Search This Blog

Saturday, March 16, 2019

அகத்தியர்



பொதிகைமலையில் 18 சித்தர்களில் முதன்மையான சித்தராக கருதப்படும் அகத்தியர் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
18 சித்தர்களில் முதல் சித்தராக போற்றப்படுவர் அகத்தியர். இவர், வேத வித்துக்களாக சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அகத்தியருக்கு பல வேத மந்திரங்கள் இயற்றிய பெருமை உண்டு.
அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.[1] இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரைஆகும்.

Sri Sakthi Sumanan

நண்பர் ஒருவர் அகத்தியரின் சரித்திரம் என்று நூல் ஒன்று பகிர்ந்திருந்தார், பலரும் அகத்தியர் எந்தக்காலத்தில் வாழ்ந்தவர் அகத்தியர் என்று பாடல்களில் இருப்பதெல்லாம் பிற்காலத்தமிழில் இருக்கின்றனவே என்றெல்லாம் பல்வேறு சந்தேகங்கள் கேட்டிருந்தனர்.


அகத்தில் உள்ள ஈசனுக்கு எப்படி காலக்கோட்டில் பகுத்த சரித்திரம் எழுதுவது.

அகத்தில் உயிரான ஈசனை அறிவிக்கும் பேருணர்வு அகத்தியம்,
அந்தப் பேருணர்வை ஈர்த்தால் அகத்தில் உருவாகும் தீ அகத்தியம்
அகத்திலுள்ள தீ - அகத்தீ - எல்லாத்தீமைகளையும், நஞ்சுகளையும் எரித்து நஞ்சை வென்ற பேரொளி நிலை தரும் உணர்விற்கு பெயர் அகத்தியம்
அகத்தியர் என்பது ஒரு பேருணர்வு - Supra conciousnesses, இந்த உணர்வை எம்மில் ஈர்க்க எம்மை தூய்மைப்பட்டுத்தும் ஆற்றல் அகத்தியம்.
இந்த உணர்வை பலரும் பல்வேறு காலத்தில் ஈர்த்து பெற்று அகத்தியராகவும், பல்வேறு பெயர் தாங்கியும் வெளியிட்டும் உள்ளனர்.
இந்தப்பிரபஞ்சத்தில் எதுவெல்லாம் நஞ்சை வென்று தீமையை வென்று அம்ருதத்துவத்தில் செலுத்துகிறதோ அந்த உணர்வுகளெல்லாம் அகத்தியம்.
அகத்தியரும் குடும்ப வாழ்க்கையும்
********************************
குரு நாதர் உரைத்தபடி....

அகத்தியர் என்ற உணர்வு நஞ்சினை வெல்லும் தீமையை வென்று ஒளி நிலையடைய வழிகாட்டும் பேருணர்வு எப்படி செயற்படுகிறது என்ற விளக்கமே லோபாமுத்திரை சமேத அகத்திய மாமகரிஷியாக புராணங்களில் உரைக்கப்பட்டது.

உலகிற்கு, உயிற்கு மங்களம் உண்டாக்கும் ஸ்ரீ வித்யாவினை முதலில் பூவுலக மானிடருக்கு அறியக்கூடிய வகையில் ஈர்த்தவர் அகத்தியர்! பிரம்மாண்டத்தின் ஒழுங்கினை வளத்தினை இயக்கும் உயர் உணர்வை (supra consciousnesses) இனை தனது குருவான ஹயக்ரீவரிடமிருந்து மானிடர்கள் அனைவரும் அறியும் அதிர்வு நிலைக்கு (frequency) இற்கு கொண்டுவந்தவர் அகத்தியர் பெருமான்!

இதை வேறு வகையில் சொல்வதானால் தகுதியுடைய ஒரு உயிரான்மா பூவுலகில் உயர் உணர்வை ஈர்க்க இருப்பதால் அந்த உயர் உணர்வு பூமியில் இறங்கியது. அப்படி பூமியின் உயர் உணர்வை இயக்கத்திற்கு கொண்டுவந்தவர் அகத்தியர்! இதனாலேயே பூமியை சமப்படுத்த தென்னாடு அனுப்பப்பட்டார் என்ற புராணக்கதை கூறப்பட்டது.
பூவுலகம் நச்சு எண்ணங்களால் நிறைய நிறைய அதன் பாரம் அதிகமாகி சம நிலை குழம்ப, அதை சமப்படுத்த சிவனாரால் தென்னாடு அனுப்பப் பட்டவர் அகத்தியர்!
அகத்தியரின் வேலை உலகிற்கு நன்மை செய்யவேண்டும், மனித குலம் மேம்பட வேண்டும் என்று எங்கெல்லாம் பக்குவம் உள்ள ஆன்மா எண்ணுகிறதோ அங்கெல்லாம் தனது தவத்தின் பலத்தை வித்தாக கொடுத்து மரமாக வளர்ப்பது!
தன்னை பிரபஞ்ச பேருணர்வான ஸ்ரீ லலிதையின் வடிவாகி ஸ்ரீ லலிதையை அகஸ்தியமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்து, தன்னுடன் ஈருடல் ஓரூயிராய் ஒன்றிய தனது மனைவி லோபாமுத்திரையையும் தான் பெற்ற தவசக்தியை ஊட்டி அவரையும் அந்த பேருணர்வு பெறவைத்து லோபாமுத்திரமயி என்று அழைக்கும் நிலைக்கு உயர்த்தினார்!
எவருக்கு இல்லறத்திலுள்ள நச்சான தீய எண்ணங்களை அகற்றி மகிழ்வான ஒளி மிகுந்த வாழ்க்கை வேண்டுமோ அவர்கள் அன்னை லோபாமுத்திரா ஸஹித ஸ்ரீ அகஸ்திய மாமகரிஷியை எண்ண அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அவர்கள் வாழ்வை ஒளியாக்கும்!
அகஸ்தியகுலபதி

No comments:

Post a Comment