Search This Blog

Wednesday, August 3, 2011

லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?


வாங்க...வாங்க... அப்ப அவசியம் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது. 



Join Only-for-tamil

லோன் தவணை(Due) முடிந்தவுடன் நீங்கள் கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பேப்பரில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர் ஆக முடியும். மறவாமல் இன்சூரன்ஸ் பேப்பரிலும் இந்த ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வண்டிக்கு ஏதேனும் இன்சூரன்ஸ் பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் பணம் உங்கள் பெயருக்கு வரும், இல்லை எனில் நீங்கள் லோன் பெற்ற வங்கிக்கு பணம் சென்று விடும்.

சரி இப்போது இதை எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1) நீங்கள் கடனை முழுவதுமாக செலுத்தி 15 நாட்களுக்குள் உங்கள் வங்கியிலிருந்து NOC (No Objection Certificate) மற்றும் FORM-35 இந்த இரண்டும் தலா இரண்டு காப்பிகள் உங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி  அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பாவிட்டால் உடனடியாக தொடர்பு கொண்டு இந்த இரண்டையும் கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

2) உங்கள் வண்டிக்கு புகை கட்டுபாடு அலுவலகத்தில் ஒரு செர்டிபிகட் வாங்கி கொள்ளுங்கள். இது உங்கள் வண்டி, அரசு நிர்ணயித்துள்ள அளவின் படியே புகையை சுற்று சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாதவாறு வெளிவிடுகிறது என்பதை உறுதி செய்யும்.

3) மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இரண்டு FORM-35 மற்றும் ஒரு NOC காப்பியை, உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’யும் எடுத்துக்கொண்டு RTO அலுவலகம் சென்று ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டியதற்கு உண்டான தொகையை செலுத்திவிட்டு அந்த அலுவலகத்திலேயே கொடுத்து விடுங்கள்.

4) உங்கள் ஒரிஜினல் ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கி சான்றளித்து, ஒரிஜினல் மாசு கட்டுப்பாடு செர்டிபிகட், இந்த இரண்டையும் உங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இப்போது உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட்’ல் ஹைபோதிகேசன்’ஐ நீக்கம் செய்தாயிற்று. இப்போதுதான் நீங்கள் உங்கள் வண்டிக்கு முழு உரிமையாளர். 

சரி இப்போது உங்கள் வண்டியின் இன்சூரன்ஸ் செர்டிபிகட்’ல் எப்படி  ஹைபோதிகேசன்’ஐ நீக்க வேண்டும் என்று பார்ப்போம்.

Join Only-for-tamil
1) உங்கள் வண்டியின் ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் செராக்ஸ் பேப்பர், ஒரு NOC copy இவற்றோடு ஒரு விண்ணப்பத்தை எழுதி இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பவும்.

2) இன்சூரன்ஸ் அலுவலத்தில் இருந்து ஹைபோதிகேசன் நீக்கப்பெற்ற புதிய இன்சூரன்ஸ் பாலிசி அனுப்பி வைப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
இப்போதுதான் உங்கள் வேலை முழுமை அடைந்ததாக அர்த்தமாகும்.

குறிப்பு: NOC யின் ஆயுட்காலம் மூன்று மாதங்கள்தான். அதற்குள் இந்த வேலைகளை நீங்கள் முடித்து விடவேண்டும். இல்லையெனில் கட்டணம் செலுத்தி வங்கியிலிருந்து மீண்டும் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.

எனவே லோன் தவணை (Due) முடிந்தவுடன் உங்கள் வண்டி ரெஜிஸ்டரசென் செர்டிபிகட் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியில் ஹைபோதிகேசன் (Hyphothecation) நீக்கம் செய்துகொண்டு தேவை இல்லாத டென்ஷனை தவிர்த்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!
 
உச்சக்கட்ட உற்ச்சாகத்துடன் உங்கள்  வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் 

எல்லோரும் வாழ்வோம் !

நன்றாக வாழ்வோம் !!

ஒன்றாக வாழ்வோம் !!!



வாழ்க வளமுடன்

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்றும் அன்புடன்,
P. குண சேகரன்

No comments:

Post a Comment