Search This Blog

Wednesday, December 4, 2013

வான்கா

வான்கா – உலகமெங்கும் உயர்வாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெயர் இது. தன்னுடைய தனித்தவத் திறமையால் காலத்தைக் கடந்து நிலை பெற்று நிற்கும் அழியாத ஓவியங்களை வரைந்து, வரலாற்றில் தன்னுடைய பெயரைப் பதித்து விட்டு மறைந்து விட்டான் அந்த அற்புத கலைஞன். அவனுடைய வாழ்க்கையை இர்விங் ஸ்டோன் ஆங்கிலத்தில் ‘Lust for Life’ என்ற பெயரில் நூலாக எழுதியிருந்தார். நான் அதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நான் மொழி பெயர்த்த நூல்களில் மிகச் சிறந்த நூல் என்று இதை கூறுவேன். ஓவியத்தை உயிரென நினைக்கும் அந்த மகா கலைஞனின் வாழ்க்கையில்தான் எத்தனை காதல்கள்! எத்தனை காதலிகள்! லண்டனில் தங்கியிருந்து, ஓவியங்கள் விற்பனை செய்யப்படும் ஒரு விற்பனை நிலையத்தில் வான்கா பணியாற்றுகிறான். தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரியின் மகள் ஊர்ஸூலாவை காதலிக்கிறான். அவனும் அவளும் ஒன்றாக நடப்பார்கள்… உரையாடுவார்கள்… சிரிப்பார்கள்… விளையாடுவார்கள்… உண்பார்கள். இறுதியில் தன் காதலை வான்கா வெளிப்படுத்தும்போது, தனக்கு ஏற்கெனவே வேறொரு இளைஞனுடன் நிச்சயமாகி விட்டது என்கிறாள் அவள். வான்காவின் முதல் காதல் தோல்வி அது! இரண்டாவதாக தன்னுடைய உறவுக்கார பெண்ணும், தன்னைவிட சற்று வயதில் மூத்தவளும், கணவனை இழந்த விதவையும், ஒரு குழந்தைக்கு அன்னையுமான ‘கே’ என்ற பெண்ணை காதலிக்கிறான். ஒரு நாள் அவன் அதை வெளிப்படுத்த, அவள் அதை மறுத்ததுடன் நிற்காமல், அவனை விட்டே விலகிச் சென்று விடுகிறாள். இது அவனுடைய இரண்டாவது காதல் தோல்வி! அடுத்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், ஒரு குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு இருப்பவளுமான ஒரு ஏழை விலை மாதுவை அவன் சந்திக்கிறான். அவளை கிட்டத்தட்ட மனைவியாகவே வான்கா ஏற்றுக் கொள்கிறான். அவளுடன் குடும்ப வாழ்க்கையே நடத்துகிறான். ஒரு கட்டத்தில் ‘அவளா? ஓவியமா?’- என்று முடிவு எடுக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும்போது, ‘ஓவியம்தான்’ என்று அவன் தீர்மானிக்கிறான். ‘வின்சென்ட் வான்கா உலகத்தில் படைக்கப்பட்டதே ஓவியம் வரைவதற்காகத்தான்!’ என்று அவளிடமே அவன் கூறுகிறான். அத்துடன் அந்த வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி. இது அவனுக்கு கிடைத்த மூன்றாவது தோல்வி. நான்காவது – அவன் மீது காதல் வைத்த ரக்கேல் என்ற அழகான இளம் பெண். ‘பார்’ ஒன்றில் பணியாற்றும் அவளுக்கு வான்காவின் காது மீது அளவற்ற ஆசை! அவள் ஆசைப்படுகிறாள் என்பதற்காக மதுவின் போதையில் தன் காதையே துண்டாக அறுத்து, தாளில் சுற்றிக் கொண்டு போய் அவளிடம் தருகிறான் வான்கா. என்ன செய்கிறோம் என்று கூட தெரியாத ஒரு நிலை!
ஓவிய மேதை வின்சென்ட் வான்காவின் வாழ்க்கையை ஒரு புதினத்தைப் போன்று மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கும் இர்விங் ஸ்டோனின் அபார எழுத்தாற்றலுக்கு தலை வணங்குகிறேன்.
இவர் தனது வாழ்நாளில் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்றுதான்
வன்கா சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்த இணையில்லாத கலைஞன்

 
Vincent Van Gogh
 
Vincent Van Gogh


இவரின் ஓவியங்களுக்கு இன்று விலை மதிப்பிடுவது சிரமமான காரியம் இருந்தாலும் உலகின் மிகப்பொரிய பணக்காரர்களும் புராதன ஓவியங்களைச் சேகரிப்பவர்களும் இவர் பூர்த்தி செய்யாமல் விட்ட ஓவியங்களுக்குக்கூட பல கோடி ரூபாய் தரப் போட்டி போடுகிறார்கள்


ஓவியர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஆதிகால மனிதன் வரைந்த குகை ஓவியங்களிள் ஆரம்பித்து ரேனேசான்ஸ் என்று பல படிகளைக்க் கடந்து இம்பிரஷனிஸம் என்ற ஸ்டைலில் ஓவியங்கள் வரையப்படடுமுக் கொண்டிருந்த காலம் இது.அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டு.இந்த காலகட்டத்தில் ஹாலந்து நாட்டில் பிறந்த வின்சட் வான் கா என்ற ஓவியம் ஓவியக் கலைக்கே ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்தான் அவன் வரைந்த ஓவியங்களைத்தான் சரித்திரம் நுஒpசநளளழைnளைஅ என்ற ஓவிய ஸ்டைலுக்கே மூலம் என்று போற்றிப் புகழ்ந்தது
வான் காவின் ஓவியங்களைப்போலவே அவரது வாழ்கையும் உலகப் பிரசித்தி பெற்றது மைக்கல் ஏஞ்சலோ பிக்காஸோ போன்ற ஓவியர்கள் கூட எத்தனையோ இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள் என்றாலும் இந்த உலக மகா கலைஞனின் அளவுக்கு வேறு எவராவது கஷ்டப்படிருப்பார்களா என்பது சந்தேகமே
இவர் பிறப்பதற்க்கு முன்பே இவரது குடும்பத்தை சோகம் படர்ந்திருந்தது
1853ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வான்கா பிறந்தார் அதற்க்கு ஒரு வருடத்திற்க்கு முன்னால் இதே திகதிகளில் பிறந்து சில வாரங்களுக்குள்ளாகவே இறந்து போய்விட்ட இவரது அண்ணனின் பெயரையே இவருக்கும் சூட்டினார்கள்
சிறுவன் வான்காவுக்கு நினைவு தெரிய ஆரம்பித்த நாட்களிலேயே இறந்து போன தன் அண்ணனின் பெயரைத் தாங்கி வாழ்வதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டது வான் காவின் அப்பா ஓரு எழ்மையான பிராட்டஸ்டண்ட் மத போதகர் அவரிடம் இருந்து உபதேசங்கள் கிடைத்தளவிற்க்கு சிறுவன் வான்காவிற்க்கு அப்போது வாழ்கை கிடைக்க வில்லை
இதெல்லாம் சிறுவன் வான் காவின் மனதைப் பிழிந்து எடுக்க கோபக்காரனாகவும் முரடனாகவும் மாறினான் வான் கா
வான் காவின் தொல்லை பொறுக்காமல் பல மைல் தள்ளி இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு இவனை பெற்றோர் அனுப்பினார்கள் வான்காவுக்கு படிப்பின் மீது நாட்டம் வரவில்லை கடைசி முயற்சியாக வெளியூரில் ஓவியக் கூடம் நடத்தும் உறவினர் வீட்டுக்கு இவனை எடுபிடி வேலைக்கென அனுப்பிவைத்தனர்.அங்கு தான் ஓவியங்கள் என்றால் என்ன என்பதை சிறுவன் வான்கா பார்த்தான்.அப்போது வான் காவிற்க்கு வயது பதினாறு
வாழ்கை என்னவாக ஆவது என்று தெரியாமல் குழம்பிய வான் கா தன் அப்பாவைப் போலவே தானும் மத போதகர் ஆகிவிடலாமோ என்று கூட யோசித்தார் சகோதரப்பாசம் தாய் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய வான்கா லண்டனில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த சமயம் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடைய  பெண்ணைக் காதலித்தார் .அது ஒரு தலைக் காதல் அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை காதலில் தோல்வியடைந்த துக்கத்தில் அவர் விலை மாதுகளின் வீடுகளில் சரனடைந்து தனது வாழ்கையினையும் வீணாக்கிக்கிக் கொன்டார்.அதன் பின் அவர்களிலேயே ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார்.மனைவியாக வந்தவள் ஒரு அடாங்காதவள் வான் கா தனது மன வாழ்கையில் கூட நின்மதியடையவில்லை அவள் மிகவும் கொடுமைப்படுத்தினால் !பல வருடங்கள் வான் கா பேசாமல் இருந்தாலும் அதற்க்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியாமல் இருந்ததால் கடைசியில் இத்திருமணமும் முறிந்து போனது
தனது 33 வது வயதில் அவர் ஓவியன் ஆகலாம் என்று முடிவெடுத்தபோது பெயின்டும் பிறசும் வாங்கக் கூட அவரிடம் பணம் இருக்கவில்லை வான் கா வின் வாழ்கையில் அவர் மீது அன்போடும் கரிசனையோடும் இருந்த ஒரே உறவு அவரது சகோதரர் .அவரின் பண உதவிமூலமே வான் கா தனது வாழ் நாள் முழுவதையும் கழித்தார்.இவர் ஒவியங்கள் தீட்டினார் அவ் ஓவியங்கள் தான் ஓவிய சரித்திரத்தையே மாற்றியமைக்கப் போகின்றது என்று யாரும் அறிந்திருக்க வில்லை கடைசிக் காலத்தில் அவரின் புத்தி பேதலித்திருந்தது பைத்தியம் முற்றி தனது காதை தானே அறுத்துக்கெண்டு நடுத்தெருவில் ஓடும் அளவிற்க்கு அவரது பைத்தியம் முற்றி இருந்தது மனநல மருத்துவமனைக்கும் வீட்டுக்குமான அடம் மாற்றி பொண்டிருந்தபோது தான் காலத்தை வெல்லப் போகும் 200 ஓவியங்களை அவர் தீட்டினார் அதுவும் வாழ்வின் கடைசி நாள் நெருங்க நெருங்க ஒருநாளைக்கு ஒரு அமர ஓவியம் என்ற வேகத்தில் வான் கா ஓவியங்களைப் பெற்றெடுத்தார் இருந்தாலும் தனது வாழ்நாளில் அவர் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்று தான் அவர் தங்கியிருந்த வாடகைப்பணத்திற்க்கு ஈடாக ஒரு சமயம் அவரது ஓவியத்தை வீட்டுக்காரர் வாங்கி போயிருக்கிறார்.இப்போது அந்த ஒவியத்தின் விலை பல கோடி
கடைசியில் 1890ம் ஆண்டு அவர் ஒரு நாள் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்டு இறந்து போனார்.
start night


start night
start night

வான்கா மரணமடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது ஓவியங்கள் பற்றி மெர்க்யூர் டி பிரான்ஸ் என்ற மதிக்கத்தக்க சஞ்சிகை ஒன்றில் மிகப்பெரிய கட்டுரை வந்திருந்தது. வான்காவின் படைப்புகள்மீது மிகவும் சாதகமான விமர்சனங்களைச் சொல்லிய இக்கட்டுரை இரு காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது வாழ்நாளில் இதைப்போன்று எழுதப்பட்ட ஒரு கட்டுரை வேறொன்று இல்லை. அத்துடன் இந்தக் கட்டுரைக்கு வான்காவே கடித வடிவில் விமர்சகருக்கு எதிர்வினையும் ஆற்றியிருப்பது கூடுதல் முக்கியத்துவம். அதுவே இக்கடிதமாகும்.

அன்புக்குரிய திரு. அவ்ரியருக்கு,   
  மெர்க்யூர் டி பிரான்ஸ் சஞ்சிகையில் வெளிவந்த விமர்சனத்துக்கு மிகுந்த நன்றி. அத்துடன் அந்த எழுத்து என்னை ஆச்சரியப்படவும் வைத்தது. உங்கள் விமர்சனமே ஒரு கலைப்படைப்பாக இருந்தது. உங்களது வார்த்தைகளாலேயே வண்ணங்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் விமர்சனத்தில் எனது ஓவியப் பதாகைகளை நான் மறு கண்டுபிடிப்பு செய்தேன். ஆனால் அவை என்னுடைய ஓவியங்களைவிட சிறப்பாகவும், செழுமையாகவும், முக்கியத்துவம் வாயந்ததாகவும் இருந்தன. மான்டிசெலி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதற்குப் பிறகு பால்காகின்மீது நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். ஆர்லெஸில் அவருடன் சில மாதங்கள் பணியாற்றினேன். 
காகின் கூறுணர்வு கொண்ட கலைஞராவார். அவர்தான் ஒரு நல்ல ஓவியம் என்பது ஒரு நல்ல செயலுக்கு ஒப்பானது என்று எனக்கு ஞாபகப்படுத்தியவர். குறிப்பிட்ட தார்மீகப் பொறுப்பின் நினைவின்றி அவருடன் பொழுதுபோக்குவது கடினமானது. நாங்கள் பிரிவதற்கு சில நாட்கள் முன்பு, எனது உடல்நலமின்மை மனநல விடுதிக்குக் கொண்டு சென்றது. அவரது காலியான இடம் ஓவியத்தை நான் வரைய முயற்சி செய்துகொண்டிருந்தேன்.
அவரது நாற்காலி குறித்த ஓவியம் அது. இருண்ட கருஞ்சிவப்பான பச்சை நிற மெத்தை கொண்ட நாற்காலி அது. ஒரு நபரின் இன்மையில் ஒளிரும் மெழுகுவர்த்தியும் சில நவீன நாவல்களும் உள்ளன. உங்களுக்கு வாய்ப்பிருந்தால் அந்த ஓவியத்தை மீண்டும் பாருங்கள். அதில் பச்சையும் சிகப்பும் சிதறடிக்கப்பட்டிருக்கும். அப்போது உங்கள் கட்டுரை மேலும் கூர்மையாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் என்னைப் பற்றி பேசுவதற்கு முன் காகினுக்கும் மாண்டிசெலிக்கும் சிறப்புச் செய்துள்ளீர்கள். மீதியுள்ளது எனக்கு. இந்த வேளையில் மீண்டும் எனது மதிப்பிற்குரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். வசந்த காலத்தில் பாரீஸ் வரும்போது நேரில் உங்களைச் சந்தித்து நன்றி சொல்வேன். 
வின்சென்ட் வான்கா

No comments:

Post a Comment