Search This Blog

Saturday, August 13, 2016

‘ஜோக்கர்’ விமர்சனம் Joker' Movie Review

Direction : Raju Murugan
Production : Dream Warrior Pictures
Starring : Guru Somasundaram, Ramya Pandian, Gayathri Krishna
Music : Sean Roldan
Cinematography : Chezhiyan
Editing : Shanmugam Velusamy



Raju Murugan, who struck gold with his debut movie "Cuckoo," is back with his second outing "Joker." While his first film was a romantic drama, the latest flick is a political satire in which Guru Somasundaram of "Jigarthanda" fame plays the lead role.


Ramya Pandian is doing the female lead role in the movie, which has Gayathri Krishna, Ramasamy, Bava Chelladurai and others in the cast. Sean Soldan is the music director of "Joker" and his four songs like "Ennanga Sir Unga Sattam," "Ola Ola Kudisayila," "Jasmine –U" and "Mannar Mannan Theme" have turned out to be chartbusters. Chezhiyan is the cinematographer and Shanmugam Velusamy is the editor of the Tamil flick.
"Joker" attempts to highlight the current societal issues and projects the political situation of the country. The story is being narrated from the view of a 40-year old man. Guru Somasundaram plays the role of Mannar Mannan, who works in a water company. His simple questions about politics are presented in humorous way.
Despite being a hard-hitting and message-oriented flick, "Joker" entertains the viewers with lots of comedy and leaves the audience wondering why they cannot dismiss a government if they have the power to elect it.

வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியானாலும், அதில் நம் மண்ணின் கலாச்சாரத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் கதைகளோடு வெளிவரும் படங்கள் சொற்பமே. தன் அறிமுகப்படமான ‘குக்கூ’ மூலம் அந்த சொற்ப பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் ராஜுமுருகன். ஒரு எழுத்தாளராக சமூக பிரக்ஞையுடன் வலம் வந்த ராஜுமுருகன், இயக்குனராக மாறிய பின்பும் அதிலிருந்த நெறிபிறழவில்லை என்பதை பார்வையற்றோர்களின் உலகத்தை பிரதிபலித்த ‘குக்கூ’ பறைசாற்றியது. அந்த வகையில், அவரின் 2வது படைப்பு இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. ‘ஜோக்கர்’ சிரிக்க வைப்பவனா? சிந்திக்க வைப்பவனா?

கதைக்களம்

தருமபுரியின் பப்பிரெட்டிபாளையத்தில் தன்னைத்தானே ‘ஜனாதிபதி’ என சொல்லிக்கொண்டு, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). இவரை எங்கு பார்த்தாலும், அரசுப் பணியாளர்கள் அனைவரும் தெறித்து ஓடுகின்றனர். காரணம்... ஆமை விடும் போராட்டம், பின்னோக்கி நடக்கும் போராட்டம், கோமணத்துடன் போராட்டம், தீ போராட்டம் என தினம்தோறும் புதிய புதிய போராட்டத்துடன் அரசின் மந்தமான செயல்பாடுகளை கண்டிப்பதே மன்னர் மன்னனின் வேலை. போலீஸின் கைதும், ஜாமீனில் மீண்டும் வெளிவருதும் இவரின் அன்றாட நடவடிக்கை.

யார் இந்த மன்னர் மன்னன்? அவர் ஏன் தன்னை ஜனாதிபதி என கருதிக்கொள்கிறார்? அவரின் போராட்டங்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்பதற்கான விடையாக விரிகிறது ‘ஜோக்கர்’.

படம் பற்றிய அலசியல்

சமீபகால தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சியை எந்த இயக்குனரும் யோசித்திருக்க மாட்டார்கள் (அப்படியென்ன ‘இன்ட்ரோ சீன்’ என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்). முதல் 20 நிமிடங்களுக்கு... கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றம், காவல் நிலையம், அரசியல் வசனங்கள், சட்டப்பிரிவுகள், போராட்டம், கைது என ஏதோ ‘கம்யூனிஸ்ட் டாக்குமென்ட்ரி’யைப் பார்ப்பது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படலாம். ஆனால், இந்த 20 நிமிட காட்சிகளின் முக்கியத்துவம் ஹீரோவுக்கான ஃப்ளாஷ்பேக்கில்தான் காட்டப்படும். அந்த அற்புதமான ஃப்ளாஷ்பேக்கில் காதல், சென்டிமென்ட், கிராமத்து மக்களின் வாழ்வியல், அரசு எந்திரத்தின் அடாவடித்தனம் என யதார்த்தத்திற்கு அருகில் நம்மை அழைத்துச் செல்கிறார் ராஜு முருகன்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்களும், நடிகர்களின் பங்களிப்பும். ‘நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்... அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு... அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா....?’ இது போன்ற சமூக வசனங்களாகட்டும், ‘ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா...’ என்பன போன்ற நெகிழ வைக்கும் வசனங்களாட்டும் அத்தனையும் ‘நச்’ ரகம்!

நாட்டுப்புற இசை மூலம் பாடல்களில் வெகுவாக வசீகரித்திருக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் பின்னணி இசை மூலம் உணர்ச்சிகளைக் கடத்த வேண்டிய பெரிய வாய்ப்பு இருந்தும், அதை சரியாகக் கையாளவில்லையோ எனத் தோன்றுகிறது. செழியனின் ஒளிப்பதிவில் எளிமையும், அழகும் கைகோர்த்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்ற சோமசுந்தரம், இப்படத்தில் ‘மன்னர் மன்னன்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அப்பாவித்தனமான முகபாவம், வெள்ளந்தியான வசன உச்சரிப்பு என பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கிறது சோமசுந்திரத்தின் ஆத்மார்த்மான நடிப்பு. விருது நிச்சயம்!

நாயகி காயத்ரியையும், அறிமுக நாயகி ரம்யா பாண்டியனையும் படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது. அந்தளவுக்கு அவர்களை கேரக்டர்களாகவே மாற்றியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. ஃப்ளாஷ்பேக்கில் இவரின் பங்களிப்பு பெரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘நீ ஒரு ரூரல் பியூட்டிடா’ என நாயகனைப் பார்த்து அவர் சொல்லும் அழகே தனி! படத்தின் உயிர்நாடி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. ஹீரோவுக்கு இணையான இவரின் கதாபாத்திரமும், க்ளைமேக்ஸ் வசனமும் படத்தின் ஆணிவேர்!

பலம்

1. இயக்குனர் ராஜு முருகனின் கதையும், வசனங்களும்
2. நடிகர்களின் பங்களிப்பு
3. செழியனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் பாடல்களும்

பலவீனம்

1. பின்னணி இசை
2. ‘டாக்குமென்ட்ரி’ உணர்வை ஏற்படுத்தும் முதல் 20 நிமிட காட்சிகள்

மொத்தத்தில்...

பரபரப்பான இன்றைய சூழலில், நம் கண்ணெதிரே எத்தனையோ போராட்டங்களும், அரசுக்கெதிரான உண்ணாவிதரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் கண்டும் காணாமல் சுயநலமாக பயணிக்கும் ஒவ்வொருவரையும் உட்கார வைத்து கேள்வி கேட்கிறது ‘ஜோக்கர்’. தியேட்டரைவிட்டு வெளியே செல்லும் ஏதாவது ஒரேயொரு ரசிகன் ‘உண்மையில் யார் ஜோக்கர்?’ என்பதை உணர்வானேயானால் அதுவே இப்படத்தின் உண்மையான வெற்றி!

ஒரு வரி பஞ்ச் : சிந்திக்க வைப்பவன்!

டத்தில்... பதவியைத் தக்க வைக்க தகிடுதத்தம் செய்யும் முதல்வர் இல்லை, இடைத் தேர்தலில் ஜெயிக்க எதிராளியை கொலை செய்யும் ஆளுங்கட்சி உறுப்பினர் இல்லை, மது-மாது என எப்போதும் உல்லாசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த ‘ஜோக்கர்’!
’பவருக்கும், பவுசுக்கும் அடிமையாகி, தீயதைக் கொண்டாடி, நல்லதை மறந்து வாழ்ற சமுதாயத்துலதான் நாம வாழ்றோம். ஆனா, அதைத் தட்டியும் கேட்கமாட்டோம், தட்டிக் கேட்குறவங்கள ஜோக்கர்னும் சொல்லுவோம்’ என்ற நிதர்சனத்தை எதார்த்தமாக முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறான் ’ஜோக்கர்’.
சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களை வெறும் செய்திகளாகக் கடக்கும் சமூகத்துக்கு... மக்களாட்சிக்கு யார் பொறுப்பு என்பதை அழுந்தத்திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் ராஜு முருகன். ’குக்கூ’வில் காதலும் காதல் நிமித்தமுமாக மெழுகுவர்த்தி ஒளி காட்டியவர், ‘ஜோக்கரில்’ பிடித்திருப்பது அரசியல் தீப்பந்தம்!
வீட்டில் ஒரு கக்கூஸ் கட்டினால் காதலியை கை பிடிக்கலாம். ஆனால், அது கூட இயலாத ‘மன்னர் மன்னனாக’ சோமசுந்தரம். அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடினாலும், ‘பொட்டி கேஸ் பொன்னூஞ்சல்’ என்று கிண்டலுக்கு உள்ளாகும் ராமசாமி. கழிப்பறை இருக்கும் வீட்டுக்கு திருமணமாகி செல்ல வேண்டும் என்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன். கணவனை மது அரக்கனுக்குப் பறி கொடுத்துவிட்டு, அரசாங்கத்துக்கு எதிரான குரலுக்கு ஒலிபெருக்கியாக இருக்கும் ’இசை’யாக காயத்ரி கிருஷ்ணா. இந்த நால்வர் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தமிழகத்தின் அவல நிலவரங்களை பொளேரென முகத்தில் அடித்துச் சொல்கிறான் ‘ஜோக்கர்’!
மத்திய அரசாங்கம் அறிவிக்கும் இலவச கழிப்பறைத் திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார் சோமசுந்தரம். ஆனால், கழிப்பறை ஊழலில் இவருக்கு மிஞ்சுவது பீங்கான் கோப்பை மட்டுமே. அரைகுறையாக எழுப்பப்பட்ட கழிப்பறையால் அவர் வாழ்வே கேள்விக்குறியாகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்படும் சோமசுந்தரம், தன்னை ’இந்தியாவின் ஜனாதிபதி’யாக நியமித்துக் கொண்டு, ஊரில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்துகிறார். கூடவே தன் மனைவிக்காக ஒரு மனு போட்டு, நீதிமன்றங்களில் அது தள்ளுபடி செய்யப்பட உச்சநீதிமன்றம் வரை அதைக் கொண்டு செல்கிறார். அது என்ன மனு, அதன் விளைவு என்ன, சோமசுந்தரத்தின் போராட்டங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்குகின்றன போன்ற தொடர் சம்பவங்களை மனதில் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பதியச் செய்கிறது படம்!
சினிமா எனும் அதிகவனம் ஈர்க்கும் பொதுதளத்தில், அந்தப் பொது தளத்தின் மனசாட்சியையே சாட்டையால் விளாசியிருக்கிறது கதையின் கரு!
கழிப்பறையில் பிருஷ்டத்தை கழுவியபடியே படத்தின் நாயகன் அறிமுகமாவது முதல் ‘இதுக்கு பஜார் லாட்ஜ்ல பிராத்தல் பண்ணலாம்’ என கொதிகொதிக்கும் க்ளைமாக்ஸ் வசனம் வரை... படத்தில் எங்கும் ’so called' சினிமா சாயல் இல்லை. ‘அபத்தங்களைக் கொண்டாடி’ பழகிய சினிமாவில் இது புது பாட்டை. துணிச்சலுக்கு வாழ்த்துகள் ராஜு!
’உன் கைலதான் கவர்மெண்ட் இருக்குல்ல... பேசாம அந்த நாய்க்கு காய் அடிச்சுவிட்ரு’, ‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்’, ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகயாம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’, ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!’, ’குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, ’உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’  - குடியானவனின் வீட்டு கழிப்பறைகளிலிருந்து கோடிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ‘கக்கூஸ் கட்டுன காசு நாறாது’ என்று தத்துவம் பேசும் அரசியல் - அதிகார மையங்களை சகட்டுமேனிக்கு சவட்டியெடுக்கின்றன வசனங்கள்.
அதே சமயம் சாமான்யனின் மனசாட்சியையும் உலுக்குகின்றன வசனங்கள். ‘சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்!’, ‘ஆமா.. அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்’, ‘இப்போலாம் ஹீரோவைவிட வில்லனைத்தானே இந்த சனங்களுக்குப் பிடிக்குது’, ‘உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல!’ - பொறுப்பை உதாசினப்படுத்தும், நல்லது/கெட்டது தெரியாத- தெரிந்துகொள்ள விரும்பாத- உள்ளங்களை உலுக்கும் வார்த்தைகள்.   
’மக்கள் ஜனாதிபதி’யாகவே வாழ்ந்திருக்கிறார் சோமசுந்தரம். எளியவனைப் பிரதிபலிக்கும்போது ஒரு நடிப்பும், அந்தக் கோட் அணிந்து ஜனாதிபதியானதும் தலையை நிமிர்த்தத் துவங்கி, அதற்கென ஒரு நடிப்பும் என்று மிளிர்கிறார். ‘ஒரு கண்ணு காந்தி, இன்னொரு பக்கம் பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க’, ‘பாப்பிரெட்டிப்பட்டி பவன்ல இருந்து வந்த பெட்டிஷன் என்ன ஆச்சு’ என்று ஆவேசம் காட்டும்போதெல்லாம்... இந்நாட்டின் மன்னனாகவே மாறிவிடுகிறார். அதே சமயம் காதலி முதன்முதலில் வீட்டுக்குள் வரும்போது காட்டும் அந்த குழைவும், நெளிவும்... சிறப்பு!
கோவணப்போராட்டம், வாயிலடித்துக்கொள்ளும் போராட்டம், குளோபல் வார்மிங் போராட்டம், ரிவர்ஸ் போராட்டம், காறித்துப்பும் போராட்டம் என்று விதவிதமாகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார் சோமசுந்தரம். அதற்காக நீதிமன்ற வாசலில் பெட்டிகேஸ் போட்டு, நீதிக்காக காத்துகிடக்கும் பொன்னூஞ்சல்,  ஒவ்வொரு போராட்டத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்வது என்று போராட்டத்தை அப்டேட்டாக எடுத்துச்செல்லும் இசை... அவரவர்களின் பின்புலம் மற்றும் நடிப்பு சபாஷ்!
‘உங்க மேல அரசியல்வாதிகளுக்கு ஏன் கோவம்’ என்று பத்திரிகையாளர்கள் கேட்க, சோமசுந்தரம் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்வதெல்லாம்... கசக்கும் உண்மை!
‘மண்டைக்குள்ள கலவரம், யுத்தகாலம் ஆரம்பிச்சிட்டுது’ என்று வசனம் பேசும் பவா செல்லத்துரை, சிறிதுநேரம் வந்தாலும் நடிப்பில் நச். அவருக்கும் சோமசுந்தரத்துக்குமான உரையாடல்களே படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன.
படத்தின் ராஜூமுருகனுக்கு பக்கபலமாக க்ளாப்ஸ் அள்ளுகிறது செழியனின் கேமரா. பறவைப் பார்வையில் சோமசுந்தரம் கிராமத்துக்குள் உலாவருவதைக் காண்பிப்பதிலும், சோமசுந்தரம் வீட்டின் ஒவ்வொரு சதுர அடியைக் காண்பித்ததிலும் கனகச்சிதம். செல்லம்மா பாடலில் சோகம் கடத்துகிறது ஷான் ரோல்டனின் இசை. திரைக்கதையின் வேகம் குறையுமிடங்களில், வசனங்கள் அந்த அலுப்பை சரிசெய்கிறது.
‘கோணமண்டை புடிக்கல’ என்று தன்னை ரிஜெக்ட் செய்யும் ரம்யாவை, சோமசுந்தரத்தின் பிரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கும் காட்சிகள்... படத்தின் மென் அத்தியாயங்கள்.
மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA', 'மதுவால் இறந்தவர் இங்கே... மதுவைத் திறந்தவர் எங்கே’, டெல்லி சாமி, அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏ.சி., இயற்கை வளச் சூறையாடல், இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சிட்டு ‘முப்பாட்டன்’ என அறைகூவும் ‘ஒறவுகளே’ தலைவர் என நிகழ்கால அநீதிகளை, அபத்தங்களை போகிற இடமெல்லாம் சுட்டி குட்டிக் காட்டுகிறது படம்.
இதுவரை, ’பிழைக்கத் தெரியாதவன்’ என்ற அடைமொழிக்கோ, படத்தின் அச்சு பிச்சு காமெடிகளுக்கோ பயன்பட்டு வந்த ஒரு கதாபாத்திரத்தை, கதை நாயகனாக்கியதிலேயே ‘ஜோக்கர்’ வித்தியாசப்படுகிறான். இதில் 6 பாட்டு, 5 ஃபைட்டு கொடுக்கும் கேளிக்கை கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ‘ஜோக்கர்’ மூலம் செட்டு சேராது. அதே சமயம், காட்சி ஊடகமான சினிமாவில் வசனங்களே பலத்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. மனதைத் தைக்கும், உணர்வுகளை உருக்கும் விஸூவல்கள்... பத்தலையே! படம் முழுக்க இருக்கும் எதிர்மறை தொனியையும் தவிர்த்திருக்கலாம். நமக்குப் பழகிய சினிமாவில் ‘happy end' என்பது க்ளிஷேவாக இருந்தாலும், ஜோக்கர் பேசும் கருவுக்கு அது ஒரு நம்பிக்கை கீற்றாக இருந்திருக்கும்.   

அன்பு நண்பன் ராஜூ முருகனுக்கு,
சிவபாலன் முருகள் சூரனின் அரண்மனைக்குள் நுழைந்து படைவீரர்கள் மேல் பச்சைக்குதிரை ஏறி தாண்டினான் என்று எனக்காக ,என் அனிமேஷன் ஓம் முருகா " புராண படத்துக்கு திரைக்கதை எழுதி தந்தபோது உள்ளிருந்நு ஒலித்த ராஜூமுருகனின் கலகக்குரலை ரசித்தேன்.வட்டியும் முதலும் படித்த போது எங்க தஞ்சாவூர் பையன் என்று பெருமையில் உன் ஜோக்கர் போல நிமிர்ந்து சிரித்தேன்.PK என்ற ஹிந்திப்படம் பார்த்தபோது அந்த காமெடித்தாண்டி புதைந்து கிடந்த சமுக குப்பைஙகளின் நாற்றங்களை தோண்டி எடுத்தது கண்டு இப்படித் தமிழில் ஏன் புதிய சிந்தனை வரவில்லை என்ற என் குறை தீர்ந்தது இன்று ஜோக்கர் பார்த்ததும். நல்ல தயாரிப்பாளர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகன்.எல்லோரும் சொன் னார்கள் இந்திய அரசியல் அமைப்பை "ஜோக்கர்" நக்கலாக கேள்வி கேட்கிறது என்று.ஆனால் எனக்கென்னவோ தூக்குதண்டனைக் கூடாது என்று பேசிய விருமாண்டியின் குரலையும் தாண்டி காதுகளின் உள்ளே சென்று குடைந்து வலி ஏற்படுத்துகிறது உங்கள் ஜோக்கரின் தீனக்குரல்"நாய்களா கருணைக்கொலை செய்ய அனுமதிங்கடா"என்று. நான் பார்த்த ஆங்கிலப்படமொன்றில் தன்வயதான மனைவியின் மரண அவஸ்தை தாளாமல் யாருக்கும் தெரியாமல் அவளது வயதான கணவர் அவளை தலையணையால் அமுக்கி வேதனையுடன் கொள்வார்.படம் பார்த்து விட்டு விடிய விடிய அழுதேன். அதேபோல் உங்கள் ஹீரோ மனைவிக்கு ஆசையாக பூ வைத்து விட்டு அவளுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் அந்த சில நிமிடங்கள்..சொல்ல வார்த்தைகள் இல்லை முருகன் உங்களுக்கு ஒரு சல்யூட் ஜோக்கர் திரைப்படத்தின் மொத்த உணர்வுமே அதுதான்.ஜடமாக கிடக்கும் இந்த தேசத்தை ஆர்வத்துடன் தன் இஷ்டத்திற்கு புணரும் அரசியல் அதிகாரம்..! இதில் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நல்ல அரசியல்வாதிகள் மற்ற அரசியல்வாதிகளின் அநாகரீக செயலுக்காய் அவமானத்தில் குறுகி வருத்தப்படுவார்கள். வேறு என்ன செய்ய இயலும்? கையில் ஊறும் கரப்பான் பூச்சியை பத்திரமாக தரையிறக்கிவிடும் ஹீரோ,என் மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் எனப் போராடு கிறான் என்றால் அவனின் தாள இயலாத வலி புரிகிறது.அந்த உணர்வு இன்னமும் கூட அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். கிளைமாக்ஸில் எதற்காக இந்தப் போராட்டம் என்று வலுவிழந்து போகும் குரல் இயக்குநரின் குரலாகவே இருக்கிறது. இயங்கிக் கொண்டிருக்கும் அரசியலை மைப்பின் ஊடே கொஞ்சமாவது சமூக நலன் கருதி தங்கள் சொந்த குடும்பத்தைக் கூட பாராமல் களமிறங்கி போராடும் கம்யூனி ஸ்ட்களை பற்றி அழுத்தமாக சொல்லியுருக்கலாம். நம் இடது சாரி இயக்கம் இவ்வளவு வலுவாக செயல் படவில்லையென்றால், சமூக பொறுப்புடன் பிரச்னைகளை தாங்களே கையில் எடுத்து களமாட வில்லையென்றால்,தோழர்களின் அர்ப்பணிப்பு இல்லையென்றால் நம் சமூகம் என்றோ "உளுத்துப்" போயிருக்கும். செழியனின் ஒளிப்பதிவு அருமையான ஓவியக் கவிதை. இசையமைப்பாளர் அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை டீமில் இருந்து வந்தவர் என்றார்கள் அற்புதம். கதைக்கு ஏற்றார்ப்போல் பிண்ணனி இசை.பாராட்டுகள். இர்பாஃன் கான்,ரகுவரன் பிரகாஷ்ராஜ் வரிசையில் ஓர் புதிய வரவு சோமசுந்தரம். என்ன அருமையான கலைஞன்..அவரது உடல் மொழி உங்கள் கைவண்ணம் சிறப்பு நண்பா. வாழ்த்துகள்.சிறப்பான சிந்தனை.பெரிய வருத்தம் என்னவென்றால் சீரமைக்கப்படாத தமிழ் சினிமாவின் வர்த்தகம்.அதுவும் ஜோக்கர் படம் போலத்தான். நான் இன்று தாணுவை டிஸ்மிஸ் செய்துவிட்டேன். சினிமா வியாபாரத்தை மேம்படுத்தி எல்லாத் திரைப்படங்களும் உலக அரங்கில் ரிலீஸ் செய்யப்படவேண்டும் ஓவர்சீஸ் வியாபாரம் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விநியோகம் செய்யப்படும் கபாலியும், வாகாவும், ரிலீஸாகும்போது கட்டாயமாக ஒரு ஸ்கிரீனாவது ஜோக்கர் போன்ற படங்கள் ரிலீஸாக வேண்டும். என்பது என் ஆணை.


ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்

No comments:

Post a Comment