Search This Blog

Saturday, August 6, 2016

Christina's World கிறிஸ்டினாவின் உலகம்

மனத்தைக் கனக்க வைத்த உண்மைச் சம்பவங்கள் காலம் கடந்து கரைந்து ஓடினாலும் அழிவதில்லை." கிறிஸ்டினாவின் உலகம் " என்ற இந்த ஓவியம் உலகப்புகழ் பெற்றது. அது உலகப்புகழ் பெறுவதுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் அதிகம் பிரபலம் பெறவில்லை.

பல வருடம் முன் சஞ்சிகைகள் விரும்பி வாசித்த காலத்தில் ஒரு ஆங்கில சஞ்சிகையில் இதைப்பற்றி படித்த நினைவுகள் அண்மையில் இன்டர்நெட்டில் இந்த ஓவியத்தைப் பார்த்த போது மறுபடியும் நினைவுக்கு வந்தது.

கிறிஸ்டினா சின்ன வயசில பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு, கைகளையும் காலையும் இயல்பாக இயக்கி நடக்க முடியாமல், அதிகம் வசதி இல்லாத ,தனியாக வாழ்ந்த வயதான தன் தாயோடு மத்திய அமரிக்காவின் ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புற நகரத்தில் வசித்த பெண்.

அவளின் உலகம் வீட்டில் இருந்து தவண்டு தவண்டு வந்து அவளின் வீட்டுக்கு அருகில் உள்ள புல் வெளியை ,புதர் மலர்களை ,அதில பறக்கும் வண்ணாத்திப்பூச்சிகளை, சின்னப் பறவைகளை ரசிப்பது.

அதிசயமாக அவளின் வீட்டுக்கு அருகில் ஒரு சுமாரான ஓவியர் வசித்தார்.அவர் ஒவ்வொருநாளும் கிறிஸ்டினா தவண்டு தவண்டு வந்து இயற்கையை ரசிப்பதைத் தன் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தார்.அப்படிப் பார்த்ததை ஓவியமாக வரைந்தார்.

ஒரு வேளை அந்த ஓவியம் அழகாக வந்து நல்ல விலைக்கு விற்று அந்தக் காசைக் கிரிஸ்டினாவுக்கு கொடுத்து உதவத்தான் அவர் வரைய ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஓவியம் உயிர் பெற்று முழு வடிவமாக அதுக்கு " கிறிஸ்டினாவின் உலகம் " என்று பெயர் வைத்தார்.

நியூஜோர்க்கில் பலத்த வரவேற்புடன் விலை போன இந்த ஓவியம் வரையப்பட்டதோ , அது கோடி டாலருக்கு ஒரு ஏலத்தில் விற்கப்பட்டதோ, எதுவுமே கிறிஸ்டினாவுக்கோ அவள் அம்மாவுக்கோ தெரியாது .

ஒரு நாள் அந்த ஓவியர் அந்த கோடி டாலர் பணத்துடன் அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். தட்டி அந்த ஓவியத்துக்கு கிடைத்த முழுக்காசையும் கிரிஸ்டினாவிடமே கொடுத்து. அப்போதுதான் தான் வரைந்த ஓவியம் பற்றிய விபரம் சொன்னார்.

கண்களில் கண்ணீருடன் கிறிஸ்டினா அந்த ஓவியருக்கு சொன்னது

" என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு என்று எனக்கு முதலே தெரியும்.பறவைகளும்,குருவிகளும் எனக்கு ஏற்கனவே சொல்லியுள்ளன யாரோ ஒருவர் என்னை கவனிப்பதாக அதை நானும் உணர்ந்தேன்... " என்று.

" பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்." இப்படி பொய்யாமொழிக் குறள் 996 சொல்கிறது. அதன் எளிமையான மொழிவிளக்கம் ":பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும் "

தெய்வப் புலவர் திருவள்ளுவர் உலகத்துக்கே பொதுவாகச் சொன்ன இந்தக் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு " The world abides; for 'worthy' men its weight sustain. Were it not so, 'that would fall to dust again.." இப்படி அழகாக வருகிறது .
.
Naavuk Arasan

Bought by the MoMA in 1948, the same year it was painted, Andrew Wyeth’s Christina’s World entered the American art pantheon seemingly once it was dry. For more than half a century, viewers have been captivated by the mysterious scene of a young woman crawling across a field towards a house on top of a hill. In Andrew Wyeth, Christina's World, and the Olson House, an exhibition at The Farnsworth Art Museum through October 30, 2011, some of the mystery behind the masterpiece is finally solved. This collection of 45 works, including Wyeth’s first ever sketched idea for Christina’s World, allows us to see the world behind Wyeth’s World and connect even more deeply with the man and his art.
The story behind Christina’s World is part of the Wyeth legend, and wonderfully recounted in the exhibition catalog by Michael K. Komanecky, Chief Curator at the Farnsworth. On Andy’s 22nd birthday, he ventured to Cushing, Maine, to visit an artist friend. Knocking on his friend’s farmhouse door, Andy found himself face-to-face with the artist’s 17-year-old daughter, Betsy. Instantly smitten, Andy asked her to show him around town. Betsy suggested visiting her friend Christina Olson. “Two things happened,” Komanecky writes, “Andy fell in love with Betsy and married her the following year; and Andy befriended both Christina and Alvaro Olson, struck as much by their fierce independence as by the place in which they lived.” Over the next 30 years, Wyeth created over 300 works at Olson House, most of which focused on the lives of the brother and sister who lived there and touched his life.
Perhaps the most remarkable part of this exhibition of one of the preeminent American artists of the 20th century focusing on a humble American home is that the vast majority of the works reside permanently in Japan. In 1996, Katsushige Susaki, director of the Marunuma Art Park, Asaka, Japan, bought the collection of preparatory works for Christina’s World from another collector. Originally an artist’s colony built by Susaki, Marunuma added a gallery in 1994 in which Wyeth’s works have held a place of honor. Otoyo Nakamura, Wyeth Collection Curator at Marunuma, explains in his catalog essay the influence Wyeth has on Japanese audiences and artists that transcends culture and language. Each year a Wyeth exhibition and an academic Wyeth forum are held at Marunuma to help further the study of Wyeth’s art. “I want to educate young artists,” Nakamura quotes Susaki, “I want to share the thrill of seeing Wyeth’s paintings with many people.” Finally, an American audience can enjoy the thrill of seeing these preparatory works for the first time.
The exhibition spans the entire time Wyeth meditated on Olson House. In doing so, we see the evolution of the artist himself. The earliest work—a 1940 watercolor titled Olson’s Cove—shows all the flair and flash of the young, hotshot artist fresh from the spectacular success of his coming-out show of watercolors in New York City. After the death of his father, N.C. Wyeth, in 1945, the works take a more somber, serious turn—darker, richer, warmer. Finally, you come across that first drawing of a figure scrambling on the ground—an image inspired by Wyeth’s spotting of Christina Olson crawling back from her garden to the run-down house she and her brother struggled to maintain. Rendered unable to walk due to some mysterious disease, Christina dragged herself along the ground by her arms—an unforgettable sight that ignited Wyeth’s imagination. Pages of hands and arms in which Wyeth sought out the perfect pose lead to the climax of the painting itself (which, alas, is not part of the show due to concerns over its conservation). Christina and Alvaro died a month apart in the winter of 1967-1968. The Farnsworth’s own Alvaro and Christina, painted by Wyeth right after the pair’s deaths, portrays the duo in absentia through their home itself. A final drawing of Christina’s snow-covered grave sent a chill up my spine after remembering that Wyeth requested to be interred in that same graveyard, and was after his death in 2009. (The image above is from the January 31, 2009 public memorial held for the artist.)
This exhibition celebrates not only Wyeth’s art but Olson House itself, which recently earned National Landmark status. Owned by the Farnsworth for the past two decades, the renovated Olson House remains a landmark in American art and Wyeth lore. For those lucky enough to venture to Maine to see this show, a tour of the house itself is a must—a pilgrimage.
“These works are not only a case of surface beauty,” Nakamura writes in conclusion, “they also reveal a deep-rooted respect for human life, and they resonate in my heart, teaching me about the links between people.” Asian or American, disabled or not, young or old—Christina’s World and the art of Andrew Wyeth resonates in every heart with an honesty and love for humanity beyond borders of all kinds. Andrew Wyeth, Christina's World, and the Olson House breathes new life into an American classic and reminds us why and how art brings people together.

No comments:

Post a Comment