ஜாக் டெரிடா PHILOSOPHY: Jacques Derrida

ஜாக் டெரிடா
ஜூலை மாதம் 15ஆம் தேதி பிறந்த ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் ஜாக் டெரிடா ’கட்டுடைப்பு’ என்ற விமர்சன முறைமையை உருவாக்கியவர். பல சமயங்களில் ‘கட்டுடைப்பு’ என்ற சொல்லின் பயன்பாடு குறித்து வருத்தப்பட்டிருக்கிறார் டெரிடா. அவர் எல்லாத் துறைகளிலும் கட்டுடைப்பு கோட்பாட்டைப் பயன்படுத்தி செய்த ஆய்வு பெரும் புகழை ஈட்டித் தந்தது.
எழுத்தாக இருக்கும் அனைத்தும் பதிவு செய்யத் தொடங்கிய பின் மொழியின் கீழ் வருவதான இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. எழுத்தின் வடிவத்தைக் காட்ட தொழில்நுட்பம் தேவைப்பட்டது. அது குறிப்பிட்ட பாணி, வகைமாதிரி என்ற பல முறைமைகளில் சொல்லப்படலாம். அவை எல்லாம் நன்கு அறிமுகமானவைதான். ஆனால் குறிப்பிட்ட வகையில் எழுதப்படுவதெல்லாம் பொருள் கொடுக்கின்றனவா என்பது குறித்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் பொருள் தருதல் என்பதன் மூலாதாரம் எழுதும் தொழில்நுட்பத்துடன் இணைகிறதா என்பது கேள்விக்குரியது.
எனவே மொழி, எழுத்து, பேச்சு என்பதை வேறுபடுத்திப் புரிந்துகொள்வதன் மூலமே இவற்றின் மூலாதாரத்தை அறியமுடியும். இப்போது ‘மொழி’ என்று குறிப்பிட்டால், அதில் செயல்பாடு, இயக்கம், சிந்தனை, பிரதிபலிப்பு, நனவுநிலை, நனவிலி, அனுபவம், பாதிப்பு என்று எல்லாமே அடங்கிவிடுகிறது.
இப்போது ‘மொழி’ என்பதற்குப் பதிலாக ‘எழுத்து’ என்பதை இவற்றுக்கு எல்லாம் பயன்படுத்தினால் அவற்றின் சாராம்சம் வெளிப்படும். ஒளிப்பதிவு, நடன அமைப்பு, வரைபட எழுத்து, இசையின் குறிப்பு போன்றவற்றில் எழுத்தின் சாராம்சம் ஒலியிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
அதே போல் ராணுவத்திற்குரிய எழுத்து, அரசியல் எழுத்து, போன்றவைத் தொழில்நுட்பத்தை நாடும் எழுத்தாக உள்ளன. உயிரியல் துறைக்கான எழுத்து, ஒவ்வொரு உயிரணுவுக்கும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இந்த எல்லாத் துறைகளிலும் இரண்டாம்பட்சமாகக் கருதப்பட்ட எழுத்து அடிப்படை சாராம்சத்தைக் கொண்டதாக உள்ளது.
இணையதள எழுத்து என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஏனெனில் அது ஆன்மா, வாழ்வு, மதிப்பு, தேர்வு, நினைவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் எழுத்துதான் மனிதனிலிருந்து வேறுபட்ட செயற்கை ஆற்றல் கொண்ட எந்திர மனிதனை உருவாக்குகிறது. எனவே ஒலியன் என்ற ஒலித்துணுக்கு போல் எழுத்தின் துணுக்கு அல்லது வரிவடிவம்தான் எந்த ஒரு பொருளின் மூலாதாரமாக, பொருள் தரும் ஒன்றாக, அடிப்படை அலகாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்துதான் அர்த்தத்திற்கான மூலாதாரம் உருவாகிறது.
ஜாக்டெரிடா
Thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment