Search This Blog

Thursday, July 21, 2011

பெ‌ண்க‌ள் கா‌ல்ச‌ட்டை அ‌ணிவதை‌த் தடு‌க்கு‌ம் ச‌ட்ட‌ம்


 
ஒரு நா‌ட்டி‌ல், பெ‌ண்க‌ள் பே‌‌ண்‌ட் என‌ப்படு‌‌ம் கா‌ல் ச‌ட்டை அ‌ணிவதை‌த் தடு‌க்கு‌ம் ச‌ட்ட‌ம் த‌ற்போது அம‌லி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ள் ந‌ம்பு‌வீ‌ர்களா? இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் போ‌ன்ற இ‌ஸ்லா‌மிய நாடுக‌ளி‌ல் இரு‌க்கலா‌ம் எ‌ன்றுதானே‌க் கூறு‌வீ‌ர்க‌ள். அதுதா‌ன் இ‌ல்லை, ந‌வீன யுக‌த்‌தி‌ன் ‌பிரப‌லி‌ப்பாகவு‌ம், நவநாக‌ரீக‌ம் ‌மி‌ளிரு‌ம் ‌பிரா‌ன்‌ஸ் நா‌‌ட்டி‌ன் தலைநக‌ர் பா‌ரி‌சீ‌ல் தா‌ன் இ‌ந்த ச‌ட்ட‌ம் உ‌ள்ளது.

‌பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், ஆண்களைப் போல் பேண்ட் அணிவதற்கு தடை உள்ளது. அப்படி அணிய வேண்டும் என்றால், பாரீஸ் நகர ‌சிற‌ப்பு காவ‌ல்துறை‌யிட‌‌ம் பெண்கள் அனுமதி பெற வேண்டும்.

இ‌ந்த ச‌ட்ட‌ம் 1799-ம் ஆண்டு பா‌‌ரி‌ஸ் காவ‌ல்துறை தலைமையா‌ல் அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டது. அதாவது, எ‌ந்த ஒரு பா‌‌ரி‌ஸ் வா‌ழ் பெ‌ண்ணு‌ம், ஆ‌ண்மகனை‌ப் போல உடை உடு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பா‌‌ரி‌ஸ் நக‌ரி‌ன் மு‌‌க்‌கிய காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பு அனும‌தி பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்த ச‌ட்ட‌த்‌தி‌ன் சர‌த்து‌த் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்த ச‌ட்ட‌ம் நாளடை‌வி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்களு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டது. அதாவது, கு‌திரை சவா‌ரி செ‌ய்யு‌ம் பெ‌ண்க‌‌ள் பே‌ண்‌ட் அ‌ணியலா‌ம் எ‌ன்று 1892ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்ட ‌திரு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

‌பிறகு 1909ஆ‌ம் ஆ‌ண்டு இ‌ந்த ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சில ‌பி‌ரிவுக‌ள் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டன. அதாவது, சை‌க்‌கி‌ள் போ‌ன்ற இரு ச‌க்கர வாகன‌ம் ஓ‌ட்டு‌ம் பெ‌ண்களு‌ம் பே‌ண்‌ட் அ‌ணிய அனும‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்பது போ‌ன்றவை இட‌ம்பெ‌ற்றன.

த‌ற்போது இ‌ந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று அண்மையில் பிரான்ஸ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்‌க‌ள் 10 பேர் சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

தவிர, ஆணும் பெண்ணும் சமம் என்று கூறும் சட்டம் பெண்கள் பேண்ட் அணிவதை மட்டும் எப்படி தடுக்கிறது என்று பெண்ணியவாதிகள் தொடர்ந்து பிரான்ஸ் அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனால், விரைவில் பாரீஸ் நகர பெண்கள் பேண்ட் அணிந்து உலா வர ச‌ட்ட ‌ரீ‌தியாக அனுமதி கிடைத்துவிடும் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
 
எங்கோ படித்தது

 
நீலாம்பரி

No comments:

Post a Comment