amudu
A WAY OF LIVING
Search This Blog
Thursday, June 9, 2011
விட்ட இடத்திலேயே.
ஆயிரம் பேர் கொண்ட சபையில்
அர்த்தமாய்த் தெரிபவன் நீ மட்டுமே...
நிழலாய் எப்போதும் என்னுள்
நினைவாகவே நிற்கின்றாய் ....
நீ
படிக்கிறாய் என்றே
கவிதை எழுதுவேன்...
என்னை படித்த அளவு
நீ
கவிதை படித்ததில்லை!
உள்ளங்கசிந்து நினைந்துருகி
கவிதைகள் பல புனைந்தாலும்
எடுத்துச் செல்லவும்
கொடுத்துச் செல்லவும்
உன்னைவிட இங்கு
யாரும் இருந்திடவில்லை
உடையும் நீர்க்குமிழியின்
காற்றைப் போல
நான் உடைந்தாலும்
உள்ளிருப்பது நீயல்லவா..
கவிதை உனக்கு பெரிதல்ல
உன்னை விட
வேறெதுவும் எனக்கு
பெரிதல்ல..
மௌனங்களின் இடைவெளியை
கடக்க வழிகள் பல இருந்தும்
மீண்டும் இணைகின்றோம்
விட்ட இடத்திலேயே......
சலனமேயில்லாமல்
என் தனிமையைக் கண்டு
ரசிப்பவர்களுக்கு மத்தியில்
என் நினைவில்
புதைந்திருக்கும் துயரங்களை
புறந்தள்ளி உன் நினைவுகளை
உள்ளத்தினுள் பொருத்தி
மீண்டும் பொருமுகிறேன்...
எத்தனை முறை
புரட்டிப் பார்த்தாலும்
கிழிந்து போகாத
உன் ஞாபகப் பக்கங்களை
எனது காலத்தின் சிறகுகளோடு
கட்டிவைக்கின்றேன்...
Related Posts :
Tamil Kavithaikal
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment