Search This Blog

Saturday, August 13, 2016

இலக்கணத்தை எல்லாம் தகர்த்த மலையாளப்படம்

Ozhivudivasathe Kali’, ozhimuri, kali 
 என்ற 3மலையாளப்படங்களை இன்று பார்த்தேன்.மிகவும் ஏக்கமாக இருந்தது. ஏன் தமிழ்த்திரையுலகில் இது மாதிரியான நல்ல படங்கள் சாத்தியமில்லாது இருக்கிறது. "நான் கோட்டு போடுவேண்டா"என்ற திமிராக கொக்கரிக்காமல் நண்பர்களாக பழகினாலும் ஜாதி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கனன்று கொண்டு இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிய வைக்கிறது.ozhivudivasathe kali திரைப்படம். நாயர் குடும்பத்தின் பெண்களைப் பற்றி பேசும் படம் ஒழிமுறி" ஜெயமோகனின் சிறுகதை.லால் திருப்பாச்சி தங்கை மல்லிகா,ஸ்வேதா மேனன், பாவனா அஸிஃப் அலி நடித்திருக்கிறார்கள் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அவரவர்க்கான நியாயங்களை எடுத்துரைக்கிறது. 55 வயதில் மல்லிகா பிடிவாதமாக கணவன் லாலிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறுகிறார்.ஆனால் அவளுக்கு கணவன் மேல் வெறுப்பு இல்லை.தன்மானமுள்ள பெண்ணாக தலை நிமிர்ந்து சாகவேண்டும் என்பது அவளின் விருப்பம்.அதன் பின் உலாவும் உளவியலே திரைப்படம். என்னா நடிப்பு லால்,மல்லிகா,ஸ்வேத்மேனன். அதேபோல் துல்கரும்,பிரேமம் ஹீரோயினும் நடித்துளாள காளி.short temper மனிதனின் கதை. .இந்தப்படங்களை பார்த்தவுடன் சத்தியமாக ஒரு நேரடி மலையாளப்படம் பண்ணவேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதிலும் சினிமா என்றால் இப்படித்தான் ஷாட் கம்போஸ் செய்யவேண்டும் என்ற இலக்கணத்தை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டார் ozhivudi vazathe இயக்குனர்.சசிதரன்
ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்

No comments:

Post a Comment