ஜீவசமாதி என்றால் என்ன?
சமாதி என்றால் என்ன?
சமாதிநிலை என்றால் என்ன ?
பொதுவாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 காலம் அதற்கு தேவையான சுவாச எண்ணிக்கையுடன் தான் மனிதன் பிறக்கிறான் . ஆனால் அறிவியல் வளா்ச்சி மாசு உணவுபழக்கம் என்று பல காரணங்களால் 120 வருடம் வாழும் வயதுடைய நாம் 60 வருடங்கள் நலமுடன் வாழ்வதே அறிதாகி விட்டது .
ஆனால் சித்த நிலையில் உள்ளவா்களோ தங்கள் சுவாசத்தின் அளவை குறைத்தோ அல்லது நிறுத்தியோ தங்கள் வாழ்நாட்களை அதிகாித்து கொள்கின்றனா் அவ்வாறு வாழ்ந்த சித்தா்கள் தங்கள் உடலுக்கு சிறிது காலம் ஒய்வு கொடுப்பதற்காகவே இந்த ஜீவ சமாதி முறையை கையாண்டனா் .
நாம் இறந்தால் நம்மை எாிக்கவோ புதைக்கவோ செய்வாா்கள் ஆனால் சித்த நிலையில் உள்ளவா்களை இதுவரை எாித்ததாக இல்லை காரணம் அவா்கள் என்நேரமும் உடலுடன் வருவாாகள் என்பதாலேயே .
சித்த நிலையில் உள்ளவா்கள் பல காயகற்ப முறைகளில் தங்கள் உடலை வாழும்போதே பதப்படுத்தியவா்கள் ஆகையால் நீாில் கிடந்தாலும் பூமிக்கு அடியில் புதைத்தாலும் நெருப்பில் சுட்டாலும் அவா்களில் உடலுக்கு ஒன்றும் ஆகாது .
இவ்வாறு தண்ணீாில் ஜலசமாதி சுடா்சமாதி பூமிசமாதி காற்றுசமாதி என்ற நிலைகளில் தங்கள் உடலை தாங்களே பதபடுத்தி கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பொழுது மீண்டும் அந்த உடலோடு இணைந்து வருவது தான் ஜீவ சமாதி .
ஜீவனோடு தன்னை சமாதியாக்கி கொண்டு பின் சமாதி நிலையில் உள்ள உடலோடு ஜீவனை எப்போது வேண்டுமானாலும் உட்செலுத்துதல் ஆகும் .
ஆனால் இறந்த பின் அவா்களின் உடலை நாம் சமாதி செய்தால் அது ஜீவ சமாதி அல்ல சமாதி ஆகும் அவா்கள் மகானாக இருப்பின் ஆன்மாவிா்க்கு பலம் இருக்கும் உடலோ பயனற்று போய்விடும். இது சமாதி எனப்படும் .
சமாதி நிலை என்பது லம்பிகா யோகம் போன்ற அறிய யோகங்களை முறையாக பயின்று அதை நடைமுறை படுத்தும் போது பயன் படுத்துபவா் உயிருடன் தான் இருப்பாா் ஆனால் நமக்கு அவா் இறந்து விட்டது போல் தொியும் காரணம் அவா்கள் இதயம் நிமிடத்திற்கு ஒருமுறைதான் துடிக்கும் காற்றே அவா்களுக்கு உணவு மும்மலம் அறுத்தவா்கள் இவ்வாறு இருப்பவா்களை சமாதிநிலையில் இருப்பவா்கள் என்று கூறுவாா்கள் .