Search This Blog

Wednesday, December 21, 2011

PDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு




அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் போர்மட்டில்(PDFPortable Document Format)  கோப்பு ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும்.
இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
பி.டி.எப் போர்மட் பல ஆண்டுகளுக்கு முன்பு அடோப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம்.
ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், போர்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப் போர்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது.
டெக்ஸ்ட், இமேஜ், மல்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப் போர்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுச்சொல் கொண்டு ஒரு பி.டி.எப் கோப்பை பாதுகாக்கலாம்.
எந்த ஒரு இயங்குதளத்திலும் இந்த பி.டி.எப் போர்மட்டில் உள்ள கோப்பைக் காண முடியும். இந்த கோப்பை எடிட் செய்திட ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
1. பி.டி.எப் எடிட்(PDF Edit): இது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் கோப்பை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது.
இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்(GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களையும் மாற்றி அமைக்கலாம்.
இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் கணணியில் இயக்கலாம்.

No comments:

Post a Comment