தமிழன் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?
‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர். ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர். தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
ஜோசப் பிச்சை” என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின்.
இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது.
சிறிது காலத்துக்கு பிறகு அவருடைய குடும்பம் மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது
மெட்ராஸ் பாஷையை அவரைப்போல் எவரும் தத்ரூபமாகப் பேசவே முடியாது. சபாஷ் மீனா படத்தில் மெட்ராஸ் பாஷையில் பேசி அசத்துவார்
சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர்.
சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:
ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன்
சொந்த வாழ்க்கை
நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர். அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.
இறப்பு
சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.
உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ! '' உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... அவள் அப்படித்தான் படத்தில் இளையராஜாவின் அற்புதமான இசை ஜேசுதாஸின் மனதை வருடும் குரல் கங்கை அமரனின் வைர வரிகள் இந்த பாடலை சாகா வரம் பெற்ற பாடலாக உருவாக்கியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.
இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.
தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது.
பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது.
தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.
தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை.
அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது.
தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல.
புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர்.
1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள்.
இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு.
(1960 களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபோதும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சயுடனும், கிறிஸ்தவ மத பீடங்களுடனும் இணைந்து அதை எதிர்த்த ‘கீர்த்திமிக்க’ வரலாறும் அதற்கு உண்டு. யார் கண்டது, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார இலவசக் கல்வியை அறிமுகம் செய்தபோது தமிழரசுக் கட்சி இருந்திருந்தால் அதையும் அவர்கள் எதிர்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் அவர்களுக்கு கல்வி மீது ;பற்றுதல்’. இல்லாவிட்டால் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அரும்பாடுபட்டு உருவாக்கிய யாழ் பல்கலைக்கழகத்தை தமது சொந்த தேவைகளுக்காக அரசியல் சதுரங்க மேடையாக்குவார்களா ? )
Abdul Majeed
யாழ்.பல்கலையின் மற்றொரு பக்கம் !(Whatsup பதிவொன்று)
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயைத் தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்" என்றனர்.
ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம், இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதைச் சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயைப் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒவ்வொரு துண்டைக் கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !
"பார்த்தீர்களா....? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே, நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்க்குணங்களை மாற்றிக் கொள்ளாமல்எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து விழுந்து வணங்கினாலும் எந்தப் பயனும் வந்து விடப் போவதில்லை....??
மாற்றங்கள் மனங்களிலும், குணங்களிலும் வந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.." என்றார் அந்த ஞானி....!!
In an in-depth study of how COVID-19 affects a patient's brain, researchers consistently spotted hallmarks of damage caused by thinning and leaky brain blood vessels in tissue samples from patients who died shortly after contracting the disease. In addition, they saw no signs of SARS-CoV-2 in the tissue samples, suggesting the damage was not caused by a direct viral attack on the brain.
A GUN & A RING, 1999 என கவனத்திற்குரிய திரைப்படங்களைத் தந்த லெனின் M சிவத்தின் மற்றொரு படம் ROOBHA. அவருடைய வழமையைப்போல, சவால் மிக்க மேலும் கடினமான, கவனத்திற்குரியதொரு பரப்பைத் தேர்ந்திருக்கிறார் M சிவம்.
A GUN & A RING போல இதுவும் ஒருவகையில் கனேடியத் தமிழ்ச் சினிமாவே. கனேடியத் தமிழ்ச்சினிமா என்று ஏன் விசேடமாக குறிப்படுகிறதென்றால், கனடாவில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகப்பரப்பின் உள்ளடக்குகளைப் பெரும்பாலும் இந்தப்படமும் திறக்க முற்படுகிறது என்பதால். ஆனால், தனியே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்குள் இது மட்டுப்படுவதில்லை. அப்படி மட்டுப்படுத்தப்படுவதுமில்லை. பதிலாக கனடியச் சூழலின் (Multicultural social environment) யதார்த்தத்தோடு தமிழ் வாழ்வின் உள்ளடக்குகள் காண்பிக்கப்படுகின்றன.
M சிவத்தின் பார்வையே அதுதான். தன்னுள் குறுகிக் கொள்ளாமல், விரிந்து நோக்குவது. அப்படி விரிந்து நோக்கும்போது அவருடைய படங்களில் தமிழ்ப்பரப்பையும் மேவிய கனேடிய அடையாளம் உருவாகிறது. A GUN & A RING, ROOBHA உள்ளிட்ட M சிவத்தின் படங்களின் பொதுக்குணம் இதுவே. இதனால் தமிழ்ப்பரப்பிற்கு வெளியே அல்லது அப்பால் அவருடைய படங்கள் (சினிமா) எழுந்து நிற்கின்றன. இதனால்தான் M சிவம் முக்கியமான கலை ஆளுமையாகவும் கவனத்திற்குரிய இயக்குநராகவும் கணிக்கப்படுகிறார். அவர் வெற்றி பெற்றுச் செல்லும் அடிப்படைகளில் இதுவும் ஒன்று.
ROOBHA வில் M சிவத்துடன் இணைந்து செயற்பட்டிருக்கிறார் எழுத்தாளர் ஷோபசக்தி. ஷோபாசக்தியின் பங்களிப்புகள் கதை, திரைக்கதை உருவாக்கத்திலும் மையப்பாத்திரமொன்றுக்கான நடிப்பிலுமாக உள்ளன. அதோடு இந்தப்படத்தின் தமிழ்ப்பாடலையும் ஷோபாசக்தியே எழுதியிருக்கிறார்.
புனைவெழுத்துகளின் வழியாகச் சாதனைப் பரப்புகளில் உலவிக் கொண்டிருக்கும் முதன்மை எழுத்தாளர் ஷோபாசக்தி. சமகால ஈழத் தமிழ் வாழ்வின், அதனுடைய போராட்டத்தின் அல்லாடல்களின் உட்பரப்பையும் அது சந்திக்கும் நெருக்கடிகளையும் துணிச்சலோடும் அமர்க்களமான கேலிப்படுத்தலோடும் எழுதும் கலைஞர். அதேவேளை M சிவத்தைப்போல அவரும் தமிழ்ப்பரப்பிற்கு வெளியேயும் தன்னுடைய புனைவெல்லையை விரித்துச் செயற்படும் ஆளுமை. தன்னடையாளத்தைப் புனைவுகளின் வழியாக வெளியுலகில் ஏற்றியிருப்பவர். கூடவே புனைவுகளோடு அண்மைய ஆண்டுகளில் சினிமாவிலும் ஷோபாசக்தியின் பங்கேற்பு வியப்பூட்டும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. THEEPAN ஐத் தொடர்ந்து ROOBHA இவற்றுக்கு இன்னொரு அடையாளம், ஆதாரம்.
ஆகவே லெனின் M சிவம், ஷோபாசக்தி என்ற இரு ஆளுமைகளின் கூட்டு விளைவே ROOBHA. கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க் குடும்பமொன்றைச் சேர்ந்த இளம்பருவத் தமிழ்த் திருநங்கை ஒருவரின் வாழ்க்கைச் சிக்கல்களையும் சவால்களையும் திரையில் வடிவமைத்து நம்மிடையே பரப்பி விடுகின்றனர் இருவரும்.
தமிழ்க் குடும்பங்களிலும் அதனுடைய சமூக வெளியிலும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வாழும்போது எதிர்கொள்கிற சிக்கல்களும் சவால்களும் கூட ஏராளமானவை. இதில் வளரிளம் பருவத்துச் சவால்களும் நெருக்கடிகளும் இன்னும் அழுத்தமானவை. இதற்கப்பால் Transgender (திருநங்கை) ஆக இருப்பதென்பதும் வாழ முற்படுதலென்பதும் நினைத்துப் பார்க்கவே முடியாத கடுமைகளைக் கொண்டது. அந்தளவுக்கு கொடுமையும் ஆய்க்கினையும் நிரம்பிய ஆழத்துயர்குழி அது. இது ஈழத்திலோ இந்தியாவிலோ என்றில்லை, தமிழ் மனதோடு புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்தாலும் எந்த வேறுபாட்டையும் கொள்வதில்லை. இதையே பேசுகிறது ROOBHA.
கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ்க்குடும்பத்தின் மூத்த மகன் கோகுல். (அப்படித்தான் ROOBHA வின் அறிமுகம் நிகழ்கிறது). ஆனால், கோகுல் அப்படியிருக்கவில்லை. அப்படியிருக்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரோ தன்னியல்பின்படி ROOBHA வாக, Transgender என்றாக விரும்புகிறார். அதற்கு வீட்டில் (குடும்பத்தில்) இடமில்லை. முக்கியமாக அவருடைய தந்தையால் இது வலிமையாக மறுக்கப்படுகிறது. தந்தையை மீறி வேறு யாரும் குடும்பத்தில் எதையும் தீர்மானிக்க முடியாது. சராசரித் தமிழ்க்குடும்பங்களின் மனநிலையும் வழமைகளும் இப்படித்தான் மரபு அல்லது பாரம்பரியம் என்ற சமூகச் சூத்தரத்தில் கட்டுண்டு இறுகிக் கிடப்பது என்பதால், ரூபா என்ற புதிய முளைக்கு அங்கே இடமில்லாமல் போகிறது.
பிள்ளையின் விருப்பத்தையும் அதன் நிலைமையையும் விட ‘வெளியுலகம்’ என்ற தம்மைச் சுற்றிய “சமூக மனநிலை“யே குடும்பத்தினருக்கு, குறிப்பாகத் தந்தைக்கு முக்கியமாகத் தோன்றுகிறது.
இதனால் வீட்டுக்கு அப்பாலான வெளியைக் கோகுல் - ROOBHA தெரிகிறார். ஆனால், வீட்டின், குடும்பத்தின் இறுக்கமில்லையே தவிர, வீட்டை விட்டு வெளியே வந்தாலும் வெளிச் சூழலும் அத்தனை எளிதாகவும் உவப்பாகவும் இருப்பதில்லை Transgender களுக்கு. இந்த நிலையில் இந்த வெளிப்பரப்பில் ROOBHA எதிர்கொள்கின்ற நெருக்கடிகள், வாய்ப்புகள், சவால்கள் எப்படியாக இருக்கின்றன? என்று காணவும் காண்பிக்கவும் முயற்சிக்கிறது ROOBHA.
வெளிப்பரப்பில் ROOBHA சந்திக்கும் பல்வேறு ஆண்களில் அன்ரனியுடன் கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. அன்ரனியும் ஒரு ஈழத்தமிழ்க் குடும்பத்தவரே. இரண்டு பெண் பிள்ளைகளின் மத்திய வயதை நெருங்கும் தந்தை. காதலித்து திருமணம் முடித்த மனைவி. அவருடைய குடும்பம் இறுக்கமான மரபுச் சிக்கல்களுக்குள் அலைக்கழிந்து கொண்டிருப்பதில்லை என்றாலும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை அது நெகிழ்வுத் தன்மையுடன் அனுசரிப்பது.
அன்ரனிக்கும் ROOBHA வுக்கும் இடையில் அவருடைய Pub இல் நிகழ்கின்ற அறிமுகம் ஈர்ப்பாகி, பால் வேட்கையாக பரிணமிக்கிறது. ஆனால், எதிர்பார்த்தமாதிரி ROOBHA பெண்ணாக இல்லை என்ற ஏமாற்றம், அன்ரனியைத் தடுமாற வைக்கிறது. ROOBHA வைத் தாக்கி விட்டு அந்த உறவை மறுத்து வெளியேறுகிறார். ஆனாலும் பின்னர் அது ஏதென்றறியாத விதியைப்போல வேறுவிதமாகித் தொடர்கிறது.
இதனால் அன்ரனியின் குடும்பம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், ROOBHA க்கும் அன்ரனிக்கும் இடையிலான நெருக்கம், இருவருக்குமிடையிலான பாலுறவின் ஈடுபாடுகள், உருவாகும் அன்பு, அதன் வழியாக உருப்பெறும் மாறாத காதல், அன்ரனியின் மனைவிக்கும் ROOBHA இடையில் நிகழும் நிலைமைகள் என படம் பலவிதமான கோலங்களாலும் இழைகளாலும் நிறைந்துள்ளது.
இரண்டு தமிழ்க்குடும்பங்களின் பிரதிநிதிகளே படத்தின் (கதையின்) மையப்பாத்திரங்கள். ஆனால் ROOBHA வே பிரதான மையம். ஏனைய பாத்திரங்கள் கனடிய பல்லினச் சூழலின் ஊடாட்டமாக நிகழ்வன.
படத்தில் பெண்களே முதற்கவனத்தை ஈர்க்கின்றனர். கோகுலின் (ROOBHA வின்) தங்கை, அவருடைய அம்மா, அன்ரனியின் மனைவி, ROOBHA வைச் சந்திக்கும் ஏனைய பெண்கள் மற்றும் அவருடைய சக Transgender கள் எல்லோரும் யதார்த்த நிலைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பும் புரிந்துணர்வும் இரக்கமும் நேசிப்பும் இவர்களிடமே மேலோங்கித் தொழிற்படுகிறது. கோகுலை Transgender ஆக, ROOBHA வாக அனுசரிப்பதற்கு அவருடைய தாய் புரிந்துணர்வுடனிருக்கிறார். “ROOBHA வாக மாற முடியாது. அப்படி மாறுவதாக இருந்தால் இந்த வீட்டில் இருக்க முடியாது” என்று தந்தை கூறும்போது “அப்பிடியென்றால், அவன்(?) எங்க போறது?” என்று தாய் கேட்குமிடம் தனியே தாய் என்பதற்கும் அப்பால், பெண்ணின் இயல்பான வெளிப்பாடே. ஏனென்றால் இந்த மாதிரி (Transgender) நிலைமையில் உள்ளேயே (வீட்டிலேயே) இடமில்லாமல் போகும்போது வெளியே என்ன நடக்கும், எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடம் என்பதை பெண் நிலையின் வழியாக அவர் அறிவார் என்பதன் வெளிப்பாடிது.
அப்படித்தான் தங்கையும். கோகுலுக்குப் பிரியமான சட்டையை கொடுப்பதும் நேசமுடன் அணுக்கமாக ஆறுதலாக இருப்பதும். இதே மாதிரியே தன்னுடைய கணவரை காதல் வயப்படுத்தியிருக்கிறார் ROOBHA என்று தெரிந்த பிறகும் – கணவர் அன்பையும் காதலையும் செக்ஸையும் வேறோரிடத்தில் பெறுகிறார் என்ற நிலையிலும் ஒரு கட்டத்தில் ROOBHA வைப் புரிந்து கொண்டு இடமளிக்கிற – அதை மதிக்கிற அன்ரனியின் மனைவி.
ஆனால், குடும்பத்தில் ஆண்களின் தீர்மானமும் சமூகத்தில் ஆண்மையச் சிந்தனையும் இவற்றுக்கு நேர்மாறாக உள்ளன. இதையே கோகுலின் தந்தையும் அன்ரனியின் நண்பர்களும் மைத்துனரும் காண்பிக்கின்றனர். ஏன் தொடக்க நிலையில் அன்ரனியிடமும் இதுவே மேலோங்கியிருக்கிறது. அதனால்தான் அவர் தன்னுடைய ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ROOBHA வை அடித்து விடுகிறார்.
இலங்கை, இந்தியா போன்ற பின்னிலை எண்ணப் பண்பாட்டுளவியற் சூழலில் மட்டுமல்ல, வெவ்வேறு கலவைகளைக் கொண்ட (Multicultural social environment) கனேடியச் சூழலிலும் ROOBHA போன்ற Transgender களின் வாழ்க்கை இலகுவானதாக இல்லை. அங்கும் பாலியல் சுரண்டலும் பாலியல் சார்ந்துமே இவர்களின் வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறது ROOBHA. லெனின் M சிவத்தின் அல்லது ROOBHA வின் இத்தகைய வாசிப்புக் குறித்து எதிர்வாசிப்புகள் இருக்கக் கூடும். ஆனாலும் தன் பார்வையில் செறிவையும் அழுத்தத்தையும் அதற்குரிய கலை நேர்த்தியையும் சிவம் கொடுத்திருக்கிறார்.
இந்தப்படம் தமிழ்ச் சூழலில் உண்டாக்கும் விளைவுகளைக் குறித்து ஒரு பார்வையையும் தமிழல்லாத பிற மொழிப் பண்பாட்டுச் சூழலில் இன்னொரு பார்வையையும் பெறும். அப்படி அது கொள்ளும் என்றே நினைக்கிறேன். இரண்டு சூழல்களும் இதை வெவ்வேறு விதமாகவே உணர்ந்து கொள்ளும். தமிழ்ச் சூழலிலும் திருநங்கைகளைக் குறித்த புரிதல்களோடிருப்போரின் பார்வைக்கும் ROOBHA மறுக்கும் தந்தை போன்றோரின் பார்வைக்குமிடையில் வேறுபாடுகளுண்டு. அவர்கள் இதனை வரவேற்பர். இன்று தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டு வரும் Transgender குறித்த உரையாடல்களுக்கும் கவனத்துக்கும் இது உதவும், மேலும் வாய்ப்புகளை உருவாக்கும். Transgender களுக்கு இது மதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற காரணங்கள் இவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஏனையோர் சிலவேளை இதைக் கசந்த நிலையில் பார்க்கவும் வாய்ப்புண்டு. அவர்களுடைய பார்வையில் “இது பண்பாட்டு மீறல் அல்லது சிதைவு, வணிகக் கவர்ச்சிக்கான மிகைப்படுத்தல் அல்லது Transgender ஐப் பற்றிய மிகை மதிப்பீடு எனத் தோன்றலாம். ஆனாலும் சமூக வளர்ச்சியையும் அதற்கான மீறல்களையும் யாராலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே முடியாது. ROOBHA வும் அப்படித்தான். படத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதைப்போல அடக்கும் பண்பாட்டை விட்டும் மீறிச் சிறகை விரிப்பாள்.
படத்தின் ஒளிப்பதிவு, அதன் தரத்தை மேலும் உயர்த்துகிறது. மென்னிருளும் மங்கிய ஒளியும் மென்னிலையிலான கலப்பு வண்ணங்களுமாக திரை அழகொளிர் பரப்பாக விரிக்கப்படுகிறது. ROOBHA க்குக் கொடுக்கும் முத்தத்தில் பாதி ஒளிப்பதிவாளர் Arsenij Gusev க்கும். இதற்கிணையாக கலை இயக்குநரின் (Bettina Katya Lange) உணர்வும் பங்களிப்புமுள்ளது. இசையும் எடிற்றிங்கும் கூட அப்படித்தான், ஒன்றில் ஒன்று பொருந்திக் கலந்திணையும்போதே சிறப்பான சினிமாவொன்று உருவாகும் என்றவாறாக. ஆனால், எடிற்றிங்கில் இன்னும் சற்றுக் கவனமெடுத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அல்லது சில காட்சிகளில் வேறு தன்மைகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் தொடக்கமும் முடிவும் வேறு விதமாக அமைந்திருக்கலாமோ என்றும் படுகிறது.
பாத்திரங்களில் Amrit Sandhu, ஷோபாசக்தி, தேனுகா கந்தராஜா மற்றும் வைரமுத்து சொர்ணலிங்கம் ஆகியோர் கவனத்தில் நிற்கின்றனர். இருந்தாலும் அம்ரித் சந்து கூடுதல் அழுத்தம் பெறுகிறார். எல்லா விதமான ரூபங்களிலும் அவர் தாவிச் செல்லும் அழகு வியப்பூட்டுவது. அவருடைய தோற்றமும் விரியும் ஆற்றலும் சிறப்பு. இணையாகச் சென்று கொண்டிருக்கிறார் ஷோபாசக்தியும்.
இந்தப் படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த Warren Sinnathambyக்கு பாராட்டுகளும் நன்றியும். இந்த மாதிரி சர்ச்சைக்குரிய - மாற்றான - விடயங்களைப் பற்றிப் பேசும் சினிமாவிற்குப் பங்களிக்க எல்லோரும் முன்வர மாட்டார்கள். அதுவும் நம்முடைய தமிழ்ச்சூழலில். Warren Sinnathamby மாற்றுச் சினிமாவையும் அதை முன்னெடுப்போரையும் ஆதரித்து ஊக்கமளிப்பதற்கே Next Productions, ஐ உருவாக்கியிருக்கிறார். அதனுடைய பங்களிப்பின் எல்லைகள் மேலும் விரியும் என எதிர்பார்க்கிறேன்.
காமத்தில் தொடங்கிக் காதலில் முடியும் வாழ்வு என்று ROOBHA வைச் சாராம்சப்படுத்திச் சொல்லலாம். வழமைகளை மீறிய Transgender லின் அழகும் அம்சமும் அச்சம் தவிர்க்கக் கோருவன.
ராமாயணத்தில் எந்த பகுதியை படித்தால் உடனடியாக ராமனின் அருள் கிடைக்கும்
ராமனின் அருள் கிடைக்க ராமாயணத்தை படித்தே ஆகவேண்டும் என்று அவசியமில்லை மனப்பூர்வமாக ராமனை நினைத்தாலே அவனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் மிக சிறந்த ராம பக்தர்களான அனுமனும் சபரியும் ராமாயணத்தை படித்தா அருள் பெற்றார்கள் ராமனை நினைத்தாலே பக்தியின் ஊற்றுக்கண் தானாக திறக்கும்
இருந்தாலும் நமது பெரியவர்கள் ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிப்பதனால் வாழ்வில் பல நலன்களையும் பல வளங்களையும் பெறலாம் என்று சொல்கிறார்கள் அப்படி பெற்ற சிலரையும் நான் சந்தித்து இருக்கிறேன் சுந்தர காண்டம் முழுக்க முழுக்க ஒரு ராம பக்தனின் அதாவது அனுமனின் புகழ்பாடும் பகுதியாக இருந்தாலும் ராம சிந்தனையானது எவ்வளவு உயர்ந்த மகோன்னதமான நற்பேறை தரும் என்பதை தத்துவார்த்த அடிப்படையில் விளக்குகிறது கம்ப இராமாயண சுந்தர காண்டபகுதியாக இருந்தாலும் சரி வால்மிகியின் சுந்தர காண்ட பகுதியாக இருந்தாலும் சரி அது நமக்கு ராமனை பரிபூரணமாக உணர்த்துகிறது எனவே எல்லா காண்டங்களையும் படிப்பது சிறப்பு என்றாலும் சுந்தர காண்டம் படிப்பது வாழ்க்கை துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும் .
கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்..
இசையமைப்பாளர் ஷியாம் "மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்" பாட்டைக் கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம்.
இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் "பொன்னே பூமியடி" அந்தக் காலத்து இலங்கை வானொலி நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம். கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்.1954-இல் கிருத்தவக் கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தபோது தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய இசையைக் கற்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் இவரும் வகுப்புத் தோழர்கள். இசை மீது ஆர்வத்தால் சட்டப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரையுலகில் நுழைந்தார். அன்றைய பிரபல இசையமைப்பாளர்களான சி.என்.பாண்டுரங்கம், எஸ்.தக்ஷிணாமூர்த்தி ஆகியோருடனும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோருடனும் உதவியாளனாக இருந்து இசையறிவை வளர்த்துக் கொண்டேன். இவர் தனியாக இசையமைத்த முதல்படம் “அம்மா-அப்பா”. இப்படம் நடிகர் ரவிச்சந்திரன் – ஷீலாவின் சொந்தப்படம். பிறகு ஷீலாவின் மூலமாக மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
இந்தி இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியிடம் பல படங்களுக்கு உதவியாளனாகப் பணிபுரிந்ததனால் இவரது இசையமைப்பில் இந்தி மெட்டு சாயல்கள் காணப்படும்.
ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும்.
சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு.
மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.
எஸ்.பி.ஷைலஜா, கோவை முரளி, ராஜ்குமார் பாரதி, ஹரன் மற்றும் சுஜாதா போன்ற பாடகர், பாடகியர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஐதராபாத்தில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘The Naughty Pair” படத்திற்கு இசையமைப்பாளர் இவரே.
இவரது இசையமப்பில் 1972-இல் உருவான ‘கருந்தேழ் கண்ணாயிரம்’ என்ற மாடர்ன் தியேட்டர்சாரின் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன் ஆகியோர் இணைந்து பாடிய ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்ற பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1976-இல் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி இணைந்து பாடிய ”நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்” என்ற பாடலும் பிரபலம்.
இதே ஆண்டில் வெளிவந்த மனிதரில் இத்தனை நிறங்கள் படத்தில் இடம்பெற்ற ‘மழைதருமோ என் மேகம்’, பொன்னே பூமியட என்ற பாடலின் மெட்டினை ஒரு மலையாளப் படத்திற்கும் பயன்படுத்தியிருந்தார். 1979-இல் ‘பஞ்சகல்யாணி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இதே ஆண்டில் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒருகணம் மயங்கி நின்றுவிட்டான் என்ற பாடல் அனைவரையும் மயங்கச் செய்தது. இதே ஆண்டில் வெளிவந்த ‘தேவதை’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘தேவைகள்’ முதலிய படங்களின் பாடல்களும் மிகவும் வரவேற்பைப் பெற்றன.
‘மற்றவை நேரில்’ [1980], ‘வா இந்தப் பக்கம்’ [1981], ’இதயம் பேசுகிறது’ [1982], குப்பத்துப்பொண்ணு [1982],’கள்வடியும் பூக்கள்’, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது [1983], நன்றி மீண்டும் வருக, குயிலே குயிலே [1984] மலையாளத்தில் இப்படம் கூடினெத்தேடி என்ற பெயரில் வெளியானது, குழந்தை ஏசு [1984], நலம் நலமறிய ஆவல் [1984], சந்தோஷக்கனவுகள் [1985], விலாங்கு மீன் [1985], பாசம் ஒரு வேஷம் [1987],விலங்கு[1987], சலனம் [1987], ஜாதிப்பூக்கள்[1987], கல்லுக்குள் தேரை [1987] போன்ற படங்கள் ஷியாமின் இசை ஞானத்தை வெளிப்படுத்திய படங்கள்.
இவருக்கு மனைவியும் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் என 3 குழந்தைகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவிலும் மகள் பாலக்காட்டிலும் உள்ளனர்.
18.11.1983 ஜெமினி சினிமா இதழிலிருந்தும், இலங்கை வானொலி வர்த்தக சேவை இன்னிசைச் சுவடிகள் நிகழ்ச்சியிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.
By mapping the meanings of the words used to communicate emotions across more than one-third of the planet’s spoken languages, researchers found that there is significant variation in how emotions are expressed across cultures.
The authors examined nearly 2500 languages to determine the degree of similarity in linguistic networks of 24 emotion terms across cultures . There were low levels of similarity, and thus high variability, in the meaning of emotion terms across cultures.
Similarity of emotion terms could be predicted on the basis of the geographic proximity of the languages they originate from, their hedonic valence, and the physiological arousal they evoke.
Cultural variation in the meaning of emotions
The results of this latest research highlight both
biological and cultural processes that influence the way we think about and
experience emotions. The cross-cultural variation in the meaning of emotions
suggests that people around the world may experience emotions differently. For
example, while the concept of love was more related to happy in Indo-European
languages, it was more related to pity in Austronesian languages. And while the
concept of anxiety was more related to fear in Tai-Kadai languages, it was more
often paired with grief in Austroasiatic languages.
The colexification patterns of emotions depended on the
geographic proximity of the languages. Those language families that were closer
to each other tended to group emotion concepts more similarly than those
increased opportunities for contact between speakers of those languages—through
languages that were far apart. According to the researchers, this may be due to
their emotions.
trade, migration, or shared ancestry—which, in time, influenced the way they conceptualized
Universal structure in the meaning of emotions
The study also found universals in the way people mapped
meaning to emotions across languages. For example, in almost all languages,
positively valenced (pleasant) emotions belonged to different colexification
communities than negatively valenced (unpleasant) emotions, and there was a
activation. In other words, “all humans appear to feel and express feelings of
similar separation between emotions that were high or low in physiological
author Joshua Conrad Jackson, since valence and arousal highlight biological
positivity versus negativity and feelings of arousal versus calm,” says lead
A study published in the journal Neuropsychologia has shown that religious fundamentalism is, in part, the result of a functional impairment in a brain region known as the prefrontal cortex. The findings suggest that damage to particular areas of the prefrontal cortex indirectly promotes religious fundamentalism by diminishing cognitive flexibility and openness—a psychology term that describes a personality trait which involves dimensions like curiosity, creativity, and open-mindedness.
“We need to understand how distinct religious beliefs are from moral, legal, political, and economic beliefs in their representations in the brain, the nature of conversion from one belief system to another, the difference between belief and agency, and the nature of the depth of knowledge that individuals use to access and report their beliefs.” – Grafman
This can't be true of all followers. That brain damage came first and then the fundamentalism. But could being raised or living in a family/community that puts great social pressure to conform to such beliefs shape the brain to a similar pattern? High use of the neural pathways in the belief system making a stronger neural path and unused paths for anything contradictory making it neurologically difficult to question authority? The brain can shape the belief but in an undamaged brain does the belief and frequent reinforcement shape the brain in a way that makes it difficult to question authority?
I know several people who were raised in such households and did give up their blind faiths when going out in the world showed them that many people do have other beliefs and often happier, more successful and have good integrity and character. They escaped the bonds of early imprinting.
For those who refuse to question or question and return to their core beliefs, could their brains have been shaped by exposure to the teachings, rituals, services, and come to resemble that of those who started with brain damage
போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.
அது பேப்பர் பண்டல் இல்ல... எல்லாமே கிராமபோன் இசைத்தட்டுகள். தமிழ், ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, துளுனு 30 ஆயிரத்துக்கு மேல இருக்கு..!’’ சிரிக்கிறார் இ.சந்தானகிருஷ்ணன். சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் இவர், செக்ரட்டேரியட்டில் ஜாயிண்ட் செக்ரட்டரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் வீட்டு மாடி அறையை முழுவதுமாக தன் சேகரிப்புக்காகவே ஒதுக்கியிருக்கிறார். கிராமபோன் ரெக்கார்ட்ஸ், கேசட்ஸ், பழைய சினிமா பத்திரிகைகள்... என அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.‘‘பூர்வீகம் இதே ஊர்தான். மூணு வயசுல அப்பா தவறிட்டார். அம்மாதான் வளர்த்தாங்க. மூணாவது படிக்கிறப்பவே சினிமா பைத்தியமாகிட்டேன்! எங்களூர்ல அப்ப டூரிங் டாக்கீஸ் கிடையாது.
வானொலில சினிமா பாட்டு வாரத்துக்கு ஒருமுறை வரும். இந்தச் சூழல்ல எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தெய்வமா தெரிஞ்சார்! தினமும் கிராமபோன்ல சினிமா பாடல்களை ஓடவிடுவார். சத்தம் கேட்டதுமே அவர் வீட்டு திண்ணைல போய் உட்கார்ந்துப்பேன். அம்மாவுக்கு பயம் வர ஆரம்பிச்சது. இப்படியே போனா நான் கெட்டுடுவேன்னு என்னை வடசென்னைல இருந்த எங்க மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவர் ரொம்பவே கண்டிப்பானவர். எப்பவும் பாடப்புத்தகமும் கையுமா இருக்கணும். இல்லைனா தோலை உரிச்சுடுவார். திருநின்றவூர்ல இருந்தப்பவே சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படியிருக்கிறப்ப வடசென்னை வந்த பிறகு சும்மா இருப்பேனா? மாமா வீட்டுக்கு எதிர்லயே டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கதான் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாச்சு. போதாதா? சினிமா மோகமும் வந்தது...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணன், இதன் பிறகே இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மாமா வீட்டுக்குப் பக்கத்துல ஆங்கிலோ இந்தியர்கள் வசிச்சாங்க. அங்க என்னை மாதிரியே ஒரு பையன் ராக் அண்ட் ரோல் பாடலை கிராமபோன்ல கேட்பான்.
தினமும் அங்க போயிடுவேன். அதே மாதிரி ‘ஆவாரா’, ‘பர்சாத்’ இந்திப் படங்களை எல்லாம் டூரிங் டாக்கீஸ்ல திரையிடுவாங்க. ஒண்ணும் புரியாது. ஆனாலும் பாட்டுக்காகவே பார்ப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மார்க்கெட் போவேன். அது பழைய மார்க்கெட். ஒரு பெரிய கூடைல மொத்தமா ரெக்கார்ட்ஸை கொண்டு வந்து கடைகள்ல விநியோகம் செய்வாங்க. அதை வேடிக்கை பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது. இந்த பழைய மார்க்கெட் எரியற வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் அங்க போயிருக்கேன். புதுப்பிச்ச பிறகும் வேலைல இருந்து ஓய்வு பெறும் வரை மாலைல அங்க போயிடு வேன். கைல ஏதாவது ரெக்கார்ட் வாங்காம வீட்டுக்கு வந்ததே இல்ல! 1972 வரை கிராமபோன் ரெக்கார்ட்ஸ் புழக்கத்துல இருந்தது. அப்புறம் நிறுத்திட்டாங்க. ஆனா, எல்லா மாவட்டங்கள்லயும் புரோக்கர்ஸ் இருந்தாங்க. தூத்துக்குடி மணி, மதுரை பாலு, காரைக்குடி மகேஸ்வரன்னு பெரிய பட்டியலே உண்டு. அவங்க வழியா ரெக்கார்ட்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். வார இறுதியானா போதும்... ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு பஸ் ஏறிடுவேன். அங்க புரோக்கர்ஸ் எனக்காக கைல ரெக்கார்ட்ஸோட காத்திருப்பாங்க. தமிழ்ப் பாடல்களை இப்படி வாங்கினேன். இந்திப் பாடல்களை மும்பை, தில்லிக்கு பறந்தும்; தெலுங்குப் பாடல்களுக்கு ஆந்திரா போயும் வாங்குவேன்.
இப்படித்தான் ‘சுபோதயம்’ தெலுங்குப் பட ரெக்கார்ட் வாங்க திருப்பதி, விஜயவாடா, குண்டூர்னு அலைஞ்சேன். கே.வி.மகாதேவன் இசைல அந்தப் படத்துல எல்லா பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுவும் பி.சுசீலா பாடின ‘ஆசிந்த நீகேணடா...’வை நாளெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். எங்க திரிஞ்சும் அந்தப் பட ரெக்கார்ட் கிடைக்கலை. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு பெங்களூர்ல இருந்து ராஜா என்கிற புரோக்கர் ஒரு பெட்டி நிறைய தெலுங்கு, கன்னட ரெக்கார்ட்ஸை கொண்டு வந்தார். அதை அப்படியே வாங்கி பிரிச்சுப் பார்க்காம வீட்ல வைச்சிருந்தேன்.
ஒரு மாசம் கழிச்சு பெட்டியைத் திறந்தா... முதல் கிராமபோன் ரெக்கார்டே ‘சுபோதயம்’! அந்த நொடில எனக்குள்ள பூத்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல! இப்படி நாம சின்சியரா தேடறது எதிர்பாராத வகைல கிடைக்கும்...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணனிடம் திரைப்படப் பாடல்கள் தவிர பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் கொண்ட ரெக்கார்ட்ஸும் இருக்கின்றன. ‘‘மதன்மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ஜான் எஃப். கென்னடி... இப்படி பல தலைவர்களோட பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்ஸ் என் சேகரிப்புல இருக்கு.இதுல என்ன சிறப்புன்னா... அண்ணல் அம்பேத்கர் ஆர்கெஸ்ட்ரா அமைச்சுப் பாடின பாடல்கள், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் ஜாஸ் இசை, எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆல்பம், இரண்டாம் உலகப் போர் காலத்துல பிரெஞ்சு டெலிகிராஃபிஸ்ட் பதிவு செஞ்ச அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சு, ஹிரோஷிமால வெடிகுண்டு போடப்பட்டதும் ஏற்பட்ட சத்தம், அடால்ஃப் ஹிட்லர் போரை அறிவிச்சு ஆற்றிய உரை... இப்படி பல பொக்கிஷங்கள் இருக்கு...’’ என்று கண்கள் விரிய விவரித்த சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் சேகரிப்பையும் விரிவுபடுத்தியுள்ளார்.
‘‘கேசட்ஸ், விசிஆர், டிவிடினு என் தேடலும் சேகரிப்பும் நிற்கவே இல்ல. மவுனப்பட காலத்துல வெளியான படங்கள்ல சிலதும் என் சேகரிப்புல இருக்கு. அதேமாதிரி சினிமா பத்திரிகைகள். இப்ப பழைய புகைப்படங்களையும் ஃபிலிம் ரீல்ஸையும் டிஜிட்டலைஸ் செய்துட்டு வரேன். என்னை மாதிரியே என் சின்ன பெண்ணுக்கும் இதுல ஆர்வமிருக்கு. அதனால எனக்கு அப்புறம் அவங்க இதைப் பார்த்துப்பாங்க. இப்பவே ஆய்வுக்காக பலரும் என்னைத் தேடி வர்றாங்க. ஒரு டிரஸ்ட் அமைச்சு இதை எல்லாம் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தற மாதிரி செய்யணும்... பார்க்கலாம்என்கிறார் சந்தானகிருஷ்ணன். கும்குமம் இதழில் இருந்து பெறப்பட்டவை .